Wednesday, 9 November 2022

உண்மையான வசந்தம் எது?

📱📱📱📱📱📱📱📱
     *ஜும்ஆ பயான்*

🗓  28 / 10/ 2022
         
📜தலைப்பு :-
*உண்மையான வசந்தம் எது?*

 ⏰ ~நிமிடங்கள்... 20:32

         🎤  உரை  🎤 
*"மௌலவி, HSM.முஹம்மது ஷாஃபி ஆரிப் மஹ்லரி அல்காதிரிய்யி வல் ஜிஸ்திய்யி வசுஹூதி அவர்கள்"* 
  
🕌 *இமாம் :- ஜாமிஆ  மஸ்ஜித், கப்படாபள்ளி காரைக்கால்*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

https://app.box.com/s/p2va3igc5hhilrcxsk16gbfiei945rq2

Sunday, 2 October 2022

முஹம்மது நபிகள் நாயகம் ஸல் அவர்களின் பிறப்பு

1. நபி (ஸல்) அவர்கள் பிறப்பு : 20-04-570 திங்கட்கழமை, ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 12
2. பிறந்த இடம் : திரு மக்கா
3. பெற்றோர் : அப்துல்லாஹ் - அன்னை ஆமீனா
4. பாட்டானார் : அப்துல் முத்தலீப்
5. தந்தை மரணம் : நபி (ஸல்) அவர்கள் கருவில் இருக்கும் போது
6. தாயார் மரணம் : நபி (ஸல்) அவர்களின் ஆறு வயதில்
7. பாட்டனார் மரணம் : நபி (ஸல்) அவர்களின் எட்டு வயதில
8. வளர்ப்பு : பாட்டனாருக்குப் பின் பெரிய தந்தை அபூதாலிப்
9. செவிலித் தாய்மார்கள் : ஹள்ரத் துவைஃபா (ரளி) என்ற அடிமைப் பெண் பின்பு ஹள்ரத் ஹலிமா (ரளி) அவர்கள்
10. பட்டப் பெயர்கள் : அல் அமீன் (நம்பிக்கைக்கு உரியவர்), அஸ்ஸாதிக் (உண்மையானவர்)
11. முதல் வணிகம் : அன்னை கதீஜா (ரளி) அவர்களின் வணிகக் குழுவில் சேர்ந்து சிரியா தேசம் பயணம்
12. முதல் திருமணம் : அன்னை கதீஜா (ரளி) அவர்களுடன்
13. மஹர் தொகை : 500 திர்ஹங்கள்
14. திருமணத்தை நடத்தி வைத்தவர் : அபூதாலிப் அவர்கள்
15. நபி (ஸல்) அவர்கள் மனைவியர் : அன்னை கதீஜா (ரளி), அன்னை ஸவ்தா (ரளி), அன்னை ஆயிஷா (ரளி), அன்னை ஹஃப்ஸா (ரளி), அன்னை ஜைனப் பின்த் குஜாமா (ரளி), அன்னை உம்முஸல்மா (ரளி), அன்னை ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரளி), அன்னை ஜுவைரிய்யா (ரளி), அன்னை உம்மு ஹபீபா, அன்னை ஸஃபிய்யா (ரளி), அன்னை மைமூனா (ரளி), அன்னை மரியத்துல் கிப்தியா (ரளி)
16. ஆண் மக்கள் : காஸிம் (ரளி) அப்துல்லாஹ் (ரளி), இப்றாஹீம் (ரளி) இவர்கள் குழந்தைப் பருவத்திலேயே மௌத்தாகிவிட்டார்கள்
17. பெண் மக்கள் : ஜைனப் (ரளி), ருகையா (ரளி), உம்முகுல்தூம் (ரளி), ஃபாத்திமா (ரளி)
