இருலோக இரட்சகர் நபிகள் கோமான் எம் பெருமான் முஹம்மது முஸ்தபா [ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ] அவர்களுக்கு வயது என்ன ?
நம்மில் பலர் நபிகள் கோமான் எம் பெருமான் முஹம்மது முஸ்தபா [ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ] அவர்களுக்கு வயது 63 என்று கண்களை மூடிக்கொண்டு பதில் சொல்லுகிறோம் . ஆனால் அது உண்மையான வயதா என்று நாம் சிந்தித்தது கிடையாது .
நபிகள் கோமான் எம் பெருமான் முஹம்மது முஸ்தபா [ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ] அவர்களுக்கு வயது 63 -னா [அல்லது ] கணக்கிட முடியாத ஆண்டுகளா ?
என்பதை பார்போம் !
நாம் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் ஆதாரங்கள் இதோ உங்கள் பார்வைக்கு முன்னால் வைக்கிறோம் ....
جابر بن عبد الله قال: قلت يا رسول الله بأبي أنت وأمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء. قال: «يا جابر إن الله خلق قبل الأشياء نور نبيّك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا جنّة ولا نار ولا مَلَك ولا سماء ولا أرض ولا شمس ولا قمر ولا جني ولا إنسي» .
ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஜாபிர் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதரே ! என் தாய் தந்தையர் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் . அல்லாஹ் முதன் முதலில் எதை படைத்தான் என்பதை அறிந்துக்கொள்ள நான் ஆசைப்படுகிறேன் என்று கேட்டதற்கு அல்லாஹ் முதன் முதலில் தன்னுடைய நூரிலிருந்து உன்னுடைய நபியின் நூரைப் படைத்தான்.பின்னர் அந்த நூர் அல்லாஹ்வின் நாட்டத்திற்கிணங்க அவன் வல்லமையை கொண்டு,உலா வந்து கொண்டிருந்த்து . அப்போது லவ்ஹூ என்ற பலகையோ,கலம் என்ற எழுதுகோலோ,சொர்க்கமோ,நரகமோ,மலக்குகளோ,இல்லை வானம் இல்லை ,பூமியும் இல்லை, சூரியனுமுல்லை, சந்திரனுமில்லை ,ஜின் வர்கமுமில்லை,மனித இனமுமில்லை , என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் .
[ நூல் - இமாம் பைஹகியின் தலாயிலுந் நுபுவத் ,இமாம் இப்னு ஹஜர் மக்கி அவர்களின் அப்ஸலுல் குரா,இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள் மவாஹிப், அல்லாமா காஸி அவர்கள் மதாபி உல் மஸர்ராத், அல்லாமா அப்துல் ஹக் முஹத்திஸ் தெஹ்லவி அவர்களின் மதரிஜூன் நுபுவத். ]
நபிகள் கோமான் எம் பெருமான் முஹம்மது முஸ்தபா [ ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் ] அவர்களுக்கு வயது 63 - தானே ? இந்த ஹதீஸில் நபி ஆதம் அலைஹி வஸல்லம் அவர்களும் படைக்கப்படுவதற்கு முன்பே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் நூர் சிருஷ்டிக்கப்பட்டு விட்டது என்று கூறப்பட்டுள்ளதே ! அப்படியாயின் படைப்பினங்களின் அருட் கொடை ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உண்மை வயது தான் என்ன ? அவர்களது ஆரம்பம் தான் என்ன ? என்ற கேள்வி உங்களது உள்ளங்களிலே தோன்றக் கூடும்.அந்த கேள்விக்கு இதோ பதில் .
