Thursday, 19 December 2024

பூரியான் பாத்திஹா

*பூரிப்புடன் ஓதுவோம் 
பூரி ஃபாத்திஹா*

புனித ரஜப் மாதத்தில் 
இமாம் ஜஃபர் ஸாதிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் நினைவைப் போற்றி ஃபாத்திஹா ஓதும் வழமை நம் முன்னோர்களால் நடைமுறைப் படுத்தப்பட்டு இன்றளவும் தொடர்ந்து வருகிற ஒன்றாகும். 

இமாம் அவர்களின் சீரிய வரலாற்றின் சில சிறப்பு அம்சங்களை தெரிந்துக் கொள்வோம். 

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிவந்த இமாம்களில் ஆறாவது இமாமான ஜஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 83 ரபீவுல் அவ்வல் மாதம் பிறை 17 திங்கள் இரவு பிறந்தார்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்புப் பேரர் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகனார் அலி ஜெயினுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களது மகனார் பாக்கிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களது மகன் இமாம் ஜஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு ஆவார்கள்.

அன்னையின் பெயர் உம்முபர்வா என்பதாகும். அவர்கள் ஸெய்யிதினா அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன் முஹம்மத் ரலியல்லாஹு அன்ஹு, அவர்களின் மகன் காஸிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளாவார். 

காஸிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸெய்யிதினா அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மற்றொரு மகன் அப்துற்றஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகள் அஸ்மா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை மணமுடித்தே உம்மு பர்வாவை ஈன்றெடுத்தார்கள். 

முஹம்மது பாகிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், தமது குழந்தைக்கு பெயர் சூட்டுமாறு தம் தந்தை இமாம் அலி ஜைனுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை வேண்டி நின்றார்கள் . அக் குழந்தைக்கு ஜஃபர் எனும் அழகுத் திருப்பெயரை சூட்டி மகிழ்ந்தனர்.

பிற்காலத்தில் உண்மைக்கு உறைவிடமாய் விளங்கிய இவர்களின் திருப் பெயரோடு ஸாதிக் என்னும்(உண்மையாளர்) என்ற பெயரும் ஒருங்கிணைந்து உலகம் முழுவதும் பெயர் பெற்றது.

கல்வி

தம்முடைய சிறு வயதில் தம் அருமை பாட்டனார் இமாம் ஜைனுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமே இறைவனின் திருமறையையும், நபிகளாரின் அருள்மொழிகளையும் கற்றுத் தேர்ந்தனர்.

 இவர்களுக்கு 11 ஆண்டும் 10 மாதமும் எட்டு நாட்களும் நிறைவுற்ற போது இவர்களின் பாட்டனார் இமாம் ஜைனுல் ஆபிதீன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மறைந்தார்கள். 

பின்பு இவர்களுக்கு இவர்கள் தந்தையே இறைஞான செல்வங்களை வாரி வாரி வழங்கினர்.

 தமது 31வது வயதில் இமாமின் பீடத்தில் அமர்ந்த இவர்களின் புகழ் எட்டுத்திக்கும் பரவியது. இவர்களிடம் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து கல்வி பயின்றனர்.


 சூபிச ஆடை

 இமாம் ஜாபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் ஆன்மிக பெரியார்கள் எல்லாம் இவ்வுலகில் குறைவான சுகத்துடனே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மெலிதான ஆடைகளை அணியாமல் முரட்டுத்தனமான ஸூஃப் என்று சொல்லப்படும் ஆடைகளையே அணிவார்கள். இதனால் தான், அவர்களுக்கு ஸுஃபியாக்கள் என்று சொல்லப்படுகிறது என்றும் ஒரு கருத்து உண்டு.

பெரும் செல்வந்தராக இருந்த இமாம் ஜஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் உயர் ரக ஆடைகளே அணிவார்கள். அதைக் கண்ட ஒருவர் நீங்கள் ஆன்மிக பெரியாராக இருந்தும் இவ்வுலக சுகத்திற்கு ஆசைப்படுகிறீர்களே என்றார். 

 இமாம் அவர்கள் தாம் அணிந்திருந்த சட்டையை கழற்றினார்கள். உள்ளே, முரட்டுத்தனமான கம்பளி ஆடையையே அணிந்திருந்தார்கள்.

அவர்கள் சொன்னார்கள் அல்லாஹ் எனக்கு செல்வத்தை அளித்திருக்கிறான். நான் எளிய ஆடையை அணிந்து சென்றால் யாரும் என்னிடத்தில் உதவி கேட்க மாட்டார்கள். அதே நேரத்தில் குறைவான சுகம் பெற வேண்டும் என்பதற்காகத் தான் முரட்டு ஆடையை உள்ளே அணிந்து இருக்கிறேன் என்றார்கள்.

அறிவுரை

தம் மாணவர்களை நோக்கி, ‘நீங்கள் பயபக்தி உடையவர்களாகவும், அமானிதத்தை நிறைவேற்றக் கூடியவர்களாகவும், மக்களிடம் நன்முறையில் பழகுபவர்களாகவும், சுருக்கமாகப் பேசக் கூடிய சன்மார்க்க பிரசாரகர்களாகவும் திகழுங்கள்’ என்று கூறினார்கள்.

அதற்கு மாணவர்கள், சுருக்கமாக கூறி மக்களின் மனதை எவ்வாறு தொடுவது?’ என்று கேட்டனர். அதற்கு இமாம் அவர்கள்’ நீங்கள் இறைக்கட்டளைக்கு பணிந்து நேர்வழியில் நடப்பின் அதிகமாகப் பேச வேண்டியதில்லை. உங்களின் செயலே பெரும் முழக்கம் செய்துவிடும். அதுவே பெரும் பிரகாசமாகிவிடும்’. என்று மறுமொழி கூறினார்கள்.

இனிய குணம் 

இனிய குணமும் அழகிய பண்பும் வாய்க்கப் பெற்ற இமாம் அவர்கள், தமக்கு தீங்கு செய்தவர்களுக்கும் நல்லதே செய்யும் பண்பு பெற்று விளங்கினர். 

தம் உறவினர் ஒருவர் தம்மை இழிவாகப் பேசிய போதும், அவர்களின் கஷ்டநிலைக்கு அவர்களுக்குத் தெரியாமலேயே உதவி செய்து வந்தார்கள். 

ஒருவர் வந்து தங்கள் சிறிய தந்தையின் மகன் தங்களை கண்டபடி ஏசுகிறான் என்று சொன்னார்கள். உடனே அவர்கள் இரண்டு ரக்அத் தொழுது இறைவனிடம், ‘இறைவனே நான் அவரை மன்னித்து விட்டேன். எனவே நீயும் அவரை மன்னித்து விடுவாயாக! என்று வேண்டினர்கள்.

 இதுகண்டு அந்த நண்பருக்கு வியப்பு ஏற்பட்டது. இமாம் அவர்கள் அவரை நோக்கி, ‘நம்மை ஒருவர் ஏசிவிடின் அதற்கு நாம் எழுபது விதங்களில் நற்காரணங்களை கற்பிக்க வேண்டுமேயன்றி, அவரை நாம் திரும்பவும் ஏசி விடக் கூடாது. அதற்கு நற் காரணம் ஒன்றையேனும் நாம் காணாவிடில் அதற்கு ஏதேனும் நாம் அறியாமல் நற்காரணம் இருக்கவேண்டும் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்’ என்று அருள்மொழி கூறினர்.

 இமாம் அபூஹனீஃபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இமாம் ஜஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பைஅத் என்னும் ஞானத்தீட்சைப் பெற்று அவர்களிடம் இரண்டு வருடங்கள் ஞானப் பயிற்சியில் இருந்தார்கள்.

ஒருவர் அபூஹனீஃபா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் தங்களின் வயது என்ன என்று கேட்டபோது இரண்டு வயது என்றார்கள்.

அதைக் கேட்ட அந்த நபர் ஆச்சரியப்பட்டப் பொழுது அதைத் தெளிவு படுத்திய இமாமவர்கள் நான் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களிடம் இரண்டு வருடம் பயின்றேன் அதைத்தான் நான் இவ்வாறு குறிப்பிடுகின்றேன் அந்த 2 வருடம் மற்றும் இல்லாவிட்டால் நான் அழிந்து போய் இருப்பேன் என்று கூறினார்கள்

ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களை அணுகி அறிவுரை பெற்று ஆன்மீகப் பரிபக்குவம் பெற்றவர்களில் சுல்தானுல் ஆரிபீன் அபூயஜீத் பிஸ்தாமி ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர். 

நான் நானூறு ஆசிரியர்களை அணுகி ஆன்மிகக் கல்வி பயின்றுள்ளேன். ஆனால் நான் ஜஃபர் சாதிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை சந்திக்காவிடின் ஒரு முஸ்லிமாகி இருக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்கள்.