18. பேரர்கள் : அலீ (ரளி), உமாமா (ரளி), முஹ்சின் (ரளி), ஹசன் (ரளி) ஹுசைன் (ரளி)
19. ஊழியர்கள் : பிலால் (ரளி), அனஸ் (ரளி), உம்மு அய்மன் மாரியா (ரளி)
20. அடிமை : ஜைதிப்னு ஹாரிதா (ரளி)
21. பெருமானார் (ஸல்) அவர்களின் தகப்பனார் உடன் பிறந்தோர் : மொத்தம் 12 பேர். அவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் ஹள்ரத் ஹம்ஜா (ரளி), ஹள்ரத் அப்பாஸ் (ரளி)
22. பெருமானார் (ஸல்) அவர்களின் தாய்; உடன் பிறந்தோர் : மொத்தம் 6 பேர். அவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் ஹள்ரத் அம்மாரா (ரளி), ஹள்ரத் ஆத்திகா (ரளி), ஹள்ரத் ஸஃபிய்யா (ரளி)
23. நபிப் பட்டம் கிடைத்தது : 40 – ம் வயதில் (கி.பி. 610)
24. நபிப் பட்டம் கிடைத்த இடம் : ஹிரா குகை
25. முதல் வஹீ : 'இக்ரஃ பிஸ்மி' என்ற வசனம்
26. முதல் முதலாக ஈமான் கொண்டவர்கள் : பெண்களில் - ஹள்ரத் அன்னை கதீஜா (ரளி), சிறுவர்களில் - ஹள்ரத் அலீ (ரளி), ஆண்களில் ஹள்ரத் அபூபக்கர் (ரளி), அடிமைகளில் - ஹள்ரத் பிலால் (ரளி)
27. முஸ்லிம்களின் முதல் ஹிஜ்ரத் : அபிசினியாவிற்கு, நபித்துவம் 5 – ம் ஆண்டில், மன்னர் நஜ்ஜாஸி ஆட்சியில்
28. முதல் ஹிஜ்ரத் செய்தவர்கள் : நபி (ஸல்) அவர்களின் மகள் ருகையா (ரளி), மருமகன் ஹள்ரத் உஸ்மான் (ரளி) மற்றும் ஆண்கள் 11 பேர், பெண்கள் 4 பேர்
29. தாயிஃப் நகரில் தவ்ஹீத் : நபித்துவ 10 – ம் ஆண்டில், துணையாகச் சென்றவர் ஹள்ரத் ஜைது (ரளி)
30. மக்காவில் தீனழைப்பு : 13 ஆண்டுகள்
31. மதீனாவிற்கு ஹிஜ்ரத் : நபித்துவ 14 – ம் ஆண்டில்
32. உடன் சென்றவர் : ஹள்ரத் அபூபக்கர் (ரளி)
33. ஹிஜ்ரத்தின் போது மறைந்திருந்த குகை : தௌர்
34. மதீனா சேர்ந்த நாள் : ஈஸவி 25-09-622 - ல்
35. பத்ரு யுத்தம் : ஹிஜ்ரி 2, ரமளான் மாதம்
36. தொழுகைக்கு பாங்கு அறிமுகப்படுத்தப்பட்டது : ஹிஜ்ரி - 2 ல்
37. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கஃபா கிப்லாவாக ஆக்கப்பட்டது : ஹிஜ்ரி - 2 ல
38. உஹது யுத்தம் : ஹிஜ்ரி - 3 ல்
39. அகழ் யுத்தம் : ஹிஜ்ரி - 5 ல்
40. ஹுதைபிய்யா உடன்படிக்கை : ஹிஜ்ரி - 6 ல்
41. மது ஹராமாக்கப்பட்டது : ஹிஜ்ரி - 6 ல்
42. நபி (ஸல்) அவர்களின் புனித பல் ஷஹிதான யுத்தம் : உஹது யுத்தம்