عن ابى هريرة انه عليه السلام سال جبريل عليه السلام فقال « يا جبريل كم عمرك من السنين » فقال يا رسول الله لست اعلم غير ان فى الحجاب الرابع نجما يطلع كل سبعين الف سنة مرة رأيته اثنين وسبعين الف مرة فقال عليه السلام « يا جبريل وعزة ربى انا ذلك الكوكب »
ஒரு முறை வானவர் கோமான் ஹஜ்ரத் ஜிப்ரயீல் அலைஹி வஸல்லம் அவர்களிடம் உங்களது வயது என்ன ? என்று நபிகள. கோமான் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட போது என் வயதைப் பற்றிய விபரம் எனக்கு சரிவர தெரியாது.எனினும் ஒரு விபரம் கூறுகிறேன் அதைக் கொண்டு தாங்கள் எனது வயதைக் கணுத்துக் கொள்ளுங்கள்.நான்காவது வானத்தில் ஒரு நட்சத்திரம் இருக்கிறது.அந்த நட்சத்திரம் எருபதாயிரம் வருடங்களுக்கு ஒரு முறை தோன்றும் அதை நான் எழுதபதாயிரம் தடவைப் பார்த்திருக்கிறேன் என்று கூறினார்கள்.அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரயீலே ! அல்லாஹ்வின் மீது சத்தியமாக அந்த நட்சத்திரம் நானே என்றார்கள்
[ ஆதாரம் = தப்ஸீர் ரூஹுல் பயானில் -
لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ
என்ற திருவசத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது விரிவுரை ]
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் எப்போது நபியாக நிர்ணயிக்கப்பட்டார்கள் என்ற உண்மையை சந்தேகத்திற்கு இடமின்றி விளங்கிக் கொண்டீர்கள் அல்லவா ? எனவே மனிதர்களுக்கு சில உதாரணங்களோ ,சில விளக்கங்களோ சொன்னால் தான் புரியும் !
அந்த அடிப்படையில் தான் முஸ்லிம் சமுதாயத்தின் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வயது 63 என்று சொல்லப்படுகிறது . ஹஜ்ரத் அப்துல்லாஹ் ( அலைஹி வஸல்லம் ) அவர்களின் மகனாக ஹஜ்ரத் ஆமீனா ( அலைஹி வஸல்லம் ) அவர்களின் மணுவயிற்றில் உதித்த ,பின்பு இவ்வுலகில் மனித ரூபமெடுத்து வல்லோன் அல்லாஹ்வின் நபி,ரஸூலாக பிரகனப்படுத்தப்பட்ட சர்வரே காயினாத் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தான் வயது 63 அதே வேளை ஹஜ்ரத் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் மூலமாகிய நூரே முஹம்மதியக்கோ ,வல்லோன் அல்லாஹ்வின் தான் எவ்வளவு என்ற பரம ரகசியத்தை அந்த அல்லாஹ்வே நன்கறிவான் .
والذي بعثني بالحق بشيرا لم يعلم حقيقتى غير ربى
உண்மையாகவே என்னை நன்மாராயம் சொல்வோனாக அனுப்பி வைத்தவனின் மீது சத்தியமிட்டு சொல்கிறேன் .என் எதார்த்ததை என் ரப்பைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள்
[ ஆதாரம் குர்ரத்துல் அலிப் =24 ]
انى لست مثلكم
நிச்சயமாக நான் உங்களை போன்றவன் அல்ல என்று நபி முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் [ புகாரீ - பாகம்- 2 ,பக்கம் 1084 கிதாபுல் இஃதாஸாம் ]
ليت كأحد منكم
நான் உங்களில் யாரும் போன்றும் அல்ல என்று முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்
[ முஸ்லிம் ,புகாரி - பாகம் - 1 ,பக்கம் - 263 ,கிதாபுஸ் ஸவ்மி - மிஷ்காத் பக்கம் - 111 ]
لست كهئتكم
நான் உங்களின் அமைப்பைப் போன்றவனல்ல என்று முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் கூறினார்கள்
[ புகாரி - பாகம் - 1 ,பக்கம் - 264 - கிதாபுஸ் ஸவ்மி ]
لست كهئتك يا رسول الله
முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து நபியே நாங்கள் உங்களுடைய அமைப்பைப் போன்றவர்கள் அல்ல என்று ஸஹாபாக்கள் கூறினார்கள்
[ புகாரி - பாகம் - 1 , பக்கம் - 7 ,கிதாபுல் ஈமான் ]
எனவே முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் உண்மை நிலையை அல்லாஹ் ஒருவன் தான் நன்கறிவான் .இதே போன்று வல்லோன் அல்லாஹ்வை நன்கறிந்தவர்கள் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்களே என்பதை அறிந்து இம்மையில்உண்மை முஸ்லிமாக வாழ்ந்து மறுமையில் சகலபாக்கியங்களையும் பெறுவோமாக .
ஆமீன்
ஆமீன்
யா ரப்பல் ஆலமீன்