பாதிரியார்களிடம் 

ஒரு முறை ஹஜ்ரத். இமாம் ஜஃபர் ஸாதிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு ஊருக்கு போய்க்கொண்டு இருந்த போது, மாபெரும் கிறிஸ்தவ பாதிரிமார்கள் கூட்டம் நடந்து கொண்டு இருந்தது

சுமார் ஆயிரம் பாதிரியார்கள் கலந்துகொண்ட கூட்டம் அது, தலைமை பாதிரி, இமாம் அவர்களை அழைத்து இஸ்லாம் கூறும் சொர்க்கத்தின் அமைப்பில் தனக்கு மூன்று சந்தேகங்கள் இருப்பதாலும் அதனை இமாம் அவர்கள் தீர்த்து வைக்க வேண்டும் என்றும் கேட்டார். இமாம் அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டார்கள்.

முதல்சந்தேகம்.:-

சொர்க்கத்தில் ஒரு மரம் இருப்பதையும் அதில் அனைத்து சொர்க்கவாசிகளும் எவ்வளவு கனிகளைப் பறித்தாலும் கனிகள் குறைவதே இல்லை என்று உங்கள் மதம் கூறுகிறதே அது நம்பும்படியாகவா இருக்கிறது,,,,,,?

அல்லாஹ்வால் முடியும் என்று கூறாமல், புரியும்படியாக தகுந்த சாத்தியங்களுடன் பதில் கூறுங்கள் என்றார் பாதிரி..! இமாம் அவர்கள் அமைதியாகக்கூறினார்கள்.

மிக எளிமையான பதில்தான்,, ஒருமெழுகுவர்த்தியில் எத்தனை மெழுகுவர்த்திகளை ஒளி ஏற்றினாலும் முதல் மெழுகுவர்த்தியில் ஒளி குறைவதில்லையே, பாதிரியார் புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டார்,,,,

அடுத்த கேள்வி,,,,,:- சொர்க்கத்தில் உள்ள சொர்க்க வாசிகள் எதை உண்டாலும் எவ்வளவு உண்டாலும் மலஜலம் கழிப்பதில்லையாமே அதெப்படி சாத்தியம்?

 இமாம் அவர்கள் பதிலளித்தார்கள்.
 தாயின் வயிற்றிலிருக்கும் சிசுவுக்கும் உணவளிக்கப்படுகிறது. அது மலஜலம் கழிக்கிறதா என்ன.

உலக உதாரணங்களைக் கொண்டு பதிலளிக்கப்படுவதில் தலைமை பாதிரிக்கு திருப்தி. முகத்தில் சந்தோஷம்.

மூன்றாவது சந்தேகத்தையும் தீர்த்து வையுங்கள்:- சொர்க்கத்தில் ஒரு சுனை இருக்கிறதாமே,,,, அதில் அறுசுவை நீரும் கிடைக்குமாமே ஒரே சுனையில் அதெப்படி முடியும்,,,

இமாம் அவர்கள் சொன்னார்கள். 

மனிதனின் கண்ணீர் உவர்ப்பு, உமிழ்நீர் இனிப்பு, சிறுநீர் காரம், மலம் வேறு சுவை, இதெப்படி ஒரே உடலில் சாத்தியமோ அப்படித்தான் இதுவும்.

பதில்களைக்கேட்ட அத்தனை பாதிரிகளுக்கும் ஆச்சர்யம், திருப்தி. சபையில் ஒரே ஆரவாரம். அவ்வளவுதான் ஒருவர் பின் ஒருவராக ஆயிரம் பாதிரிகளும் இமாம் அவர்களின் கையை பிடித்து மாணவர்களாக இணைந்து கொண்டார்கள்

சொர்க்கத்து உணவு

சேக் மொகுதும் என்பவர்கள் அறிவிக்கிறார்கள்:

 ஒருமுறை கஃபாவின் அருகில் உள்ள ஆபூ குபைஸ் என்ற மலைக் குன்றின் மீது ஒரு அழகான மனிதர் இறைவணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை கண்டேன். அவர்கள் அருகில் நானும் சென்றேன். அந்த அழகிய மனிதர் நீண்ட நேரம் இறைவனின் தியானத்திலே இருந்தார்கள். இறுதியாக இறைவா! நான் நோன்பு திறக்க உணவு தருவாயாக எனது ஆடையை பழையதாகிவிட்டது புதிய ஆடை தருவாயாக என்று பிரார்த்தித்தார்கள். என்ன அதிசயம் வானத்திலிருந்து திராட்சைப் பழங்களும் புதிய இஹ்ராம் ஆடை ஒன்றும் வந்தது, நான் உடனே அவர்களிடம் சென்று இந்த உணவில் எனக்கும் பங்கு உள்ளது. நீங்கள் துஆ கேட்டபொழுது நான் ஆமீன் என்று சொன்னேன் எனவே தான் எனக்கும் அதில் பங்கு உள்ளது என்றேன் என்று கூறினேன் நானும் இந்த உணவைக் கொண்டு நோன்பு திறக்கலாமா என்று அனுமதி கேட்டேன் 

அவர்கள் இன்முகத்துடன் தாராளமாக வாருங்கள் என்று அழைத்தார்கள் .விண்ணிலிருந்து வந்த பழங்கள் மிகவும் சுவையாக இருந்தது எடுக்க எடுக்க வந்து கொண்டே இருந்தது குறையவில்லை

பின்னர் அந்த புதிய ஆடையை உடுத்திக் கொண்டு பழைய ஆடையை தோளில் போட்டுக் கொண்டார்கள் நாங்கள் இருவரும் மஃரிப் தொழுதுவிட்டு உம்ராவிற்கான தவாஃப் செய்ய புறப்பட்டோம். 

அப்பொழுது ஒரு நபர் இந்த ஆடை புதிதாக உள்ளதே என்று அவர்களிடம் கூற உடனே அதைக் கழற்றி பழைய ஆடையை மீண்டும் உடுத்திக் கொண்டார்கள். அந்த புதிய ஆடையை அவருக்கு அன்பளிப்புச் செய்தார்கள். 

உடனே நான் அந்த ஆடையை பெற்ற மனிதரிடம் இந்த ஆடையை உங்களுக்கு அன்பளிப்புச் செய்த பெரியவர் யார்? என விசாரித்தேன். மிகவும் ஆச்சரியத்துடன் இவர்களை உங்களுக்கு தெரியாதா இவர்கள் தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய வாரிசான இமாம் ஜஃபர் ஸாதிக் ரலியல்லாஹு அன்ஹு என்று கூறினார்கள்.

இத்தகைய சிறப்பு மிக்க மனிதர்கள் அத்தகைய குடும்பத்தில் தான் உதிக்க முடியும் என கூறிக்கொண்டார்கள்

அரசர்கள் பொறாமை

அப்பாஸிய கலீபா மன்ஸுர் அவர்களுக்கு இமாம் அவர்களின் செல்வாக்கு உயர்ந்து வருவதைக் கண்டு அவர்கள் மீது வெறுப்பு ஏற்படலாயிற்று. அவர்களின் ஆதரவாளர்களில் சிலர் அப்பாஸிய கிலாபத்தை எதிர்த்து புரட்சி செய்வதையும், ஈராக் மக்கள் ‘ஜகாத்’ பணத்தை சேகரித்து அவர்களுக்கு அனுப்பி வைப்பதையும் கண்டு மன்னர் பொறாமையால் வெந்து அவர்களை ஒழித்துக் கட்ட தீர்மானித்து, ஹிஜ்ரி 147ம் ஆண்டு ஹஜ் செய்ய மக்கா வந்தபோது ஹஜ் கடமையை முடித்து விட்டு மதீனா நகரம் வந்தவுடன் இமாம் அவர்களை அழைத்து வர தம் அமைச்சர் ரபீஉவை அனுப்பினார். ஆனாலும் மன்னரால் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டதை நிரூபிக்க முடியவில்லை.

எனவே அவர்களின் மாண்பினைப் போற்றி, அவர்களுக்குப் பரிசுகள் கொடுத்து அனுப்பிவைத்தார்.

 ஆனாலும் இமாம் அவர்கள் மீது மன்னர் கொண்ட குரோதம் நீங்கவில்லை. மதீனாவில் அமைதியாக வணக்க வழிபாடுகளில ஈடுபட்டிருந்த இமாம் அவர்களை பக்தாத் அழைத்து வரச்செய்தார்.

 இமாம் அவர்கள் அரண்மனைக்குள் நுழைந்ததும், மன்னர் அவர்களை வரவேற்று உபசரித்து அவர்களின் வேண்டுகோள்படி மதீனாவிற்கே அனுப்பி வைத்தார்.

மன்னர் சொன்னதற்கு நேர் மாறாக நடந்து கொள்வது பற்றி அமைச்சர் ரபீஉ கேட்டபோது, இமாம் அவர்கள் அரண்மனைக்குள் நுழைந்தபோது அவர்களின் தலைமேல் பெரும் பாம்பு படம் எடுத்து என்னை எச்சரிக்கை செய்வது போல் இருந்ததை கண்டு மருண்டு விட்டேன் என்றார்.

பின்னர் ஒருநாள் ஒற்றர் படைத் தலைவன் முஹம்மது பின் சுலைமானை அழைத்து, அவன் காதோடு காதாக மன்னர் ஏதோ சொல்ல அவன் அடுத்த கணம் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தான். பின் மதினா சென்று இமாம் அவர்களை அடிக்கடி சந்தித்து அறிவுரை கேட்கும் வழக்கமுடையவன் போல் மாறினான்.

