Friday, 15 December 2017

வாருங்கள் திக்ரு செய்வோம்

*➖➖திக்ரு செய்வோம்➖➖*
‼‼‼‼‼‼‼‼‼
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நவீன கலாச்சார மாறுபாட்டால் நேரத்தை பயனுள்ள வகையில் கழித்தல் என்பது அரிதாகிவிட்டது.

நம்முடைய இம்மை மற்றும் மறுமை வாழக்கைக்கு பயன்படும் காரியங்களை செய்வது மிக,மிக குறைந்து வருகிறது. இதை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காக திக்ரு செய்வோம் என்ற தலைப்பில் திக்ரின் நன்மை மற்றும் நினைவில் கொள்ள இலகுவான சில திக்ருகளையும் குறிப்பிடுகிறோம்.

*திக்ரின் அவசியம்:*
நாம் அனைவரும் இறைவனின் அடியார்கள், அவனே அனைத்து ஆற்றல்களும் பெற்றவன் என்பதை எல்லா நேரங்களிலும் உணர்த்த திக்ருகள்  அவசியமானதாகும்.மேலும் நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் பெற திக்ருகள் மிகவும் பயன்படுகிறது.

*திக்ரு செய்யாதவன் பிணத்திற்கு சமம்:*
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றுகின்றவரின் நிலை உயிருள்ளவரின் நிலைக்கும், தம் இறைவனை நினைவு கூர்ந்து போற்றாதவரின் நிலை உயிரற்றவரின் நிலைக்கும் ஒத்திருக்கிறது.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி)  நூல்: புகாரி 6407

*இறைவன் உங்களை நினைக்க வேண்டுமா?*
எனவே என்னை நினையுங்கள்! நானும் உங்களை நினைக்கிறேன்.எனக்கு நன்றி செலுத்துங்கள்! எனக்கு நன்றி மறக்காதீர்கள்!
(அல்குர்ஆன்: 2:152)

*உள்ளம் அமைதி பெறவேண்டுமா?*
நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.(அல்குர்ஆன்: 13:28)

*சப்தமிட்டு திக்ரு செய்யக்கூடாது:*

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும்,சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!   
(அல்குர்ஆன்: 7:205)

*அதிக பலன்தரும் சிறிய  திக்ருகள்:*
-------------------------
*1.நாவிற்கு எளிதானது மறுமையில் தராசில் கனமானது:*
سُبْحَانَ الْلَّهِ وَبِحَمْدِهِ ... سُبْحَانَ الْلَّهِ الْعَظِيْمِ
சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி,சுப்ஹானல்லாஹில்அழீம்
பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதிசெய்கின்றேன்.
புகாரி:6406

*2.கடல் நுரையளவு பாவம் மன்னிக்கப்பட வேண்டுமா?*
سُبْحَانَ الْلَّهِ وَبِحَمْدِه
சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி
ِ – ஒரு நாளில் 100 முறை  கூறினால்
அவரது பாவம் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)       
நூல்: புகாரி 6405

*3.ஒரு துஆவில் மூன்று பலன்கள்:*
لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ  شَيْءٍ قَدِيْرٌ
தினமும் 100 முறை ஓதினால்
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு, லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து,வஹு அலா குல்லி ஷையின் கதீர்.
இதன் பொருள்:
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்குரியதே. புகழும் அவனுக்குரியதே. அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
1.நூறு நன்மை எழுதப்படும்.
2. நூறு தீமை அழிக்கப்படும்.
3.மாலை வரை ஷைத்தானிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.                  
புகாரி:3293

*4. சொர்கத்தின் கருவூலமான வார்த்தை:*
لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله
லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்
அல்லாஹ்வின் உதவியன்றி பாவங்களிலிருந்து விலகிச் செல்லவோ, நல்லறங்கள் புரிய வலிமை பெறவோ மனிதனால் இயலாது.                                        புகாரி:6409

*5. சொர்கத்தின் எட்டு வாசல் உங்களுக்காக திறக்கப்பட வேண்டுமா?*
*உளுச் செய்த பின்னர்*
أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُ اللهِ وَرَسُوْلُهُ
அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(B]துல்லாஹி வரஸுலுஹு
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன்.   
ஆதாரம்: முஸ்லிம் 345.

Sunday, 12 November 2017

மவ்லூது ஓதுவோம்

மௌலித் ஓதுவதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் ...

குறிப்பு :- இந்த பதிவை பெறுபவர்கள் அனைவரும் கட்டாயம் அனைத்து ஹதீஸ்களையும் நன்றாக வாசித்து ஆதார நூல்கள் மற்றும் இலக்கங்களையும் மனதில்கொள்ளவும் ...