43. நபி (ஸல்) அவர்களின் காலத்து போர்களில் சில : பனூ முஸ்தலிக், ஹுனைன், தாயிப், பனூ கைனூக், பனூ நஸீர், பனூ குறைளா, கைபர், மூத்தா, தபூக் யுத்தங்கள்
44. மக்கா மீது படையெடுப்பு : ஹிஜ்ரி - 8 ல்
45. மிஃராஜ் : நபித்துவ 12 – ம் ஆண்டில, ரஜப் பிறை 27 திங்கட் கிழமை
46. தொழுகை கடமையாக்கப்பட்டது : மிஃராஜில்
47. ஹஜ் கடமை : ஹிஜ்ரி - 9 ல்
48. நபி (ஸல்) அவர்கள் ஹஜ் செய்தது : ஹிஜ்ரி – 10
49. நபி (ஸல்) அவர்களின் தலையிலும் தாடியிலும் இருந்த மொத்த நரை முடிகள் : 17
50. நபி (ஸல்) அவர்கள் செய்த இறுதிப் பிரசங்கம் : ஹஜ்ஜத்துல் விதாவில்
51. இறுதி வஹி : 110 – ம் அத்தியாயம்
52. நபி (ஸல்) அவர்கள் உலகைப் பிரிந்த நாள் : ஹிஜ்ரி 10, ரபீஉல் அவ்வல் பிறை 12, திங்கட்கிழமை
53. நபி (ஸல்) அவர்களின் புனித உடலை கழுவ நீர் எடுக்கப்பட்ட கிணறு : அரீஸ் கிணறு
54. நீராட்டியவர்கள் : ஹள்ரத் அலீ (ரளி), ஹள்ரத் அப்பாஸ் (ரளி), ஹள்ரத் பழ்ல் (ரளி), ஹள்ரத் குஸீ (ரளி), ஹள்ரத் உஸாமா (ரளி), ஹள்ரத் ஷக்ரான் (ரளி), ஹள்ரத் உஸ் இப்னு கௌல் அன்சாரி (ரளி)
55. ஜனாஸா தொழுகை : 72 முறை நடந்தது
56. கப்ரில் இறக்கியவர்கள் : ஹள்ரத் அலீ (ரளி), ஹள்ரத் அப்பாஸ் (ரளி), ஹள்ரத் பழ்ல் (ரளி), ஹள்ரத் குஸீ (ரளி)
57. நபி (ஸல்) அவர்களை இறுதியாகக் கண்டவர்கள் : ஹள்ரத் பழ்ல் (ரளி), ஹள்ரத் குஸீ (ரளி)
58. வாழ்ந்த நாட்கள் : சந்திரக் கணக்குப்படி 63 வருடங்கள், 3 நாட்கள், 6 மணி நேரம். சூரியக் கணக்குப்படி 61 வருடங்கள், 49 நாட்கள், 6 மணி நேரம்.
59. உலகில் விட்டுச் சென்ற பொருட்கள் : ஒரு சீப்பு, சுர்மா கூடு, 2 தொழுகை பாய்கள், ஒரு திரிகை, ஜோடி காலணி, போர்வை, ஊன்றுகோல், கேத்தல், கீழ் ஆடை, குர்ஆனில் சில தொகுப்புகள், மிஸ்வாக், ஜிப்பா, மூன்று பாய்கள், இரண்டு சுர்மா கோல்.
60. அண்ணலாரைப் போன்று தோற்றம் அளித்த சஹாபி : ஹள்ரத் முஸ்அப் இப்னு உமைர் (ரளி)
61. அண்ணலாருக்குப் பின் ஆண்ட கலீஃபாக்கள் : ஹள்ரத் அபூபக்கர் (ரளி), ஹள்ரத் உமர்; (ரளி), ஹள்ரத் உஸ்மான் (ரளி), ஹள்ரத் அலீ (ரளி)
62. அதிக அளவில் ஹதீஸ்களை அறிவித்தவர்கள் : ஆண் சஹாபி - ஹள்ரத் அபூஹுரைரா (ரளி), பெண் சஹாபி - ஹள்ரத் ஆயிஷா (ரளி)
63. அன்னை பாத்திமா (ரளி) மரணம் : பெருமானார் (ஸல்) மறைந்த ஆறு மாதத்தில்