மறைவு

ஒருநாள் ஹிஜ்ரி 148 ரஜப் பிறை 15 தமக்கு நஞ்சு ஊட்டப்பட்ட உணவால் முடிவு நெருங்கிவிட்டதை அறிந்து தமது மகன் மூஸல் காழிம் அவர்களை அழைத்து அறிவுரை பகர்ந்தார்கள். தம் நண்பர்கள், மாணவர்களுக்கு நல்லுரைகள் நல்கி விடைபெற்றார்கள்.

அவர்கள் ஹஜ் செய்தபோது அணிந்த இஹ்ராம் துணி மற்றும் அவர்களிடமிருந்த இமாம் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தலைப்பாகைத் துணியையும் கொண்டு அவர்களுக்கு கஃபனிட்டு ஜன்னத்துல் பகீஃயில் அவர்களின் தந்தையார், பாட்டனார் ஆகியவர்களின் அடக்கவிடத்திற்கு அண்மையில் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

நன்றி: அல் அஸ்ரார் மெய்ஞ்ஞான மாத இதழ் 
9841567213

ஓடுக்கத்துபுதன்

ஆரிஃபீன்களின்
 பார்வையில் ஒடுக்கத்துப் புதன்
   ஆருயிர் நபிகளாருக்கு இறுதிநோய் ஆரம்பித்த, நபிமார்களுக்கு   சோதனைகள் துவங்கிய ,முந்தைய கூட்டத்தார்கள் அழிக்கப்பட்ட, கடும் நோய்கள் தொற்றுகின்ற,கொடிய
(நஹ்ஸ்)கெட்ட தினமே,ஸஃபர் மாதத்தின் (ஒடுக்க)இறுதி புதன்கிழமை .
     காறணகாரியமான இவ்வுலகின் நிகழ்வைகளை அவதானித்த ஆரிஃபீன்கள்,அன்று செய்யவேண்டிய ஓதுதல்களையும் துஆக்களையும் வழங்கிச் சென்றுள்ளனர்.
       ஸபர் மாதத்தின் கடைசிப் புதனில் , மூன்று லட்சத்து  இருபதாயிரம் சோதனைகள்/பலாய்கள்  இறங்குவதாக,பல கிரந்தங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
        “ஒவ்வொரு வருடத்திற்கெனவும் அல்லாஹ்வால் ஏற்படுத்தப்படுகின்ற பலாய்கள், கஷ்டங்கள், சோதனைகள் *“லவ்ஹுல் மஹ்பூல்” பலகையிலிருந்து பூமியை அடுத்துள்ள முன் வானத்திற்கு* , அன்றுதான் இறக்கப்படுகின்றன”
   *44:3 &97:1 மறை வசனங்களை* நம்புபவர்கள், இந்த செய்தியை மறுப்பது, வினோதமாக உள்ளது.
          கீழ்க் காணும் திருக்குர்ஆனின் 7 வசனங்களை பீங்கானில்/மாவிலையில் எழுதி, தண்ணீரால் கரைத்து குடிப்பவர்களுக்கு,மேற்படி  சோதனைகள் ஏற்பட மாட்டாது- என்றும் இமாம்கள் பலர் கூறியுள்ளார்கள்.    
       “புதன் கிழமையில் சுவர்க்கத்து நீர் உலகத்து நீருடன் கலப்பதால், *அன்று குளிப்பதும்* சிறந்தது.
      ஒவ்வொரு ரக்அத்திலும் ஃபாத்திஹா சூரா ஒதியபின் *“இன்னா அஃதைனா கல் கவ்தர்”  சூறத்தை 17 முறையும், “குல்ஹுவல்லாஹ்  சூறத்தை” 5 முறையும் , “குல்அஊது பிறப்பில் ஃபலக்” சூறா ஒரு முறையும் “குல் அஊது பிரப்பின்னாஸ்”சூறா  ஒரு முறையும் ஓதி,4ரக்அத்* தொழுபவர், அந்த வருடம் முழுவதும்  சகல பலாய்களில் நின்றும் பாதுகாக்கப்படுவார்-என  ஸூஃபியாக்கள் குறிப்பிடுகின்றனர்.
    இந்த அற்புத  நிவாரணியை நமக்குக் கற்றுத்தந்த,அனைத்து தரீக்கத்தின்  ஷெய்குமார்களுக்கும்- குறிப்பாக *நக்ஷபந்திய்யா ஷைகுமார்களுக்கும், ஃபாத்திஹா* ஓதி துஆ செய்யவேண்டியது நமது கடமை.காறணம்,நக்ஷபந்திய்யா நிறுவனர்,ஷெய்க் பஹாவுத்தீன் வலியுல்லாஹ் அவர்கள்தான்,முதன்முதலில், இதனை பிரபல்யப்படுத்தியவர்கள்.இவர்களின் பிறப்பைக் குறித்தும்,குத்பு நாயகயவர்கள்,முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.
      7ஸலாம்கள்+துஆ வருமாறு:  
 بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
 
*سَلاَمٌ قَوْلاَ مِّنْ رَّبِّ رَّحِيْمٍ* 
 *سَلاَمٌ عَلَى نُوْحٍ فِى الْعَالَمِيْنَ.*
 *سَلاَمٌ عَلىَ اِبْرَاهِيْمَ.*  
  *سَلاَمٌ عَلَى مُوْسٰى وَهَارُوْنَ*. 
  *سَلاَمٌ عَلٰى اِلْيَاسِيْنَ*.  
  *سَلاَمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خَالِدِيْنَ.*  
*سَلاَمٌ هِيَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ.*
      
    *اَللّٰهُمَّ اَعْصِمْنَا مِنَ الْبَلآءِ وَدَرْكِ الشَّقَآءِ وَسُوْءِ الْقَضَآءِ وَشَمَاتَةِ الْآعْدَآءِ وَمَلْجُوْمِ الْوَبَآءِ وَمَوْتِ فُجْاءَةٍ وَمِنْ زَوالِ الْبَرَكَةِ وَالنِّعْمَةِ وَمِنَ الْبَرَصِ وَالْجُذَامِ وَالْجُبْنِ وَالْبَرْصَامِ وَالْحُمّٰى وَالشَّقِيْقَةِ وَمِنْ جَمِيْعِ الْاَمْرَاضِ وَالْاَسْقَامِ بِفَضْلِكَ وَجُوْدِكَ يَاذَالْجَلاَلِ وَالْاِكْرَامِ بِرَحْمَتِكَ يَااَرْحَمَ الرَّاحِمِيْنَ  وَصَلَّى اللهُ عَلىَ خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَعَلىَ اٰ لِهِ وَاَصْحَابِهِ وَسَلَّمْ وَالْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَا لَمِيْنَ اٰمِيْنَ* .۔۔۷
 பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்.

ஸலாமுன் கவ்லம் மின் ரப்பிர் ரஹீம்                                                                          ஸலாமுன் அலா நூஹின் ஃபில் ஆலமீன் 
ஸலாமுன் அலா இப்ராஹீம் 
ஸலாமுன் அலா மூஸா வ ஹாரூன் 
ஸலாமுன் அலா இல்யாஸீன் 
ஸலாமுன் அலைக்கும் திப்தும்     ஃபத்குலூஹா ஃகாலிதீன்
 ஸலாமுன் ஹிய ஹத்தா மத்லஇல் ஃபஜ்ர்...@7.
     ஒடுக்கத்துப்புதன் பற்றிய குறிப்புகள் ,நூற்றுக்கும் அதிகமாக கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளன.விரிவை அஞ்சி அவற்றின் பெயர்களை மட்டும் இறுதியில் கொடுத்துள்ளோம்.
    புதன் கிழமைக்கென , *பிரத்தியேக  தொழுகையை தொழுது வந்தார்கள், ஷாதலி* ஆண்டகை அவர்கள் .நாட்களின் துஆக்களை வகுத்துத் தந்த , *முஹ்யித்தீன் ஆண்டகையவர்களோ,புதனன்று மட்டும் அதனை 14தரம்* ,ஓதப்பணித்திருக்கிறார்கள்.
       ஆக,காதிரிய்யா ஷாதலிய்யா நகஷபந்திய்யா ஜிஸ்திய்யா ஷத்தாரிய்யா....தரீக்கின் ஷெய்குமார்களின் சத்திய  வழியை ,பற்றிப்பிடிப்போமாக!சங்கைக்குரிய அஹ்லுபைத்கள் பொருட்டினால் அதனை அடையப்பெறுவோமாக!!ஆமீன்!!!
ஆதாரங்கள்:
1.அல்குர்ஆன் 17:82 54:19
    41:16
2.முஜர்ரபாதுத்தைறபி/ 
    103
3.நிஹாயத்துல் அமல்/  
    திம்யாதி இமாம்/208
4.தப்ஸீர் ரூஹுல்
    பயான்/8/328 &9/324.
5.தப்ஸீர் துர்ருல் மன்தூர்
6.தப்ஸீர் ஜலாலைன்.
7.தப்ஸீர் பைழாவி
8.தப்ஸீர் ஆலூஸி
9.தப்ஸீர் ரூஹுல்
    மஆனி/27/119
10.தப்ரானி.