***********************************************************************************

(458) கவி (மௌலித்) மூலம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்து பாடுவதற்காக ஆதாரங்கள்
*********************************************************************************
♦கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவி பாடியதற்க்குறிய ஆதாரம்
ஜுன்தப் இப்னு சுஃப்யான்(ரலி) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் போர் ஒன்றில் பங்கு கொண்டபோது அவர்களின் விரலில் (காயம் ஏற்பட்டு) ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அப்போது அவர்கள், “நீ இரத்தம் சொட்டுகிற ஒரு விரல் தானே? நீ அடைந்த (பழு)தெல்லாம் இறைவழியில் தானே!” என்று (ஈரடிச் சீர் பாடல் (கவி) போன்ற வடிவில்) கூறினார்கள்.
(ஷஹீஹ் புஹாரி 2802)

.
♦நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் மறைவின் பின் ஸஹாபாக்கள் கவி மூலம் புகழ்து அவர்களை பாடியதற்க்குறிய ஆதாரம்
ஸயீத் இப்னு முஸய்யப்(ரஹ்) அறிவித்தார். மஸ்ஜிதுந் நபவீயில் (நபித் தோழரும் கவிஞருமான) ஹஸ்ஸான் இப்னு ஸாபித்(ரலி) கவிபாடிக் கொண்டிருக்க, உமர்(ரலி) அங்கு வந்தார்கள். (ஹஸ்ஸான்(ரலி) பள்ளிவாசலில் கவிபாடுவதை உமர்(ரலி) கண்டித்தார்கள்) ஹஸ்ஸான்(ரலி), “நான் இந்தப் பள்ளிவாசலில் உங்களை விடச் சிறந்தவர் (நபி(ஸல்) அவர்கள்) இருக்கும் போதே கவிபாடிக் கொண்டிருந்தேன்” என்று கூறிவிட்டு, அபூ ஹுரைரா(ரலி) பக்கம் திரும்பி, “அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன். (என்னிடம்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள், “(ஹஸ்ஸானே!) என் சார்பாக (எதிரிகளின் வசைக் கவிகளுக்கு) நீங்கள் (கவிகளாலேயே) பதிலளியுங்கள். இறைவா! ஹஸ்ஸானுக்கு ரூஹுல் குதுஸ்(தூய ஆத்மா வானவர் ஜிப்ரீல் அவர்களின்) மூலம் துணை புரிவாயாக!” என்று கூறியதை நீங்கள் செவியுற்றிருக்கிறீர்களா?“ என்று கேட்டார்கள். அதற்கு அபூ ஹுரைரா(ரலி), “ஆம் (செவியுற்றிருக்கிறேன்)” என்று பதிலளித்தார்கள்.
(ஷஹீஹ் புஹாரி 3212)

.
♦ பள்ளிவாசல்களிலும் கவி மூலம் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை புகழ்து பாடுவதற்காக ஆதாரம்
கஃபு இப்னு ஜீஹைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளிவாசலில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்து கவி பாடினார்கள்
அறிவிப்பாளர் இப்னு ஜத்ஆன் ரலியல்லாஹு அன்ஹு
(ஆதாரம் ஹாகிம் 6555)

.
♦வீடுகளில் கவி (மௌலித்) பாடுவதற்காக ஆதாரம்
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது
ஒரு முறை நான் ஆயிஷா நாயகியிடம் சென்றேன் அப்போது அவர்களுக்கு அருகில் ஹஸ்ஸான் பின் ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இருந்து கவி பாடிக்கொண்டும் தம் பாடல்களால் ஆயிஷா நாயகி அவர்களை பாராட்டிக்கொண்டுமிருந்தார்கள்
(ஆதாரம் முஸ்லிம் 1901)

.
♦திருமண வீட்டில் கவி (மௌலித் பாடுவதற்காக ஆதாரம்
ஆயிஷா(ரலி) அறிவித்தார் நான் ஒரு பெண்ணை அன்சாரிகளில் ஒருவ(ருக்கு மணமுடித்து வைத்து அவளை அவ)ரிடம் அனுப்பிவைத்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், “ஆயிஷாவே! உங்களுடன் பாடல் (பாடும் சிறுமியர்) இல்லையா? ஏனெனில், அன்சாரிகளுக்குப் பாடலென்றால் மிகவும் பிடிக்குமே““ என்றார்கள்
(ஷஹீஹ் புஹாரி 5162)