நபி பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முழுவதும் குர்ஆனாகவே இருந்தது.

Thursday, 31 March 2022

நோன்பின் மாண்பு

நோன்பின் சிறப்பு
{நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதற்காக உங்களுக்கு முன்பிருந்தோர் மீது விதியாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது.

கணக்கிடப்பட்ட சில தினங்களில் (அது நிறைவேற்றப்பட வேண்டியதாகும்). ஆனால் உங்களில் எவர் நோயாளியாக அல்லது பயணத்தில் இருக்கிறாரோ (அவர்) வேறு நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளட்டும். எனினும் (முதுமை அல்லது நிரந்திர நோய் போன்ற காரணங்களால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்கட்டும். எனினும், எவரேனும் தானாக விரும்பி அதிகமாகக் கொடுத்தால் அது அவருக்கு நல்லது. நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நல்லதாகும்.

ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழியைத் தெளிவுபடுத்தக் கூடியதாகவும் (சத்தியத்தையும் அசத்தியத்தையும்) பிரித்தறிவிக்கக் கூடியதாகவுள்ள அல்குர்ஆன் இறக்கப்பட்டது. எனவே உங்களில் யார் அந்த மாதத்தை அடைந்து கொள்கின்றாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும். யார் நோயாளியாக அல்லது பயணத்தில் இருக்கின்றாரோ (அவர்) வேறு நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ளட்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவையே விரும்புகின்றான். அவன் உங்களுக்கு கஷ்டத்தை விரும்பவில்லை. (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமைப் படுத்துவதற்காகவும், அல்லாஹ் உங்களை நேர்வழியில் செலுத்தியதற்காக அவனைப் பெருமைப் படுத்துவதற்காகவும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (இவ்வாறு செய்தான்).}[அல்குர்ஆன் 2 : 183- 185]

 ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் முஸ்லிம்களுக்கு கடமையாக்கியிருக்கின்றான்.

“ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்” (அல்-குர்ஆன்  2:183)

“உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்” (அல்-குர்ஆன்  2:185)


இஸ்லாம் மார்க்கம் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பதை முஸ்லிம்கள் அவசியம் நிறைவேற்ற வேண்டிய ஐம்பெரும் கடமையான வணக்கங்களுள் ஒன்றாக ஆக்கியிருக்கிறது.
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
 ரமலான் மாதத்தின் சிறப்புகள் 
நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது.(திர்மிதீ)

சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. (திர்மிதீ)

ரமளான் (மாதம்) வந்துவிட்டால் அருள்களின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.(நஸயீ)

ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும்.(திர்மிதீ)

ஒரு இறை அழைப்பாளர் “நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!” என்று உரக்கச் சொல்வார். (திர்மிதீ)

அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்.(புகாரி)

நோன்பு மாதத்தில் உம்ராச் செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும். (நஸயீ)

ஆயிரம் மாதங்களை விட மகத்துவமிக்க ஓர் இரவு (லைலத்துல் கத்ர்) இம்மாதத்தில் தான் இருக்கிறது.

ரமலானின் கடைசி இரவில் நோன்பாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுகின்றது

ரமலானின் ஒவ்வொரு இரவிலும் அல்லாஹ் நரகிலிருந்து சிலரை விடுதலை செய்கின்றான். (இப்னுமாஜா)

புனிதமிக்க அல்-குர்ஆன் ரமலானில் தான் இறக்கியருளப்பட்டது. (2:185)

நோன்பு கெட்ட செயல்களில் இருந்து பாதுகாக்கும் (புகாரி)

நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு கேடயமாகும். (அஹ்மத்)

நோன்பு சுவர்கத்திற்குள் நுழைவதற்கு காரனமான அமலாக இருக்கிறது (நஸயீ)

நோன்பு அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் (அஹ்மத்)

நோன்பாளிகள் மட்டுமே ரய்யான் என்னும் வாசல் வழியாக சுவனத்திற்குள் பிரவேசிப்பார்கள் (புகாரி)

நோன்புக்குரிய கூலியை அல்லாஹ்வே கொடுக்கின்றான். (திர்மிதி)

நோன்பு தக்வாவுக்கு (அல்லாஹ்வை பயப்படுவதற்கு) முக்கிய காரணமாக அமைகின்றது. (2:183)

நோன்பாளியின் வாய்வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரி வாடையை விட மிக நறுமணமுள்ளது. (புகாரி)

நோன்பாளிகள் நோன்பு திறக்கும் வரை அவருக்காக மலக்குகள் பாவமன்னிப்பு தேடுகின்றனர்.