11.பைஹகி
12.இப்னுமாஜா
13.ஹாகிம்
14.தைலமி
15.இப்னுஹிப்பான்
16.ஸீரதுந்துபுலா
17.ஃபழாயிலுஷ்
      ஷுஹுரில்
      ஹிஜ்ரிய்யா/33-34
18.ஃபிர்தௌஸ்
19.அர்ரவ்ழஹ்
20.அல்பவாயித்.

21.ஸீரா இப்னுஹிப்பான்
22.ஹயாத்துல்ஹைவா 
      ன்/120/208
23.ஜவாஹிருல் ஃகம்ஸா.
24.அஸ்ரார்
25.ஃபுயூளாதுர்ரப்பானிய்
      யா
26.ஃபதாவா
      ஹதீதிய்யா/233
27.அஜ்மீர் நாயகத்தின்
      அவ்ராத் கிதாப்
28.முஃஜமுல் அவ்ஸாத்/
      தப்ரானி இமாம் 
29.நூர்நாமா
30.தொழுகை அடவு.

31.ஸிம்து ஸுப்யான்
32.மஆனி/ ஆலிமுல்அருஸ்
       நாயகம்.
33.sahebdargah.org
34.shumsmedia.org
35.sufimanzil.org
36.quthbiyamanzil.com
37.mohieddentv.com
38.moulaviabdurrahmangha 
     wsi-fb
39.kalwath nayagam
      thaika-notices.
40.qaathiriyyathul idroosiyya
      trust-clips.

tptc2022@gmail.com
2017.

shafimahlari9112

https://youtu.be/x-ScZ55LCGQ?feature=shared

மெளலிது

மௌலிது ஓதுவது பற்றி மகான்களின் மணி மொழிகள்
قال ابوبكر الصديق رضي الله عنه
من أنفق درهما علي قرائة مولد النبي صلي الله عليه وسلم كان رفيقي في الجنة

அபூபக்கர் ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்
கள் கூறினார்கள் அண்ணல் நபி 
 அலைஹி வஸல்லம் அவர்களின் மவ்லிதை ஓதுவதற்காக ஒரு "திர்ஹம்" செலவு செய்பவர் சொர்க்கத்தில் எனது தோழராக இருப்பார்.
قال عمر بن خطاب رضي الله عنه 
من عظم مولد النبي صلي الله عليه وسلم فقد أحيا الاسلام

உமர் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்  அவர்களின் மவ்லிதை கண்ணியப்படுத்தியவர்  இஸ்லாத்தை உயிர்ப்பித்தவராவார்.
قال عثمان رضي الله عنه 
من أنفق درهما علي قرائة مولد النبي صلي الله عليه وسلم فكأنما شهد غزوة بدر وحنين

உதுமான் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் மஹ்மூத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது மவ்லிதை ஓதுவதற்காக ஒரு "திர்ஹம்" செலவு செய்தவர் "பதுறு,ஹுனைன் போர் முனைகளில் கலந்து கொண்டவரைப் போலாவார்.
قال علي رضي الله عنه وكرم الله وجهه 
من عظم مولدالنبي صلي الله عليه وسلم وكان سببا لقرائته لايخرج من الدنيا الابالامان ويدخل الجنة بغير حساب

அலி ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் நாயகத் திருமேனி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பிறந்த தினத்தை கண்ணியப் படுத்தியவர், மவ்லிது ஓதக்கூடியவர் ஈமானுடனேயே மௌத்தாவார் சுவனத்தில் கேள்வி இன்றி பிரவேசிப்பார்.
قال حسن البصري رضي الله عنه
وددت لوكان لي مثل جبل أحد ذهبا لانفقته علي قرائة مولد النبي صلي الله عليه وسلم

ஹஸன் பஸரீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் எனக்கு உஹது மலைபோன்ற தங்கமலை இருக்குமாயின் 
 அனைத்தையும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மௌலிதை ஓதுவதற்காகவே செலவிடுவேன்.
قال معروف الكرخي قدس سره :
من هيأ طعاما لأجل قرائة مولد النبي صلي الله عليه وسلم وجمع اخوانا وأوقد سراجا ولبس جديدا وتبخر وتعطر تعظيما لمولد النبي صلي الله عليه وسلم حشره الله يوم القيامة مع الفرقة الاولي من النبيين وكان في أعلي عليين

மஃறூபுல் கர்கீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்
மௌலிது ஓதுவதற்காக உணவு தயாரித்து, நண்பர்களை ஒன்று சேர்த்து, விளக்கேற்றி வைத்து,புத்தாடை உடுத்தி,  நறுமணம் பூசி மௌலிதை கண்ணியப்படுத்துபவர் மறுமையில் 
 எழுப்பப்படும் முதல் பிரிவினரான நபிமார்களுடன் அவர்களை வல்ல நாயன் சேர்த்தருள்வான். உன்னதமான உயர் பதவிகளையும் அவர்கட்கு வழங்குவான்.

قال امام الشافعي رضي الله عنه :
من جمع لمولد النبي صلي الله عليه وسلم اخوانا وهيأطعاما وأخلي مكانا وعمل احسانا وصار سببا لقرائته بعثه الله يوم القيامة مع الصديقين والشهداء والصالحين ويكون في جنات النعيم

இமாம் ஷாபி ரழியல்லாஹு அன்ஹு  கூறினார்கள்
நபியவர்களின் மவ்லிதை ஓதுவதற்காக ஆட்களைச் சேர்த்து, உணவு சமைத்து நல்ல முறையில் அன்புடன் அமல்  செய்பவரை அல்லாஹுத்தஆலா சித்தீகீன்கள், ஷுஹதாக்கள் 
 ஆகியோரின் திருக்கூட்டத்தில் எழுப்புவான். இவர்கள் சுவனத்திலும் 
 அவர்களுடன் இருப்பார்.
قال سري السقطي رحمه الله :
من قصد موضعا يقرء فيه مولد النبي صلي الله عليه وسلم فقد فصد روضة من رياض الجنة لانه ماقصد ذلك الموضع الا لمحبة النبي صلي الله عليه وسلم

இமாம் ஸிர்ரியுல் ஸிக்தி ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்
ஒரு குறிப்பிட்ட இடத்தை மவ்லிது ஓதுவதற்கென 
 எண்ணி தேர்வு செய்துவைக்கும் நபர் சுவனத்தில் ஒரு 
 நந்தவனத்தை தெரிவு செய்தவர் போலாவார். 
 காரணம் அவர் அஹ்மது நபிமீதுள்ள அளவிலாத 
 அன்பின்காரணத்தினால்தானே ஓரிடத்தைத் தேர்வு செய்தார்.

قال الامام السيوطي رحمه الله:
مامن بيت اومسجد اومحلة قرئ فيه مولد النبي صلي الله عليه وسلم الا حفت الملئكة ذلك البيت اوالمسجد اوالمحلة وصلت الملائة علي أهل ذلك المكان وعمهم الله تعالي بالرحمة والرضوان

மவ்லிது ஓதப்படும் இடத்தினை மலாயிக்கத்துக்கள் சூழ்ந்து 
 கொள்கின்றனர். அவ்விடத்தில் உள்ளவர்கள் மீது ஸலவாத் 
 கூறுகின்றனர். அல்லாஹுத்தஆலா தனது திருப்பொருத்தம், 
 ரஹ்மத் ஆகியவைகளைக் கொண்டு அவ்விடத்தை சூழ்ந்து 
 கொள்கிறான்.

இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்
எந்த முஸ்லிமின் இல்லத்தில் மெளலிது 
 ஓதப்படுகின்றதோ அந்த இல்லத்தை தீயால் எரிதல்,மற்றும் 
 அனைத்து வகை சோதனைகள், கஷ்டங்களை விட்டும் அல்லாஹ் 
 பாதுகாக்கின்றான். அவ்வில்லத்தார்கள் மரணமடைந்து கப்றின் கேள்விகள் 
 அவர்களுக்கு இலேசாக்கப்படுகின்றன.

قال الامام فخر الدين الرازي رحمه الله :مامن شخص قرء مولد النبي صلي الله عليه وسلم علي ملح أوبر أوشيئ آخر من المأكولات الاظهرت فيه البركة وفي كل سيئ

யாராவது ஒருவர் ஏதும் தின்பண்டங்களை வைத்து மௌலிது ஓதுகிறாரோ,அவருக்கு அப்பொருளிலிருந்து பரக்கத்தை நல்குவான்.
அப்பண்டங்களை உண்பவருக்கு இறைவன் பிழை பொறுத்துக் கொள்கின்றான்.
நபிகள் கோமானின் வாழ்க்கை சரிதையைக் கொண்ட மௌலிது மஜ்லிசில் சிறிதளவு நீர் வைத்து ஓதி ஊதி குடிப்பவருக்கு ஆயிரம் வகை நிஃமத்துக்களும், பிரகாசமும், நூரும் அவரது உள்ளத்தில் 
 சேருகின்றன. ஆயிரம் வகை நோய் அவரை விட்டும் நீங்குகின்றன.
 தங்கத்தாலோ, வெள்ளியாலோ அல்லது வேறு உலோகங்களினால் செய்யப்பட்ட ஒரு நாணயத்தின் மீது மவ்லிதை ஓதி ஊதி அந்த 
 நாணயத்தை வேறு நாணயங்களுடன் சேர்த்து வைத்தால் 
 பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் 
 பரக்கத் அருள்மாரி பொழியும். வறுமை அணுகாது.
 ஆதாரம் : அந்நிஃமத்துல் குப்ரா, 
 இமாம் இப்னு ஹஜர் ஹைதமி கூறினார்கள்

நன்றி - அல் அஸ்ரார் மெய்ஞான மாத இதழ்
98415 67213

Monday, 30 January 2023

மனிதாமனிதா......