.
♦கவி (மௌலித்) பல தடவைகள் பாடுவதற்காக ஆதாரம்
ஷரீத் பின் சுவைத் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களது வாகனத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், ”உமய்யா பின் அபிஸ்ஸல்த்தின் கவிதைகளில் ஏதேனும் உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். நான் ”ஆம் (தெரியும்)” என்றேன். ”பாடு” என்றார்கள். உடனே நான் ஒரு பாடலைப் பாடினேன். ”இன்னும் பாடு” என்றார்கள். பிறகு இன்னொரு பாடலைப் பாடினேன். ”இன்னும் பாடு”என்றார்கள். இவ்வாறே அல்லாஹ்வின் தூதருக்காக நூறு பாடல்களைப் பாடிக்காட்டினேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் ஷரீத் பின் சுவைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தமக்குப் பின்னால் தமது வாகனத்தில் அமரச்செய்தார்கள்...” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. - மேற்கண்ட ஹதீஸ் ஷரீத் பின் சுவைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில் ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னிடம் உமய்யா பின் அபிஸ் ஸல்த்தின் கவிதைகளைப் பாடுமாறு கூறினார்கள்” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன. மேலும் ”உமய்யா பின் அபிஸ்ஸல்த் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாகக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ”அவர் தமது கவிதையி(ன் கருத்துகளா)ல் இஸ்லாத்தைத் தழுவும் அளவுக்கு வந்துவிட்டார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.
(ஸஹீஹ் முஸ்லிம் 4540)

.
♦கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை புகழ்து பாடினால் மலக்குமார்களின் பாதுகாப்பு கிடைக்கும் என்பதற்குறிய ஆதாரம்
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு சொன்னார்கள் நீங்கள் அல்லாஹ்விற்றாகவும் அல்லாஹ்வின் தூதருக்காகவும் கவி மூலம் பாடும் காலமெல்லாம் பரிசுத்த ஆன்மாவான ஜிப்யீல் (அலை) அவர்கள் உங்களைப் பலப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்
அறிவிப்பாளர் ஆயிஷா ரலியல்லாஹுஅன்ஹா
(ஆதாரம் முஸ்லிம் 4545)

.
♦கூட்டமாக சேர்ந்து கவி பாடுவதற்கான ஆதாரம்
நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது பெண்களும் சிறுவர்களும் குழந்தைகளும் பின்வரும் பாடலைப் பாடினார்கள். ” ”தலஅல் பத்ரு அலைனா மின் தனிய்யாதில் வதாயீ வஜபஷ்ஷுக்ரு அலினா மாதஆ லில்லாஹி தாயீ”
(ஆதாரம்: தலாயிலுன் நுபுவ்வா:2015)

.
♦மேடை போட்டு கவி பாடுவதற்கான ஆதாரமும், பள்ளியில் பாடுவதற்காக ஆதாரமும்
ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) ‘நபியே நாயகமே! உங்களைப் போன்ற அழகான எந்த ஒரு மனிதரையும் எனது இந்த இரு கண்களும் கண்டதேயில்லை. உங்களைபோன்ற ஒரு அழகான ஒருவரை எந்தப் பெண்ணும் பெறவுமில்லை எனப் பாடியுள்ளார்கள்.’ கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு பள்ளியில் மேடை போட்டுக் கொடுத்தார்கள். அம்மேடையில் ஸஹாபி அவர்கள் ஏறிநின்ற வண்ணம் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை புகழ்ந்து பாடுவார்கள். இன்னும் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களை முஷ்ரிகீன்கள் இகழ்வதை தனது பாடல்களினால் முறியடிப்பார்கள். கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் ஹஸ்ஸான் இப்னு தாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்குப் புகழும் காலமெல்லாம் (முஷ்ரிகீன்களின் வசை மொழிகளை தனது பாடலைக்கொண்டு முறியடிக்கும் காலமெல்லாம் ஜிப்ரீல் (அலைஹிஸ்ஸலாம்) மூலம் ஹஸ்ஸான் இப்னு தாபிதிற்கு உதவி செய்வாயாக! எனப்பிரார்த்தித்தார்கள். அறிவிப்பவர் ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)
(நூல் - புகாரி எண் 453, முஸ்லிம் 4545. மிஷ்காத் )

.
♦கவி பாடினால் நன்மை, கூலி கிடைக்கும் என்பதற்குறிய ஆதாரம்
ஒரு சமயம் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைமறுப்பாளர்களே! முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களைக் குறைவுப்படுத்தி கவி பாடுகிறீர்கள். அதற்கு பதிலாக அன்னவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடம் உண்டு. ஹதீஸ் தொடர் நீண்டுசெல்வதால் சுருக்கிக்கொள்கிறேன். தேவையெனில் பார்க்கவும் (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)
நூல்: முஸ்லிம் எண்: 4545