நோன்பாளிகளின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. (பைஹகி)
புத்தி சுவாதீனமுள்ள, பருவமடைந்த, ஊரில் இருக்கக்கூடிய நோன்பு நோற்க சக்தியுள்ள ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் நோன்பு நோற்பது கடமையாகும்.

நோன்பை விட்டுவிட சலுகைகளையுடையவர்கள்:
தற்காலிக நோயாளி (குணமாக கூடிய நோயாளி): நோன்பு நோற்பது இவருக்கு சிரமமாக இருந்தால் இவருக்கு நோன்பை விட்டுவிட சலுகை இருக்கிறது. ஆயினும் விடுபட்ட நோன்பை பின்னர் நோற்க வேண்டும்.

நிரந்தர நோயாளி: நோய் குணமாகாது என்ற அளவிற்கு நிரந்தர நோயாளியாக இருப்பவர் நோன்பு நோற்பது கட்டாயமில்லை. ஆயினும் அவர் அதற்கு பகரமாக ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். 

பயணி: பயணிகளுக்கு அவர் தன் ஊருக்கு திரும்பி வரும்வரை நோன்பை விட்டுவிட சலுகையிருக்கிறது. பிரயாணி தன் பிரயாணத்தை முடித்துக் கொண்டதும் விட்ட நோன்புகளை நோற்க வேண்டும்

கர்ப்பிணிப்பெண் மற்றும் பாலூட்டும் தாய்:இவர்கள் நோன்பு நோற்பதினால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதும் ஆபத்து ஏற்படுமென்று பயந்தால் நோன்பை விட்டுவிடலாம், இவர்கள் குழந்தையை பெற்றெடுத்ததற்கு பிறகு அல்லது பாலூட்டியதற்கு பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

நோன்பு நோற்க இயலாத முதியவர்கள்:இவர்களுக்கு நோன்பை விடுவதற்று அனுமதி உண்டு. இவர்கள் ஒரு நாளைக்கு ஒரு ஏழைக்கு வீதம் உணவளிக்க வேண்டும். அல்லாஹ் நன்கறிந்தவன்.

மாதவிடாயின் போது நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது. மாதவிடாயின் போது விடுபட்ட நோன்புகளை ரமலானுக்குப் பிறகு நோற்க வேண்டும்.

ரமளான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. நகரத்தின் கதவுகள் மூடப்பட்டு விடுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)

ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் “நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!” என்று உரக்கச் சொல்வார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதீ, இப்னுமாஜா)

பிறையைக் கண்டே நோன்பு நோறுங்கள், நோன்பை விடவும் செய்யுங்கள். மேகம்(பிறையை) மறைத்துவிட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

ரமளான் மாதத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்  சந்தேகமான நாட்களில் சுன்னத்தான நோன்பு நோற்கக்கூடாது.

“ரமளான் மாதத்தை விட ஒரு நாள் அல்லது இரண்டு நாளைக்கு முன்னால் உங்களில் யாரும்(சுன்னத்தான) நோன்பு நோற்கக்கூடாது. வழமையாக அந்த நாளில் நோன்பு நோற்பவர் நோற்றுக் கொள்ளட்டும்” என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (புகாரி)