*மனிதா! அல்லாஹ் பொய் சொல்லவில்லை.*
*நீதான் அவனைப் புரிந்து கொள்ளவில்லை.*

*தொகுப்பு: ஷெய்குனா மிஸ்பாஹீ (மத்தல்லாஹு ழில்லஹுல் ஆலி)*
 
மனிதா! அல்லாஹ்வின் படைப்புக்களில் நீதான் சிறந்தவன். ஆயினும் இதை நீ உணராமல் இருக்கிறாய். விளங்காமல் இருக்கிறாய். 
أَتَـزْعُمُ أَنَّكَ جِـرْمٌ صَغِـيْـرٌ 
وَفِيْكَ انْطَوَى الْعَالَمُ الْأَكْبَرُ 

 நீ சிறிய படைப்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா? ஒரு முழம் அகலமும், நான்கு முழம் நீளமும் உள்ள ஒரு மனித கட்டையென்றா உன்னை நீ நினைத்துக் கொண்டிருக்கின்றாய்? உன் நினைப்பு தவறானது. நீ நினைப்பவன் போன்றவனல்ல நீ. நீ பெரிய பொக்கிஷம். பரந்து விரிந்த பெருங்கடல்.
مَا ظَهَرْتُ فِى شَيْئٍ كَظُهُوْرِيْ فِى الْإِنْسَانِ

 நான் மனிதனில் வெளியானதுபோல் வேறெதிலும் வெளியாகவில்லை. இது இறைவாக்கு. பரிசுத்த வாக்கு. இது பொய்யல்ல. நீதான் இதைப் புரியாமல் உள்ளாய். 

 இறைவன் படைத்த படைப்புக்கள் யாவும் அவனின் வேறுபடாத வெளிப்பாடுகளே! படைப்புகள் அனைத்துமாக அவனேதான் வெளியாகியுள்ளான். ஆயினும் அவன் மனிதனாக வெளியாகியது போல் வேறெதுவாகவும் வெளியாகவில்லை. இதனால்தான் படைப்புகளில் மனிதன் சிறந்தவனானான். மனிதனில் பெருமானார் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களே சிறந்தவரானார்கள். 
اَلْإِنْسَانُ سِرِّيْ وَأَنَا سِرُّهُ 

 மனிதன் எனது இரகசியம். நான் அவனின் இரகசியம். இதுவும் இறை வாக்குதான். اَلْإِبْنُ سِرُّ أَبِيْهِ தனயன் தந்தையின் இரகசியம். இது இறை வாக்கல்ல. இறைவனை அறிந்த மகான்களின் வாக்கு. 

 இவையாவும் சேர்த்து தருகின்ற தத்துவம் ஒன்றே ஒன்றுதான். அது பின்வருமாறு. 
 إِنَّا عَرَضْنَا الْأَمَانَةَ عَلَى السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَالْجِبَالِ فَأَبَيْنَ أَنْ يَحْمِلْنَهَا وَأَشْفَقْنَ مِنْهَا وَحَمَلَهَا الْإِنْسَانُ إِنَّهُ كَانَ ظَلُومًا جَهُولًا

 வானங்கள் மீதும், பூமியின் மீதும், மலைகள் மீதும் அமானிதத்தை நாங்கள் எடுத்துக் காட்டினோம். அவை அதை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டன. அதைப்பற்றி அவை அஞ்சின. எனினும் அதை மனிதன் சுமந்து கொண்டான். அவன் கடுமையாக அநீதி செய்பவனாகவும், கடுமையான அறிவிலியாகவும் ஆகிவிட்டான். (திருக்குர்ஆன் 33-72)

 மேலே இரகசியம் என்று கூறப்பட்டது மனிதன் சுமந்து கொண்ட அமானிதத்தையே குறிக்குமென்று ஸூபீ மகான்கள் கூறியுள்ளார்கள். 

 திருமறை வசனத்தில் வந்துள்ள “அல் அமானத்” என்ற சொல்லுக்கு “ளாஹிர்” வெளிரங்க அறிஞர்கள் அதாவது திருக்குர்ஆன் என்ற கடலில் நீருக்கு மேல் நீந்துபவர்களான அறிஞர்கள் ஒரு விளக்கமும், அக்கடலில் நீரின் உள்ளே நீந்துபவர்களான இறை ஞானிகள் இன்னொரு விளக்கமும் சொல்கிறார்கள். 

 வெளிரங்க அறிஞர்கள் கூறும் விளக்கம் திருக்குர்ஆன் விரிவுரை நூல்களில் இடம் பெற்றுள்ளதை பலர் அறிவர். ஆகையால் அவர்களின் விளக்கத்தை இங்கு கூறாமல் இறைஞான மகான்கள் கூறும் கருத்தை மட்டும் இங்கு எழுதுகிறேன். 

 வானங்களும், பூமியும் ஏற்க மறுத்து மனிதன் ஏற்றுக் கொண்ட அமானிதம் என்பது படைத்தவனுக்கும், படைப்புக்குமுள்ள தொடர்பு பற்றிய விளக்கம் என்றும், அதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் என்றும் ஞான மகான்கள் கூறுகின்றனர். 

 உயிரினங்களில் மனிதனால் மட்டுமே அந்த விளக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும். அவர்களிலும் நற்பாக்கியம் விதியாக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அது கிடைக்கும். அவர்கள்தான் வலீமார்களாவர். 

 எனவே, வலீமார்கள் இது தொடர்பாக எவ்வாறு விளக்கம் கூறுகிறார்கள் என்று கவனிப்போம். இப்போது நான் கூறப் போகும் விளக்கம் வஹ்ஹாபிகளான வழிகேடர்களுக்குப் புரியாத புதிராகவே இருக்கும். அவர்களிற் பலர் திறமையுள்ளவர்களாயிருந்தும் புரியாமற் போனதற்கான காரணம் “நஸீப்” என்ற விதியில்லாமையே.
اَلنَّصِيْبُ يُصِيْبُ وَلَوْ كَانَ بَيْنَ جَـبَلَـيْـنِ
اَلنَّصِيْبُ لَا يُصِيْبُ وَلَوْ كَانَ بَيْنَ شَفَتَيْنِ

 தலைவிதி கெட்டதாயின் இரு உதடுகளுக்கு இடையிலுள்ள விடயம் கூட நடக்காது. அது நல்லதாயிருந்தால் இரு மலைகளுக்கு இடையிலுள்ள விடயமாயினும் அது நடந்தே தீரும். 

 வஹ்ஹாபிகள் “நஸீப்” இல்லாதவர்கள். நாம் என்ன செய்யலாம். இக்காலத்திற்குத் தேவையானவர்களிற் சிலர் வஹ்ஹாபீகளாக இருப்பது எனக்கு வேதனையான விடயமே!
اللهم فقِّهْ من أحببتُه من الوهّابيّين فى أمر وحدة الوجود، وَأَرِهِ الْحَقَّ حقًّا وَارْزُقْهُ اتِّبَاعَه وأَرِهِ الْبَاطِلَ باطلا وارزقه اجْتِنَابَهُ، وعلّمه ما لم يعلم، وألهمه ما أشكل عليه، وائت به إلى فِنائنا ليذوق فَنَائَنَا، اللهم اصرف قلبه إلى كهف العارفين الواصلين، وقلّب قلبه كما قلّبت قلب عمر إلى دين الإسلام،

 இறைவனுக்கும், படைப்புக்குமுள்ள தொடர்பு العلاقة الذاتيّة என்று சொல்லப்படும். 

 இதை ஓர் உதாரணம் மூலம் கூறினால் இலகுவாக தெளிவு கிடைக்கும். தச்சனுக்கும், கதிரைக்கும் தொடர்பு உண்டு. கதிரைக்கும், மரத்துக்கும் தொடர்பு உண்டு. இவ்விரு வகைத் தொடர்புகளில் அல்லாஹ்வுக்கும் - படைத்தவனுக்கும், படைப்புக்குமுள்ள தொடர்பு கதிரைக்கும் மரத்திற்குமுள்ள தொடர்பு போன்றதேயன்றி கதிரைக்கும், தச்சனுக்கும் உள்ள தொடர்பு போன்றதல்ல. 