.
♦நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை புகழ்து பாடுபவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்குவதற்குறிய ஆதாரம்
கஃப் இப்னு ஜுஹைர் (ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓதிய மவ்லித் அவர்களுக்கு அன்பளிப்பாக கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு போர்வை வழங்கியது பற்றிய தெளிவாக இந்த நீண்டகு ஹதீஸ் தொடரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது பார்க்கவும்.
(நூல்: ஹாகிம் எண்: 6558, அல்பிதாயா வன்னிஹாயா)
♻ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) அறிவித்துக் கொண்டிருப்பீராக.
(அல்குர்ஆன் : 93:11)
எனவே இறைவன் நமக்கு தந்த மாபெரும் அருட்கொடை ரஹ்மத் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான்
என்பதை அல்லாஹ் குர்ஆனில் தெளிவாக கூறியுள்ளான் அந்த அடிப்படையில் அந்த அருட்கொடை இவ்வுலகிற்க்கு ரபிஉல் அவ்வல் மாதம் கிடைத்த காரணத்தினால்தான்
இறைவன் வழங்கிய அருட்கொடை, ரஹ்மத்தான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்களை கவி மூலம் ஸஹாபாக்கள் காட்டிய அழகிய முன்மாதிரிகளை மனதில் கொண்டு மேலே கூறப்பட்ட குர்ஆன் வசனத்தின் பிரகாரம் மக்களிடம் கவி மூலம் புகழ்து பாடி சொல்லிட்காட்டி மகிழ்ந்து பாடுவோம்

Friday, 27 October 2017

ஸபர் மாதம் பீடையா


ஸபர் மாதம்-நாகரீகம் உச்சத்தை அடைந்துவிட்ட இந்த 21 ம் நூற்றாண்டிலும்-சடங்குகளும்,சம்பிரதாயங்களும் சில இஸ்லாமிய இல்லங்களில் மலிந்து காணப்படுகிறது.


திருமணங்கள் நடத்திப்பார்ப்பதில்லை- தொழில் தொடங்க முன் வருவதில்லை-நோயாளிகளை நலம் விசாரிப்பதில்லை-பயணங்கள் புறப்படுவதில்லை-புது வீடுகளில் குடி போவதில்லை.


என்ன செய்து விட்டது ஸபர்?


வானத்திலிருந்து இறங்கும் சோதனைகள் மொத்தமும் ஸபர் மாதத்தில் தான் இறங்குகிறது என்ற மூடத்தனமான ஒரு நம்பிக்கை-நம்முடைய ஈமானுக்கும்,கொள்கைக்கும் எவ்வளவு ஆபத்தானது என்று ஏன் விளங்குவதில்லை.


நாம் செய்த தவறுகளால் நாம் சந்திக்கும் சோதனைகளுக்கு –காலங்களையும் நேரங்களையும் ஒன்றும் அறியா உயிரினங்களையும் இன்னும் எத்தனை காலத்திற்கு பலியாக்கப்போகிறோம்.


مَّا أَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ اللَّـهِ ۖ وَمَا أَصَابَكَ مِن سَيِّئَةٍ فَمِن نَّفْسِكَ


உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. இன்னும்,உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது.(4:79)


நம்முடைய விதிக்கொள்கையை புரிந்துகொள்ள இந்த ஒரு வசனமே போதுமானதாகும்

.

نعيب زماننا والعيب فينا


குறையை நம்மிடம் வைத்துக்கொண்டு நாம் காலத்தை பழிகூறிக்கொண்டிருக்கிறோம் என்று சொன்ன ஒரு கவிஞனின் வரிகள் மூடநம்பிக்கையை குழிதோண்டி புதைக்கவில்லையா?


إنَّ كل زمان شغله المؤمن بطاعة الله - تعالى - فهو زمان مُبارك عليه، وكل زمان شغله العبد بمعصية الله - تعالى - فهو شؤم عليه؛ لأنَّ الشؤم في الحقيقة هو معصية الله - تعالى - كما قال ذلك ابن مسعود - رضي الله عنه.


தரித்திரம் காலத்தில் இல்லை,துற்குறி நேரத்தில் இல்லை,மனிதனே!நீ செய்யும் பாவத்தில் உள்ளது என்று சொன்ன ஹழ்ரத் இப்னு மஸ்வூத் ரலி அவர்களின் வார்த்தைகள் உரைக்க வேண்டாமா?


மனிதன் தான் செய்யும் தவறுக்கு காரணத்தை தேடுவது மனிதனின் பலகீனம்,அந்த பலகீனத்தை மறைக்க காலத்தை குறை கூறுவது அவனின் வழக்கம்.


