Wednesday, 22 August 2018

What is the inner meaning or philosophy of Sacrifice ?

தியாகம், என்றால் என்ன ?
குர்பானி என்றால் என்ன ?
அதன் தத்துவார்த்தம் என்ன ?
தியாகம் என்ற சொல்லை ஆன்மிகம் சாராத மக்கள் மிகத்தவறாக விளங்கி வைத்திருக்கிறார்கள் .
ஆசையை துறப்பது,
உடல் இச்சையை விடுவது !
சிகரெட், மது போன்ற கெட்டப்பழக்கங்களை விட்டொழிப்பது !
ஆடுகளை, மாடுகளை ஆண்டவனின் பேரால், அறுத்து பலியிட்டு, அதன் கறியை மக்களுக்கு பகிர்வது !
இப்படியெல்லாம் நினைத்து, தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அப்படியானால், தியாகம் என்பதன் தத்துவார்த்தம்தான் என்ன ?  என நீங்கள்  கேட்பது, எங்களுக்கு விளங்குகிறது ?
என்னத்தை தியாகம் செய்வது ? குர்பானி செய்வது ?
எண்ணத்தை தியாகம் செய்வதே, உண்மையான தியாகம் !
தி- திமிர், அகம்பாவம், ஆணவம்,  தற்பெருமை முதலியவைகளை தியாகம் செய்வது !
இதுவே, உண்மையில், யாகமாகும் !
இதற்கு பெரும் தடைச்சுவராக, குறுக்கே நிற்பது, நம் மனம் என்னும் நஃப்ஸேயாகும்!
"அழுகையில் மனிதன் இல்லை
சிரிப்பினில் மனிதன் இல்லை
உள்ளத்தில் மனிதன் இல்லை
உறக்கத்தில் மனிதன் உண்டு"
என கவிஞர் பாடியதுபோன்று
ஆழ்ந்த உறக்கத்தில்தான்  மனம் ஓய்ந்தொழிந்து, நம் ஆன்மா விழித்து, ஸலாம்  என்னும் சாந்தி நிலை நமக்கு உண்டாகிறது !
நம் சாதாரண உறக்கத்தில், கனவுகள் என்ற பெயரில், இந்த மனம் என்னும் மாயப்பிசாசு, நம்மை பாடாய்ப்படுத்துகிறது !
அதனால்தான்,
"கனவுகளே! கனவுகளே ! கலைந்துபோக மாட்டீரோ ?
நினைவுகளே!  நினைவுகளே! நின்றுபோக மாட்டீரோ ?
நிம்மதியை தாரீரோ" !
என கண்ணதாசன் கதறி அழுதுப் பாடுகிறார் !
ஆதலால், அந்த அடங்காப் பிடாரியான மனதை, அதில் எழும், கடலலைகள் ஓய்ந்தாலும், ஓயாமல் ஒப்பாரி இராகமிடும், இதயத்தின்  எண்ண அலைகளை,  உணர்வுக்கொப்பளிப்புக்களை, அடக்கியொடுக்கி, அழித்தொழிக்க
வேண்டும் !
இது, எவ்வாறு சாத்தியமாகும் !
தெரிந்தோ, தெரியாமலோ, நாமே, இந்த நஃப்ஸை,  நன்றாக வளர்த்து, கொழுக்க வைத்து, பெரும் பயில்வானாக்கிவிட்டோம் !
அசுரனாக, அரக்கனாக அது ஆனதற்கு, நாமே காரணமாகிவிட்டோம் !
இப்போது, அந்த பயில்வானோடு பகைத்துக்கொண்டு, அதனுடன் மல்யுத்தம் செய்ய முடியுமா ?
அதற்கான தவ வலிமை, நம்மிடம்தான் இல்லையே !
பின்பு, எப்படி அதனை நமக்கு பணியச்செய்வது ?
வெல்வது ?
இதற்கு, மிக இலகுவான, இனிதான, நேரான  ஓர்  பாதையை, ஞான வழி மஹான்கள், நம்மீது இரங்கி காட்டியருள்கின்றனர் !
அதாவது, நம் பார்வையை, நாட்டத்தை, கவனத்தை, சதாவும், நம்
இதயக்கமலம் எனும், அனாகதா ஆதாரத்தில், அல்லது நேத்திரக் கமலம் என்னும், சுழுமுனை ஆதாரத்தில், அல்லது எல்லாவற்றையும் விட மேலான,
உச்சிக் கமலமாகிய,
ஆயிரம் இதழ் தாமரை என்னும்,
நம் தலை உச்சியுனுள்ளே இருக்கும், சகஸ்ரார ஆதாரத்தில், நம் நாட்டத்தை வைத்திருந்தாலே போதுமானது !
நாமஜெபம் கூட அவசியமில்லை!
அத்துடன்,நம்மை வெட்டவெளியாக, ஷிவமாகவே உணர
வேண்டும்
ஷிவோஹம் !
ஷிவமே நான் !
நானே, எல்லாமாக, அனைத்துமாக,
சர்வேஷ்வரனாக
உள்ளேன் !
என உறுதியுடன், உணர்ந்தாலே போதும் !
வேறு, எந்த தவமும் வேண்டாம் !
சாதனைகளும் தேவையில்லை !
சரி, குர்பானி என்னும் பெயரில், மிருகங்களை அறுத்து பலியிடுதலே கூடாதா ? என்றால், தாளாரமாக கூடும் !
அதே நேரத்தில், நல்லவர்களான,
வல்லவர்களான
நபிமார்கள்,
குத்புமார்கள்,
மஹா அவதார்கள்,
மஹா சித்தர்கள்,
வலிமார்கள்,
எத்தகைய இஹ்ஸான் என்னும், தூய இறைவுணர்வுடன், பலியிட்டார்களோ, அதே உணர்வுடன் அல்லது அதில் ஒரு  ஐம்பது சதவீத உணர்விலாவது,
நாமும் ஏகத்துவ ஞானவுணர்வுடன்,
பக்தியுடன்,
ஈமான் இஹ்லாஸுடன்,
இஸ்லாம் எனும் யோகவுணர்வுடன்,
ஏகாந்த உணர்வுடன், குர்பானி கொடுத்தால்,
நிச்சயமாக, ஏக இறைவனான, அல்லாஹ், நம் திருப்பலியை அங்கீகரித்தருள்வான் !
எல்லாவற்றுக்கும் மேலாக,
நம் மனம் எனும் மிருகத்தை பலியிட்டு, தஜ்கியதுன்னஃப்ஸ் எனும் ஆன்ம பரிசுத்தம் அடைவதையே, அவன் மிகவும் விரும்பி ஏற்றுக்கொள்வான் !
🤲🤲🤲🤲🤲🤲