உடலுறவில் ஈடுபடுதல்

சாப்பிடுவது, குடிப்பது

மாதவிடாய் ஏற்படுதல்

பிரசவ கால இரத்தம் வெளியேறுதல்

வேண்டுமென்றே வாந்தியெடுப்பது

முத்தமிடுவதினால், சுய இன்பம் போன்றவற்றின் மூலம்  இந்திரியம் வெளிப்படுத்துவது

நரம்பு வழியாக சத்தூசி போன்றவற்றை உட்கொள்ளுதல்

இரத்ததானம் போன்றவற்றிக்காக இரத்தம் வெளியேற்றுதல் இவைகளினால் நோன்பை முறிந்துவிடக்கூடும்

நோன்பை முறிக்காத செயல்கள்:

வேண்டுமென்று என்றில்லாமல் மறதியாக சாப்பிடுவது, குடிப்பது

கணவின் மூலம் விந்துவெளிப்படுதல்

இரத்தப் பரிசோதனைக்காக குறைவான இரத்தம் எடுத்தல்

சுயவிருப்பமின்றி காயம், பல் பிடுங்குதல் மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் தானாக வெளியாகுதல் (மேற்கண்டவைகளை மறதியானால் அல்லாமல் வேண்டுமென்றே செய்தால் நோன்பு முறிந்துவிடும்.)

குளித்தல், நீந்துதல்

வெப்பத்தைத் தனித்துக்கொள்வதற்காக தண்ணீரை உடலில் தெளித்துக்கொள்வது

பல் துலக்குதல் (விரும்பத்தக்கது)

வாய் வழியாக உட்கொள்ளாத வகையில் வைத்தியம் செய்துகொள்வது (உ.ம். ஊசி போடுவது, கண், மூக்கு, காது ஆகியவற்றிக்கு சொட்டு மருந்து இடுதல்)

வயிற்றுக்குள் சென்றுவிடாத வகையில் உணவை ருசிபார்ப்பது

வாய்கொப்பளிப்பது

வயிற்றினுள் தண்ணீர் சென்றுவிடாத வகையில் பக்குவமாக நாசிக்கு தண்ணீர் செலுத்துவது.

வாசனைப் பொருட்களை உபயோகிப்பது, அவற்றை நுகர்வது

நேரம் தெரியாது, சூரியன் மறைந்துவிட்டதாக எண்ணி, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது பஜ்ரு நேரம் வரவில்லை என்று எண்ணி, பஜ்ர் நேரம் வந்ததற்குப் பின்னரோ, சாப்பிட்டு விட்டால் நோன்பு முறியாது. எனினும் சரியான நேரத்தை தெரிந்து விட்டால், உடனே உணவை நிறுத்திக் கொள்ள வேண்டும். 

கண்ணுக்கு சுருமா இடுதல்

நோன்பின் சுன்னத்துக்கள் 

ஸஹர் செய்தல்  விரைந்து நோன்பு துறத்தல்  துஆச் செய்தல்

ஸஹர் செய்வதன் சிறப்புக்கள்

ஸஹர் செய்யாமலும், நோன்பு திறக்காமலும் நீங்கள் தொடர் நோன்பு நோற்க வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் (ஸஹாபாக்களை) தடை செய்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அப்படி நோன்பு நோற்கின்றீர்களே? என ஸஹாபாக்கள் கேட்டார்கள். நான் உங்களைப் போன்றவரல்ல, எனக்குக் குடிக்கவும், உணவும் கொடுக்கப்படுகின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இன்னும் ஒரு அறிவிப்பில்: என் இறைவன் எனக்கு உணவளிக்கின்றான், மேலும் பானமும் புகட்டுகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

ஸஹர் உணவை உண்ணுங்கள், நிச்சயமாக ஸஹர் உணவில் அல்லாஹ்வின் அருள் இருக்கின்றது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

 நபி (ஸல்) அவர்கள் ஸஹர் செய்து கொண்டிருக்கும்போது ஒரு நபித்தோழர் நுழைந்தார். ஸஹர் உணவு உண்பது அல்லாஹ் உங்களுக்களித்த அருளாகும். அதை விட்டு விடாதீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

நீங்கள் ஸஹர் உணவை உண்ணுங்கள். அது அருள் நிறைந்த உணவாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