 தச்சனுக்கும், கதிரைக்குமுள்ள தொடர்பு அவன் கதிரையைச் செய்து முடிக்கும் வரையுள்ள தொடர்புதானேயன்றி நிரந்தரமான தொடர்பு இல்லை. தச்சன் கதிரையை செய்து முடிக்கும் வரைதான் அவனுக்கும், கதிரைக்கும் தொடர்பு இருந்தது. இது சில மணித்தியாலத் தொடர்புதான். அதோடு இந்த வகைத் தொடர்புக்கு இரண்டு வஸ்த்துக்கள் தேவை. ஒன்று தச்சன், மற்றது கதிரை. 

 ஆயினும் கதிரைக்கும், மரத்திற்குமுள்ள தொடர்புக்கு இரண்டு வஸ்த்துக்கள் தேவையுமில்லை. கதிரையும், மரமும் என்று சொல்லவும் முடியாது. ஏனெனில் இருப்பது மரம் மட்டுமேயாகும். கதிரைக்கு “ஹகீகத்” எதார்த்தமில்லை. கதிரையின் வடிவம் கலைந்தால் மரம் மட்டுமே மிஞ்சும். 

 படைத்தவனுக்கும், படைப்புக்குமுள்ள தொடர்பு தச்சனுக்கும், கதிரைக்குமுள்ள தொடர்பு போன்றதல்ல என்றும், கதிரைக்கும் மரத்திற்குமுள்ள தொடர்பு போன்றதென்றும் நான் குறிப்பிட்டதிலிருந்து படைத்தவனும், படைப்பும் பெயரளவில்தான் இரண்டு பொருட்கள் - வஸ்த்துக்களாக விளங்கப்படுகின்றனவேயன்றி எதார்த்தத்தில் இரண்டு பொருட்களே இல்லை. படைத்தவன் படைப்பின் தோற்றத்தில் உள்ளான். 

 மரமும், கதிரையும் போன்ற உதாரணங்கள் பல உள்ளன. அவற்றையும் உதாரணங்களாகக் கொண்டு சிந்திக்கலாம்.

 உதாரணமாக தங்கம், மோதிரம் போன்று. இவ்விரண்டுக்குமுள்ள தொடர்பு விட்டுப்பிரிய முடியாத தொடர்பாகும். இவ்விரண்டும் பெயரளவில்தான் இரண்டென்று விளங்கப்படுகிறதேயன்றி எதார்த்தத்தில் தங்கம் மட்டுமே உள்ளது. மோதிரத்திற்கு எதார்த்தமில்லை. எதார்த்தத்தில் மோதிரம் என்று ஒன்று இல்லவே இல்லை. எதார்த்தத்தில் இல்லாததை இருப்பதாக “அக்ல்” அறிவு சொல்வதால் மனிதன் ஏமாந்து, மருட்சியடைந்து எதார்த்தத்தில் இல்லாத பொருளை இருப்பதாக நினைத்து அதற்கு ஒரு பெயரும் சொல்லி அழைக்கிறான். இது அவனின் அறியாமையும், ஏமாற்றமுமாகும். 

 எதார்த்தத்தில் இல்லாத ஒன்றை இருப்பதாக அறிவதும், நம்புவதும், சொல்வதும் பொய்யேதான். மெய்யல்ல. இது பொய் சொல்வதாகவே ஆகும். 

 மனிதன் பொய்யுலகில் வாழ்வதால் பொய் சொல்லாமல் வாழவே முடியாது. 

 “எல்லாம் அவனே” என்று நம்புவதும், சொல்வதும் “ஷரீஆ”வுக்கு முரணானதென்று இத்துறையில் விளக்கம் குறைந்தவர்கள் தமது அறியாமை காரணமாகக் கூறலாம். ஆயினும் அவர்கள் தமது அறியாமைத் திரைகளை அகற்றி கலப்பற்ற “நிய்யத்”தோடு செயல்பட்டார்களாயின் சத்தியத்தைப் புரிந்து கொள்வார்கள்.

 “வஹ்ததுல் வுஜூத்” ஞானத்தைப் பகிரங்கமாக நானும், என்னுடனுள்ள மௌலவீமார்களிற் சிலரும் பறை சாற்றி வருகின்றோம். இந்த ஞானத்தை மனம் முரண்டாக எதிர்க்கும் போலி உலமாஉகளை சாடி எழுதியும், பேசியும் வருகிறோம். குறிப்பாக மௌலவீ ரிஸ்வீ அவர்களையும் சாடி எழுதியும், வருகின்றோம். 

 உலமா சபையில் இருக்கின்ற “பத்வா” குழு “தக்வா” இல்லாத “புத்வா” குழுவாகும். இந்தக் குழு தமது “புத்வா”வில் செய்துள்ள இருட்டடிப்புக்களை மக்களுக்கு புட்டுப் புட்டுக் காட்டியும் வந்துள்ளோம். வந்து கொண்டுமிருக்கிறோம். இந்த முல்லாக்கள் போல் பொறாமை கொண்ட உலமாஉகள் உலகில் எங்குமே தோன்றியிருக்கவும் மாட்டார்கள். இதன்பின் தோன்றவும் மாட்டார்கள். 

 இவர்கள் உலமாஉகளாயிருந்தும் கூட இப்படியொரு அநீதி செய்வார்களென்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. 

 நான் பேசி வருகின்ற இறையியல் தத்துவம் சாதாரணமானதல்ல. பலகோடி ரூபாய்கள் செலவிட்டும், பல நாடுகளுக்குச் சென்றும், பல இறையியல் மேதைகளைச் சந்தித்தும் பெற வேண்டிய இறை ஞானமாகும். தேடியலைந்து கற்றுக் கொள்ள வேண்டிய ஞானமாகும். உலமாஉகளிற் சிலர் தமது அறியாமையினாலும், வேறு சிலர் பொறாமையினாலும் இந்த ஞானத்தை கால் பந்தாக்கிவிட்டார்கள்.
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ، وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ 

பி.பி. உவைஸ் அதனி கேரளாதமிழில்: M.சிராஜுத்தீன்_அஹ்ஸனி

*பிறந்த குழந்தையின் ஒரு காதில் பாங்கும் மற்றொரு காதில் இகாமத்தும் கொடுப்பது பித்அத்தா....* 

நூற்றாண்டுகளாக உலக முஸ்லிம்கள் புண்ணிய காரியமாக செய்து வரும் அமல்தான்  பிறந்தவுடன் குழந்தையின் காதுகளில் பாங்கும், இகாமத்தும் கொடுப்பது

இது நான்கு மத்ஹபுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, 
அங்கீகரிக்கப்பட்ட ஒரு 
உன்னதமான செயலாகும்.

வஹாபிகளுக்கு இது ஒரு பித்அத்தான காரியமாக இருக்கிறது... 

பித்அத் ஒழிப்பு மாநாடு நடத்த இருப்பவர்கள் முஸ்லிம்கள் சாதாரணமாக செய்து வரும் நல்ல அமல்கள் ஒவ்வொன்றையும் பித்அத்தின் பட்டியலில் சேர்த்து வருகின்றனர்.. 

பிறந்த குழந்தையின் காதுகளில் பாங்கு, இகாமத் கொடுப்பதில் மார்க்கம் அங்கீகாரம் வழங்குகிறதா என்பது குறித்து பார்ப்போம்.

இமாம் திர்மிதி அபூ ராஃபியிலிருந்து  அறிவிக்கப்படும் ஹதீஸில் இவ்வாறு பார்க்க முடியும்..

"பாத்திமா பீவி (ரழியல்லாஹு அன்ஹா) அவர்கள் ஹசன் மற்றும் ஹுஸைன் (ரழியல்லாஹு அன்ஹுமா) ஆகியோரைப் பிரசவித்த போது நபியவர்கள் இரு குழந்தைகளின் காதில் பாங்கு கொடுப்பதை நான் கண்டேன்."

பிறகு இமாம் திர்மிதி அவர்கள் இந்த ஹதீஸ் ஹஸனும் மற்றும் ஸஹீஹ் என்றும் கூறுகிறார்கள்.

 1514 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، قَالاَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللهِ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ قَالَ: رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذَّنَ فِي أُذُنِ الحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ بِالصَّلَةِ.
 هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ

இந்த ஹதீஸை இமாம் அஹ்மத் (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) முஸ்னதிலும் (27186), இமாம் அபூதாவூத் ஸுனனிலும் (5105), இமாம் தப்ரானி முஃஜமுல் குப்ராவிலும் (926), இமாம் ஹாக்கீம் முஸ்தத்ரக்கிலும் (4827) 
மற்றும் இமாம் பைஹக்கி (8252) 
ஷுஃபுல் ஈமானிலும் (8252)  அறிவித்துள்ளனர். .  
இன்னும் பல முஹத்திஸுகள் அவர்களின் நூல்களில் இந்த ஹதீஸை மேற்கோள் காட்டியுள்ளார்கள்... 

இத்தகைய ஹதீஸ்களின் வெளிச்சத்தில் தான் பிறந்த குழந்தையின் காதுகளில் பாங்கும், இகாமத்தும் கொடுப்பது சுன்னத் என்று கடந்த கால  நூற்றுக்கணக்கான  இமாம்கள் தங்களது கிரந்தங்களில் பதிவு செய்துள்ளனர். 

இவர்கள் ஒன்றும் பார்க்காத ளயீஃபும், பித்அத்தும் வஹாபிகளுக்கு எங்கிருந்து கிடைத்தது.. 