காகம் உன் விருந்தாளிகளை உனக்கு அறிவிக்குமானால்-ஆந்தை மரணத்தை உனக்கு உணர்த்துமானால்-பூனை உனக்கு நீ செல்லும் காரியத்தின் தோல்வியை அறிவிக்குமானால்-விலை மதிப்பில்லா உன் ஈமானை பறவைகள்,மிருகங்களின் காலுக்கடியில் அடமானம் வைத்துவிட்டாய் என்று சொல்வேன்.


பாவத்தை விட பித்அத் ஆபத்தானது,ஏனெனில் பாவம் செய்பவன் ஒரு காலம் தவ்பா செய்வான்,பித்அத்காரன் மன்னிப்பு தேடமாட்டான், காரணம் அதை வணக்கமாக எண்ணி செய்கிறான்.


அதனால் தான் நபி ஸல் அவர்கள் அறியாமைக்கால பழக்க வழக்கங்கள் தன் தோழர்களிடம் தென்படும்போது உடனடியாக அதை களையும் நடவடிக்கையில் ஈடுபடுவார்கள்.


1:


«عَنْ أَبِي وَاقِدٍ اللَّيْثِيِّ، قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وآلِهِ وَسَلَّمَ إِلَى حُنَيْنٍ -وَنَحْنُ حُدَثَاءُ عَهْدٍ بِكُفْرٍ-، ولِلْمُشْرِكِينَ سِدْرَةٌ يَعْكُفُونَ عِنْدَهَا، ويَنُوطُونَ بِهَا أَسْلِحَتَهُمْ يُقَالُ لَهَا: ذَاتُ أَنْوَاطٍ، قَالَ: فَمَرَرْنَا بِالسِّدْرَةِ، فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ, اجْعَلْ لَنَا ذَاتَ أَنْوَاطٍ كَمَا لَهُمْ ذَاتُ أَنْوَاطٍ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وآله وَسَلَّمَ: اللهُ أَكْبَرُ، إِنَّهَا السُّنَنُ، قُلْتُمْ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ كَمَا قَالَتْ بَنُو إِسْرَائِيلَ: ﴿اجْعَلْ لَنَا إِلَهًا كَمَا لَهُمْ آلِهَةٌ قَالَ إِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُونَ﴾ [الأعراف: 138]، لَتَرْكَبُنَّ سَنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ»(١- أخرجه الترمذي في «سننه» كتاب الفتن


நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள்.“தாத்து அன்வாத்” என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில்“அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு “தாத்து அன்வாத்து” என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்” என்று கூறினோம்.


அதற்கு நபி (ஸல்) அவர்கள்“சுப்ஹானல்லாஹ்!. அல்லாஹு அக்பர்! இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும்; என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில்,மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க,அதற்கு மூஸா (அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக,நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையை படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அறிவிப்பாளர்: அபூ வாக்கிதுல்லைசி (ரலி)

நூல்:திர்மிதி


2:


அன்றைய அறியாமைக் கால மக்கள் நோய் உண்டாகக் காரணமே தொற்றுதான் என்றும், இறைவனுக்கு இதில் தொடர்பில்லை என்றும் கருதி வந்தனர். இந்த தவறான கருத்தை களைந்திடும் முகமாகவே நபி (ஸல்) அவர்கள் –


ما جاء عنه -رضي الله عنه- قال: قال رسول الله -صلى الله عليه وسلم-: ((لا عدوى، ولا صفر، ولا هامة؛ فقال أعرابي: يا رسول الله! فما بال إبلي تكون في الرمال كأنها الظباء، فيأتي البعير الأجرب فيدخل بينها فيجربها؟ قال: فمن أعدى الأول؟


தொற்றுநோய் கிடையாது,ஸபர் பீடையும் கிடையாது,ஆந்தை சகுனமும் இல்லை- என்று சொன்னார்கள். அப்போது,கிராமவாசி ஒருவர்‘அல்லாஹ்வின் தூதரே! (பாலை) மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித் திரியும்) என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றிற்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கி விடுகின்றனவே! அவைகளின் நிலை என்ன? (தொற்று நோய் இல்லையா?)என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அப்படி என்றால் முதல் (முதலில் சிரங்கு பிடித்த) ஒட்டகத்திற்கு (அந்த நோயை) தொற்றச் செய்ததுயார்? என்று திருப்பிக் கேட்டார்கள்.


அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி


3:


عن أبي هريرة أن النبي  أدرك شيخا يمشي بين ابنيه يتوكأ عليهما، فقال النبي  ما شأن هذا قال ابناه يا رسول الله كان عليه نذر، فقال النبي  اركب أيها الشيخ فإن الله غني عنك وعن نذرك واللفظ لقتيبة وابن حجر


صحيح مسلم


ஹழ்ரத் அபூ ஹுரைரா ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.


தன் இரு மகன்களின் கை தாங்களாக நடந்துபோய்க்கொண்டிருந்த ஒரு வயோதிகரை கண்ட நபி ஸல் அவர்கள் –இவருக்கு என்ன நேர்ந்தது?என வினவினார்கள்.அதற்கு அவரின் இருமகன்கள்-இவர் நடந்தே ஹஜ்ஜுக்கு செல்லவேண்டும் என்று நேர்ச்சை செய்துள்ளார் என்று பதில் கூறினார்கள்.அதற்கு நபி ஸல் அவர்கள்-பெரியவரே!உம்மை கஷ்டப்படுத்தும் இந்த நேர்ச்சை அல்லாஹ்வுக்கு தேவையில்லை.எனவே வாகனித்து செல்லும் என்று கூறினார்கள்.


4:


وذكر حديث ابن عباس قال: بينما رسول الله صلى الله عليه وسلم يخطب إذا هو برجل قائم في الشمس فسأل عنه، فقالوا: هو أبو إسرائيل، نذر أن يقوم ولا يقعد ولا يستظل ولا يتكلم ويصوم. فقال النبي صلى الله عليه وسلم: (مروه فليتكلم وليستظل وليقعد وليتم صومه


البخاري


ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் அறிவிக்கிறார்கள்.


நபி ஸல் அவர்கள் குத்பா பிரசங்கம் செய்துகொண்டிருக்கும் போது ஒருவர் வெயிலில் நின்று கொண்டிருந்தார்.காரணம் கேட்டபோது –இவர் ஒரு நேர்ச்சை செய்துள்ளார்.அதாவது-உட்காரமாட்டேன்,வெயிலில் நிற்பேன்,யாருடனும் பேசமாட்டேன்,நோன்பு வைப்பேன்.என்று பதில் கூறி னார்.அதைக்கேட்ட நபி ஸல் அவர்கள்-அவரை பேசச்சொல்லுங்கள்,நிழலில் உட்காரச்சொல்லுங்கள்,அவரின் நோன்பை மட்டும் பூர்த்தியாக்கச் சொல்லுங்கள்.என்று சொல்லி அனுப்பினார்கள்.


அவ்வாறு உமர் ரலி அவர்கள்- மக்களின் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதில் கடுமையான போக்கை கடைபிடித்து வந்ததை பார்க்க முடிகிறது.

5:


ما رواه البخاري عن طارقِ بنِ عبدِ الرّحمنِ قال:

انْطَلَقْتُ حَاجًّا، فَمَرَرْتُ بِقَوْمٍ يُصَلُّونَ، قُلْتُ: مَا هَذَا الْمَسْجِدُ ؟ قَالُوا: هَذِهِ الشَّجَرَةُ حَيْثُ بَايَعَ رَسُولُ اللَّهِ صلّى الله عليه وسلّم بَيْعَةَ الرِّضْوَانِ ! فَأَتَيْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، فَأَخْبَرْتُهُ، فَقَالَ سَعِيدٌ: حَدَّثَنِي أَبِي أَنَّهُ كَانَ فِيمَنْ بَايَعَ رَسُولَ اللَّهِ صلّى الله عليه وسلّم تَحْتَ الشَّجَرَةِ، قَالَ: فَلَمَّا خَرَجْنَا مِنْ الْعَامِ الْمُقْبِلِ نَسِينَاهَا، فَلَمْ نَقْدِرْ عَلَيْهَا، فَقَالَ سَعِيدٌ: إِنَّ أَصْحَابَ مُحَمَّدٍ صلّى الله عليه وسلّم لَمْ يَعْلَمُوهَا وَعَلِمْتُمُوهَا أَنْتُمْ ؟! فَأَنْتُمْ أَعْلَمُ.


தாரிக் ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்.


நான் ஹஜ்ஜுக்கு சென்றபோது ஒரு இடத்துக்கு அருகே ஒரு கூட்டம் தொழுது கொண்டிருந்தனர்-இது என்ன இடம்?என்று நான் கேட்டேன் –இது ஹுதைபிய்யாவில் நபி ஸல் அவர்களிடம் அருமை தோழர்கள் பைஅத் செய்த புனித மரம் இருந்த இடம் என்று கூறினர் –

இந்த செய்தியை ஸஈத் இப்னுல் முஸய்யப் ரஹ் அவர்களிடம் கூறினேன்-அதை கேட்ட அவர்கள்-என் தந்தை நபியுடன் அந்த பைஅத்தில் கலந்து கொண்டவர்,அவருடன் மறு ஆண்டு ஹஜ்ஜுக்கு சென்றபோது-அந்த இடத்தை நாங்கள் மறந்து விட்டோம் என்று கூறினார்.