 நமது (முஸ்லிம்களின்) நோன்புக்கும், வேதம் கொடுக்கப்பட்டவர்களின் நோன்பிற்கும் உள்ள வித்தியாசம் ”ஸஹர் உணவு உண்பதுதான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸாயி)

ஸஹர் உணவென்பது நோன்பு நோற்பதற்காக இரவின் கடைசிப்பகுதியில் உண்ணும் உணவாகும். நோன்பு நோற்பவர் இந்த உணவை உண்பது ”வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்” இதனால் நோன்பாளி நோன்பைச் சிரமமின்றி நோற்பதற்கு வாய்ப்புள்ளது. ஸஹர் செய்யாமலும் நோன்பு திறக்காமலும் தொடர் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். இன்னும் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் நோற்கும் நோன்பிற்கும் நாம் நோற்கும் நோன்பிற்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் ஸஹர் உணவு உண்பதுதான். அவர்கள் ஸஹர் உண்ணாமலேயே நோன்பு நோற்பார்கள். ஆகவே, அல்லாஹ் நமக்களித்த அருளைப் பெற்று நபி (ஸல்) அவர்களின் சுன்னத்தை கடைபிடிப்போமாக!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘ஸஹர் செய்யுங்கள்; ஏனெனில் ஸஹர் உணவில் பரக்கத் உள்ளது’ (புகாரி, முஸ்லிம்)

இரவின் கடைசி வரை ஸஹர் செய்வதை பிற்படுத்துவது சுன்னத்தாகும்.

பர்ளான நோன்பு நோற்கும் விசயத்தில் பஜ்ர் உதயமாவதற்கு முன் நோன்பிற்குரிய நிய்யத்தை வைத்துக்கொள்வது கடமையாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘யார் நோன்பு நோற்க பஜ்ருக்கு முன்னால் நிய்யத்தை சேர்த்து வைக்கவில்லையோ அவரது நோன்பு கூடாது’ (அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி), ஆதாரம் : அபூதாவுது, திர்மிதி, நஸயீ)

நோன்பின் நிய்யத்தை 
 (எண்ணம்) வைப்பது உள்ளத்தில் தான்! வாயால் அல்ல!

நோன்பாளிகள் தவிர்ந்துக்கொள்ள வேண்டியவைகள் 

யார் கெட்ட, பொய் பேச்சுக்களையும், அதை செயல்படுத்துவதையும் விட்டுவிடவில்லையோ அவன் நோன்பு நோற்று அவனது சாப்பாட்டையும் குடிப்பையும் விட்டு பசியில் இருப்பதனால் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை!’ (புகாரி)

நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் அதிகம் துஆ கேட்கவேண்டும்

 “நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் துஆ மறுக்கப்படமாட்டாது” (இப்னுமாஜா)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ” மூன்று துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும். நோன்பாளியின் துஆ, அநீதியிழைக்கப்பட்டவனின் துஆ, பயணியின் துஆ” (பைஹகி)

 நோன்பு திறந்தவுடன் கூறவேண்டிய துஆ  ‘தஹபள் ளமவு வப்தல்லதில் உரூக் வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’

பொருள்: தாகம் தனிந்தது. நரம்புகள் நனைந்தன. அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்துவிடும்.

 நோன்பு திறக்க  கனிந்த பேரித்தம் பழம் மூலம் நோன்பு திறப்பது சுன்னத் ஆகும். அது கிடைக்காவிடில் காய்ந்த பேரீத்தம் மூலமும் அதுவும் கிடைக்காவிடில் தண்ணீர் மூலமும் அதுவும் கிடைக்காவிடில் கிடைப்பதைக்கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.

ரமலான் இரவுத் தொழுகையின் (தராவீஹ்)  ‘எவர் ரமலான் இரவில் ஈமானுடனும் நற்கூலி கிடைக்கும் என்ற எண்ணத்துடனவரது முன் சென்ற பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படுகின்றன’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  (புகாரி, முஸ்லிம்)