இமாம் திர்மிதியை தவிர இன்னும் கூடுதலாக, இந்த ஹதீஸை முஹத்திஸுகளான  இமாம் ஹாக்கீம் முஸ்தத்ரக்கிலும், 
இமாம் அப்துல் ஹக் அஹ்காமிலும், 
இமாம் பகவி அவர்கள் மஸாபிஹுஸ்ஸுன்னாவிலும் (3/146), இமாம் இப்னு மாலிக் ஷர்ஹுல் மஸாபிஹுலும்  (4/ 533) 
இமாம் முள்ஹிரி அல் மஃபாத்தீஹிலும்
(4/595)  இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி துஹ்ஃபத்துல் முஹ்தாஜிலும் (9/376)  பதிவு செய்துள்ளனர்.. 

இமாம் திர்மிதி மேற்கூறிய  ஹதீஸ் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று அறிவித்துள்ளதை மற்று பல இமாம்கள்  தங்கள் புத்தகங்களில் ஒப்புதல் அளித்துள்ளனர்.

 சில உதாரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
*************************************************

1. الأذكار للإمام النووي (286)
2. البدر المنير للإمام ابن الملقن (9/ 348)
3. مشكاة المصابيح للإمام الخطيب الشربيني  (2/ 1209) 
4. ميزان الاعتدال للحافظ الذهبي (2/ 354)
5. ذخائر العقبى في مناقب ذوي القربى للإمام محب الدين الطبري (120)
6. مرقاة المفاتيح شرح مشكاة المصابيح للإمام ملا علي القاري (7/ 2691)
7. أسنى المطالب في شرح روض الطالب للإمام زكريا الأنصاري (1/ 549)
8. الغرر البهية في ش رح البهجة الوردية للإمام زكريا الأنصاري (5/ 173)
9. فتح الوهاب بشرح منهج الطلاب للإمام زكريا الأنصاري (2/ 234)
10. حدائق الأنوار ومطالع الأسرار في سيرة النبي المختار للإمام بحرق الحضرمي (508)
11. تاريخ الخميس في أحوال أنفس النفيس للإمام حسين الدِّيار بَكْري (1/ 418)
12. كفاية النبيه في شرح التنبيه للإمام الرفعة (8/ 132)
13. كنز الراغبين للإمام المحلي (4/ 257)
14. حاشية الجمل على شرح للإمام الجمل (5/ 267)
15. حاشية البجيرمي على شرح المنهج للإمام البجيرمي (4/ 303)
16. الوابل الصيب من الكلم الطيب لإبن قيم الجوزية (ص: 131)
17. مواهب الجليل في شرح مختصر خليل للإمام الحطاب الرُّعيني المالكي (1/ 434)
18. شرح منتهى الإرادات للإمام منصور البهوتي الحنبلي(1/ 130)
19. كشاف القناع عن متن الإقناع للإمام منصور البهوتي الحنبلي  (1/ 234)

இந்த பழங்கால அறிஞர்கள் அனைவரும் திர்மிதி ஹஸன் என்றும் ஸஹீஹ் என்றும் சொல்லியதை அங்கீகரித்தும்,சரி வைத்தும் உள்ளனர்
இவர்கள் அத்தனை பேரையும் வெளிக் காலால் உதைத்துதான் பித்அத் ஒழிப்பு பிரசுரத்தில் இந்த செயலை பித்அத்தின் பட்டியலில் சேர்த்துள்ளனர்.... 

 
திர்மிதியின் ஹதீஸ் பலவீனமானதா......?

திர்மிதியின் மேற்கூறப்பட்ட ஹதீஸின் அறிவிப்பாளரில் ஆஸிமுப்னு வாயில் என்ற ராவியை சிலர் ஜர்ஹ் செய்வதால் இந்த ஹதீஸின் ஏற்றுக்கொள்ளும் தன்மை பாதிக்கப்படாது. 

இமாம் இப்னுல் முலக்கின் கூறுகிறார்கள்:

ஆஸிமுப்னு வாயில் என்ற ஒரு அறிவிப்பாளர் இருந்த போதிலும் இந்த ஹதீஸ் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று முஹத்திஸ்கள் கூறியது அநேகமாக இந்த ஹதீஸ் அவர்களுக்கு வேறு அறிவிப்புகள் மூலம் நிறுவப்பட்டிருக்கலாம்.
(அல்-பத்ருல்-முனீர் 9/348)

ஸலஃபி அறிஞரான அல்லாமா முபாரக் ஃபுரி மேலும் தெளிவுபடுத்துகிறார்கள்

ஆஸிமுப்னு வாயில் என்ற  ஒரு அறிவிப்பாளரின் ஜர்ஹ் இமாம் இப்னுஸ்-ஸுன்னி ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் மூலம் அறிவித்த ரிவாயத் கொண்டு பரிகரிக்கப்பட்டுவிட்டது 
(துஹ்ஃபத்துல் அஹ்வதி 5/90).
இனி இந்த ஹதீஸ் பலவீனமானது என்று நிலைநாட்டினால் கூட ஃபழாயிலுல் அஃமாலில் ளயீஃபான ஹதீஸைக் கொண்டு அமல் செய்வதில் பிரச்சினை இல்லை என்பது அறிஞர் உலகில் சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவப்பட்டுள்ள விஷயமாகும்.. 

இமாம் இப்னுல் ஸுன்னி ரிவாயத்: இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவருக்கு குழந்தை பிறந்தால், அவர் வலது காதில் பாங்கையும் இடது காதில் இகாமத்தையும் கொடுக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்தால், குழந்தையைத் தொட்டு ஜின்களின் தீவினைகள்
உயர்த்தப்படும்.

இமாம் இப்னுஸ்ஸுன்னி அமலுல்யவ்மி வல்லைலிலும் (578) இமாம் பைஹக்கி ஷுஃபுல் ஈமானிலும் (8254) 
மற்றும் பல முஹத்திஸுகள் ஹுஸைன் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை அறிவித்துள்ளனர். 

இமாம் உமரு இப்னு அப்துல் அஜீஸ் (ரலி) அவர்கள் குழந்தையின் காதில் பாங்கு கொடுத்து இருக்கிறார்கள்.. 

ஐந்தாவது கலீஃபாவாகப் புகழ் பெற்ற மாபெரும் அறிஞரும், ஆட்சியாளரும், அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நல்லடியாருமான உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரலி) அவர்கள் குழந்தை பிறந்ததும் வலது காதில் பாங்கும், இடது காதில் இகாமத்தும் கொடுப்பவர்களாக இருந்தார்கள்.. 

டஜன் கணக்கான இமாம்கள் தங்கள் நூல்களில் இந்த மகத்தான காரியத்தை மேற்கோள் காட்டியுள்ளனர்.

இமாம் இப்னு முலக்கின் (ரஹ்மத்துல்லாஹி) அவர்கள் கூறுவதை பாருங்கள்: இந்த நிகழ்வை நமது தோழர்கள் தங்கள் புத்தகங்களில் முத்தவாத்திரான வடிவில் விவரித்துள்ளனர்.

And in Al-Badder Al-Munir to Imam Ibn Al-Mullaqn (9/350): وَذكر فِيهِ عَن عَن عَن عَبد الْعَزِيز - رَحْمَة الله عَلَيْهِ - أَنه كَانَ إِذا ولد لَهُ ابْن اذنهِ فِي أُذُنهِ الْيُمْنَى وَأقَام فِي الْيُسْرَى.  واصحابنا يتواترون عَلَى نقل هَذَا عَنهُ,

நான்கு மத்ஹபுகளின் நூல்களிலும் குழந்தையின் காதில் பாங்கு கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 *ஷாஃபி மத்ஹப்*

இமாம் நவவி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) கூறுகிறார்கள்: குழந்தை பிறந்தால் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் பாங்கு கொடுப்பது சுன்னத்தாகும். 
அபூ ராஃபியி, மற்றும் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸ்கள் தான் இதற்கு ஆதாரம், 
அது மட்டுமின்றி உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் இப்படி பாங்கு  கொடுத்ததையும் நமது அஸ்ஹாபுகள் பதிவு செய்துள்ளனர்.