இதை கூறிய ஸஈத் ரஹ் அவர்கள் –நபித்தோழர்களுக்கு தெரியாத இடம் உங்களுக்கு தெரிந்துவிட்டதா?என்றார்கள்.


فقد أخرجه ابن سعد في الطّبقات (2/100) عن نافع قال: كان النّاس يأتون الشّجرة الّتي يقال لها شجرة الرضوان فيصلّون عندها، قال: فبلغ ذلك عمر بن الخطّاب رضي الله عنه، فأوعدهم فيها وأمر بها فقطعت.


உமர் ரலி அவர்களின் ஆட்சிக்காலத்தில் அந்த மரத்திற்கு அருகே மக்கள் தொழ ஆரம்பித்து விட்டனர் என்று கேள்விப்பட்ட உமர் ரலி அவர்கள்-அதை வேறுடன் வெட்ட உத்தரவிட்டார்கள்.


அறியாமை கால பழக்கங்கள் அனைத்தையும் என் காலுக்குகீழ் போட்டு புதைக்கிறேன் என்று சூழுரைத்த நபி ஸல் அவர்களின் மார்க்கத்தில்- ஸபர் என்ற பெயரால் அரங்கேறிவரும் அறியாமையும்,மூடநம்பிக்கையும் களையெடுக்கப்படவேண்டும்.


அறியாமை கால அரபியர்கள் இந்த மாதத்திற்கு ஸபர் என்று பெயர் வைத்தனர்.ஸபர் என்றால் காலியானது,வெற்றிடம் என்று பொருள்.


ஹஜ்ஜு காலம் முடிந்து ஊரே வெளியூர் புறப்பட்டு காலியாகி விடுவதால் இந்த பெயரை சூட்டினர்.ஆனால் இஸ்லாம் அதற்கு ஸபருல் முழப்பர் வெற்றி ஸபர் என்று பெயர் சூட்டியது.காரணம்-


முஸ்லிம்களின் வாழ்வை பொருளாதார ரீதியாகவும்,பாதுகாப்பு ரீதியாகவும் செழிப்பாக்கிய கைபர் வெற்றி இந்த ஸபர் மாதத்தில் தான் கிடைத்தது.


அவ்வாரே உலக அரங்கில் இஸ்லாத்துக்கும்,முஸ்லிம்களுக்கும் அங்கீகார  த்தை பெற்றுத்தந்த சரித்திர சிறப்புமிக்க நாயகத்தின் ஹிஜ்ரத் பயணம் ஸபர் மாதம் பிறை 27 ல் தான் துவங்கியது.


எனவே ஸபர் பீடையல்ல,ஒருவகையில் பரக்கத்தான மாதமாகும்.


இஸ்லாம் அறிவை ஊக்கப்படுத்தும் மார்க்கம்


அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளில் மிகப்பெரும் செல்வம் அறிவு செல்வமாகும்.மற்ற படைப்பினங்களை விட்டும் அவனை தனிமைப்படுத்தி காட்டுவதும் அதுவேயாகும்.அறிவை இழந்தவன் அனைத்தையும் இழப்பான்.


இஸ்லாம் அறிவால் அறிமுகமான மார்க்கமாகும்.அறியாமை எனும் இருளில் மூழ்கிக்கிடந்த அந்த அரபுலக மக்களின் வாழ்வில் அறிவுச்சுடரை ஏற்றிவைப்பதே தன் முதல் கடமையாகயாகவும்,சவாலாகவும் ஏற்றுக்கொண்டது.


இஸ்லாம் கல்வி அறிவைப்பற்றி விரிவாக பேசுவதுடன், அல்குர்ஆனை சிந்திக்கும் போது இஸ்லாம் அறிவுக்கு வழங்கியுள்ள முக்கியத்துவத்தையும் தெளிவாக அறிந்து கொள்ளமுடியும்.


அல்குர்ஆனில் இல்ம் (அறிவு) என்ற வார்த்தை 80 இடங்களில் பயன்படுத்தப் படுகிறது,அக்ல் (பகுத்தறிவு) என்ற வார்த்தை 49 இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.ஹிக்மத் (ஞானம்) என்ற வார்த்தை 20 இடங்களில் கூறப்படுகிறது.


அவ்வாறு ஹதீஸ் நூட்களிலும் அறிவைப்பற்றிய தனி பாடப்பிரிவுகளை தவிர்க்கமுடியாதவையாகும்.


முதன் முதலாக இறங்கிய அல்குர்ஆனின் வசனங்களே அறிவைப் பற்றியும் அறிவின் அடிப்படைகளாகத் திகழும் வாசிப்பு, எழுத்து, எழுதுகோல் பற்றியும் பேசுவதைப் பார்க்கின்றோம்.


اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ﴿١﴾ خَلَقَ الْإِنسَانَ مِنْ عَلَقٍ ﴿٢﴾ اقْرَأْ وَرَبُّكَ الْأَكْرَمُ ﴿٣﴾ الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ ﴿٤﴾ عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ


''(நபியே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். நீர் ஓதும், உமது இறைவன் மாபெரும் கொடையாளி,அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.'' (96:5)



அறிவையும்,அறிஞர்களையும் முன்னிலப்படுத்துவதுபோலவே மடமையையும் மடையர்களையும் புறம் தள்ளுகிறது.


خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ


எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.(7:199)


இஸ்லாம் அறியாமைக்கு எதிரான மார்க்கமாகும்.


ஒரு முஸ்லிம் கஞ்சனாக இருக்கலாம்,கோழையாக இருக்கலாம்,ஆனால் அறியாமையில் ஒருகாலமும் இருக்கக்கூடாது,அது அவனின் ஈமானுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.


அறியாமையில் மிகப்பெரும் அறியாமை தன் மார்க்க விஷயத்தில் தோன்றும் அறியாமையாகும்.காரணம்,இங்கே கலிமா சொல்லக்கூட கல்வி அவசியம் என்று குர்ஆன் கூறுகிறது.


فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَـٰهَ إِلَّا اللَّـهُ


ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக.(47:19)


மூடநம்பிக்கைக்கு எதிரான அல்குர்ஆனின் அறைகூவல்கள்:


وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ


எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்;(17:36)


அன்றய மக்காவாசிகள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்துவிட்டால் அதன் பிறகு தன் வீட்டின் முன் வாசல் வழியே நுழையாமல் பின் வாசல் வழியே ஒரு துவாரத்தை ஏற்படுத்தி அதன் வழியாகவே வந்து போய்க்கொண்டிருந்தனர்.இதனை அவர்கள் நல்ல காரியமாக கருதி வந்தனர்.இதை கண்டிக்கும் விதமாக அல்லாஹ் இறக்கிய வசனம் தான் இவை:


وَلَيْسَ الْبِرُّ بِأَن تَأْتُوا الْبُيُوتَ مِن ظُهُورِهَا وَلَـٰكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَىٰ ۗ وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا ۚ وَاتَّقُوا اللَّـهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ


(முஃமின்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை, ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர்;எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்;.நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை,அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.(2:189)


அவ்வாறு ஆரம்ப கால மக்கள் கஃபாவை தவாப் செய்யும்போது மேனியின் ஆடைகளை களைந்து நிர்வாணமாக தவாப் செய்து வந்தனர்.    நாங்கள் அணிந்துள்ள ஆடைகளுடன் பாவம் செய்துள்ளோம்,என்வே பாவம் செய்த ஆடையுடன் இப்புனித அமலை செய்யமாட்டோம் என்று காரணம் கூறுவார்கள்.இவர்களை குறித்து அல்குர்ஆன் –


يَا بَنِي آدَمَ خُذُوا زِينَتَكُمْ عِندَ كُلِّ مَسْجِدٍ


ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்;(7:31)


எனவே தீன் என்பது இஷ்டப்பட்டதை செய்வதல்ல!இஸ்லாம் சொன்னதை செய்வதாகும்.


தஸ்பீஹை விட குர்ஆன் ஓதுவது சிறப்புதான்,அதற்காக தொழுகையில் ருகூவு,சுஜூதில் நான் குர்ஆன் தான் ஓதுவேன் என்றால் அது பித்அத் இல்லையா?


மினாவில் தொழுவதை விட ஹரமில் தொழுவது சிறப்பு தான்,அதற்காக ஹஜ்ஜுக்காலத்தில் ஒரு ஹாஜி துல்ஹஜ் 8 ல் நான் ஹரமில் தான் தொழுவேன் என்று சொன்னால் அது தவறில்லையா?


வணக்கமானாலும்,வாழ்க்கையானாலும் அல்லாஹ்வும்,ரசூலும்,நபித்தோ  ழர்களும் காட்டித்தராத ஒன்றை செய்வது அது அறியாமையே!

அப்படிப்பட்ட அறியாமையிலிருந்து அல்லாஹ் இந்த உம்மத்தை பாதுகாப்பானாக.