  وفي المجموع شرح المهذب (8/ 442): السُّنَّةُ أَنْ يُؤَذَّنَ فِي أُذُنِ الْمَوْلُودِ عِنْدَ وِلَادَتِهِ ذَكَرًا كَانَ أَوْ أُنْثَى وَيَكُونُ الْأَذَانُ بِلَفْظِ أَذَانِ الصَّلَاةِ لِحَدِيثِ أَبِي رَافِعٍ الَّذِي ذَكَرَهُ الْمُصَنِّفُ قَالَ جَمَاعَةٌ مِنْ أَصْحَابِنَا يُسْتَحَبُّ أَنْ يُؤَذِّنَ فِي أُذُنِهِ الْيُمْنَى وَيُقِيمَ الصَّلَاةَ فِي أُذُنِهِ الْيُسْرَى  وَقَدْ رَوَيْنَا فِي كِتَابِ ابْنِ السُّنِّيِّ عَنْ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ (قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ وُلِدَ لَهُ مَوْلُودٌ فَأَذَّنَ فِي أُذُنِهِ الْيُمْنَى وَأَقَامَ فِي أُذُنِهِ الْيُسْرَى لَمْ تَضُرَّهُ أُمُّ الصِّبْيَانِ) وَأُمُّ الصِّبْيَانِ التَّابِعَةُ مِنْ الْجِنِّ وَنَقَلَ أَصْحَابُنَا مِثْلَ هَذَا الْحَدِيثِ عَنْ فِعْلِ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ رَحِمَهُ اللَّهُ

இமாம் இப்னு ஹஜர் அல்-ஹைதமி கூறுகிறார்கள்: குழந்தையின் வலது காதில் பாங்கும், இடது காதில் இகாமத்தும் கொடுப்பது சுன்னத்தான காரியமாகும். 
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஹஸன் (ரஹ்) அவர்களின் காதில் பாங்கு கொடுத்தார்கள் என்ற  ஹஸனான ஹதீஸ் தான் இதற்கு ஆதாரம்.. 
துஹ்ஃபத்துல் முஹ்தாஜ் (9/ 376)

 وفي تحفة المحتاج في شرح المنهاج للإمام ابن حجر الهيتمي (9/ 376)  (وَ) يُسَنُّ أَنْ (يُؤَذَّنَ فِي أُذُنِهِ الْيُمْنَى) ثُمَّ يُقَامُ فِي الْيُسْرَى (حِينَ يُولَدُ) لِلْخَبَرِ الْحَسَنِ «أَنَّهُ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَذَّنَ فِي أُذُنِ الْحُسَيْنِ حِينَ وُلِدَ »

 *ஹனபி மத்ஹப்*

 وفي الدر المختار وحاشية ابن عابدين (1/ 385): مَطْلَبٌ فِي الْمَوَاضِعِ الَّتِي يُنْدَبُ لَهَا الْأَذَانُ فِي غَيْرِ الصَّلَاةِ...وَفِي حَاشِيَةِ الْبَحْرِ الرَّمْلِيِّ: رَأَيْت فِي كُتُبِ الشَّافِعِيَّةِ أَنَّهُ قَدْ يُسَنُّ الْأَذَانُ لِغَيْرِ الصَّلَاةِ، كَمَا فِي أَذَانِ الْمَوْلُودِ، وَالْمَهْمُومِ، وَالْمَصْرُوعِ، .....أَقُولُ: وَلَا بُعْدَ فِيهِ عِنْدَنَا.  اهـ.  أَيْ لِأَنَّ مَا صَحَّ فِيهِ الْخَبَرُ بِلَا مُعَارِضٍ فَهُوَ مَذْهَبٌ لِلْمُجْتَهِدِ وَإِنْ لَمْ يُنَصَّ عَلَيْهِ، لِمَا قَدَّمْنَاهُ فِي الْخُطْبَةِ عَنْ الْحَافِظِ ابْنِ عَبْدِ الْبَرِّ وَالْعَارِفِ الشَّعْرَانِيِّ عَنْ كُلٍّ مِنْ الْأَئِمَّةِ الْأَرْبَعَةِ أَنَّهُ قَالَ: إذَا صَحَّ الْحَدِيثُ فَهُوَ مَذْهَبِي، عَلَى أَنَّهُ فِي فَضَائِلِ الْأَعْمَالِ يَجُوزُ الْعَمَلُ بِالْحَدِيثِ الضَّعِيفِ

 *மாலிகி மத்ஹப்*

 وفي مواهب الجليل في شرح مختصر خليل للإمام الحطاب الرُّعيني المالكي (1/ 434):  قَالَ جَمَاعَةٌ مِنْ أَصْحَابِنَا: يُسْتَحَبُّ أَنْ يُؤَذِّنَ فِي أُذُنِ الصَّبِيِّ الْيُمْنَى، وَيُقِيمَ الصَّلَاةَ فِي أُذُنِهِ الْأُخْرَى، وَقَدْ رَوَيْنَا فِي سُنَنِ أَبِي دَاوُد وَالتِّرْمِذِيِّ عَنْ أَبِي رَافِعٍ، قَالَ: رَأَيْت رَسُولَ اللَّه - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - «أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ بِالصَّلَاةِ» قَالَ التِّرْمِذِيُّ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَرَوَيْنَا فِي كِتَابَ ابْنِ السُّنِّيِّ عَنْ الْحُسَيْنِ بْنِ عَلِيٍّ - رَضِيَ اللَّهُ تَعَالَى عَنْهُمَا - قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ .
 (قُلْتُ) وَقَدْ جَرَى عَمَلُ النَّاسِ بِذَلِكَ فَلَا بَأْسَ بِالْعَمَلِ بِهِ وَاَللَّهُ َعْلَمَ

 *ஹம்பலி மத்ஹப்*

وفي كشاف القناع عن متن الإقناع للإمام منصور البهوتي الحنبلي (3/ 28): (وَ) سُنَّ أَنْ (يُؤَذَّنَ فِي أُذُنِ الْمَوْلُودِ الْيُمْنَى) ذَكَرًا كَانَ أَوْ أُنْثَى (حِينَ يُولَدُ، وَ) أَنْ (يُقِيمَ فِي الْيُسْرَى) لِحَدِيثِ أَبِي رَافِعٍ قَالَ «رَأَيْت رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ» رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيُّ وَصَحَّحَاهُ وَعَنْ الْحَسَنِ بْنِ عَلِيٍّ مَرْفُوعًا «مَنْ وُلِدَ لَهُ مَوْلُودٌ فَأَذَّنَ فِي أُذُنِهِ الْيُمْنَى وَأَقَامَ فِي أُذُنِهِ الْيُسْرَى رُفِعَتْ عَنْهُ أُمُّ الصِّبْيَانِ» وَعَنْ ابْنِ عَبَّاسٍ «أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ يَوْمَ وُلِدَ وَأَقَامَ فِي أُذُنِهِ الْيُسْرَى» رَوَاهُمَا الْبَيْهَقِيُّ فِي الشُّعَبِ وَقَالَ وَفِي إسْنَادِهِمَا ضَعْفٌ.

*இப்னுல்-கய்யிம் அவர்கள் கூறுகிறார்கள்:* 
பாங்கு கொடுப்பது  சுன்னத்தான காரியமாகும்..

வஹாபிகள் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இப்னுல் கய்யூம் அவர்கள் தனது துஹ்ஃபத்துல் மவ்தூத் என்ற நூலில் குழந்தை பிறந்தவுடன் வலது காதில் பாங்கும், இடது காதில் இகாமத்தும் கொடுப்பது சுன்னத் என்று ஒரு அத்தியாயம் கொடுக்கிறார்.  
இமாம் திர்மிதியின் ஹதீஸ் உட்பட 3 ஹதீஸ்கள் இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார். 
பின்னர் பாங்கு கொடுப்பதின்  நன்மைகளும் விவரிக்கிறார்.. 

*சி.பி உமர் சுல்லமிக்கு இது பித்அத் இல்லை..* 

கேரள வஹாபிகளின் தலைவர் பதவி அலங்கரிகத்த சி.பி.உமர் சுல்லமி அவர்கள் நித்ய ஜீவிதத்தில் பிரார்த்தனைகள் என்ற புத்தகத்தில் "குழந்தை பிறந்தால்" என்ற அத்தியாயத்தில் எழுதுவதைப் பார்க்கவும்:
"நபி (ஸல்) அவர்களின் மகள் பாத்திமா பீவி (ரழியல்லாஹு அன்ஹா) ஹஸன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பெற்றெடுத்தபோது, ​​நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக அழைப்பு விடுப்பது போல் குழந்தையின் காதில் பாங்கு கொடுத்தார்கள்  (அபூதாவூத், திர்மிதி)

அஹ்லுல் சுன்னாவின் ஆரம்பகால அறிஞர்கள் மற்றும் ஆரம்பகால வஹாபிகளின் தலைவர்களால் புனிதமான செயலாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பாங்கு கொடுக்கும் செயலை பித்அத்தாக ஆக்குவதற்கு வஹாபிகள் எந்த ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் என்று தெரியவில்லை.... 

பி.பி.  உவைஸ் அதனி கேரளா
தமிழில்: *M.#சிராஜுத்தீன்_அஹ்ஸனி*

Wednesday, 9 November 2022

உண்மையான வசந்தம் எது?

📱📱📱📱📱📱📱📱
     *ஜும்ஆ பயான்*

🗓  28 / 10/ 2022
         
📜தலைப்பு :-
*உண்மையான வசந்தம் எது?*

 ⏰ ~நிமிடங்கள்... 20:32

         🎤  உரை  🎤 
*"மௌலவி, HSM.முஹம்மது ஷாஃபி ஆரிப் மஹ்லரி அல்காதிரிய்யி வல் ஜிஸ்திய்யி வசுஹூதி அவர்கள்"* 
  
🕌 *இமாம் :- ஜாமிஆ  மஸ்ஜித், கப்படாபள்ளி காரைக்கால்*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

https://app.box.com/s/p2va3igc5hhilrcxsk16gbfiei945rq2