Wednesday, 15 August 2018

தாருஸ்ஸலாம்

தாருஸ் ஸலாம் !
💚💚💚💚💚💚
சாந்தி இல்லம்   !
💛💛💛💛💛💛
பைத்துன் நூர் !
ஜோதி இல்லம் !
💥💥💥💥💥💥⭐⭐⭐⭐⭐⭐
யா ஸலாம் !
சாந்தி மயமானவனே !
யா நூர் !
ஜோதி மயமானவனே !
ஏகன் அல்லாஹ்வின், அஸ்மாவுல் ஹுஸ்னா என்னும் தொன்னூற்று ஒன்பது திருநாமங்களில்
இந்த இரண்டு நாமங்களுக்கும் தனிச்சிறப்புண்டு !
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை சந்திக்கும்போதும், வீட்டினுள் அல்லது பள்ளிவாயினுள் நுழையும்போதும்,  தனது பர்ளான,
சுன்னத்தான, நஃபீளான அனைத்து தொழுகைகளிலும், அத்தஹிய்யாத்தின் அந்தமாக, இந்த ஸலாம் என்னும் திருநாமத்தையே பிரயோகம் செய்கின்றார் !
சொர்க்கத்திற்கும், தாருஸ் ஸலாம் என்றே சொல்லப்படுகிறது !
ஸலாமுன் கவ்லம் மின் றப்பிற் ரஹீம் என, இறைவனும் சுவனவாசிகளுக்கு, சோபனம் கூறுகின்றான் !
உலக மகாப் பிரளயத்தின்போதும், "ஸலாமுன் அலா நூஹின் ஃபில் ஆலமீன்" என கூறி, யா ஸலாமாகிய, சாந்திமயமானவனாகிய அல்லாஹ், தன் நபியையும், அவருக்கு ஈமான் கொண்ட அனைத்து  மனிதர்களையும்  சகல ஜீவராசிகளையும், தனது ஹஃபாலஹ் என்னும் பாதுகாப்பைத் தந்தருளினான் !
தனது கலீல் என்னும் தோழரான ஹள்ரத் இப்றாஹீம்(அலைஹி) அவர்களுக்காக,
"யா நாரு கூனீ பர்தன் வ ஸலாமன் அலா இப்றாஹீம் எனக் கூறியே,
மாபெரும் அக்னி குண்டத்தை சுகம் தரும் குளிர்ந்த சோலையாக ஆக்கி, தனது சிநேகிதர் இப்றாஹீம்(அலை) கொடும் நெருப்பில்
சிக்கி, எரிந்துபோகாமல், பாதுகாத்தான் !
இத்தகைய, மஹா கருணையாளனாகிய, எல்லாம் வல்ல, ஏகன் அல்லாஹ்வின், சர்வ பாதுகாப்புகளையும் தரும், ஸலாமத்தான இந்த
ஸலாம் என்ற நாமமே, இஸ்லாமாக, முஸ்லிமாக ஆகியுள்ளது !
உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், ஸலாம் என்னும் நிலையிலேயே, இயற்கை மார்க்கம் (ஃபித்ரஹ்) இஸ்லாத்தில் உள்ளதாக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
அல்லாஹ் ! என்னும் முழுமுதற் கடவுளை, பரிபூரணத்தை, உஜூதை, உள்ளமையை, குறிப்பிடும் மஹா மந்திர சக்திவாய்ந்த, இஸ்முல் அஉளம் என்னும் மிக்க மகத்துவமிக்க  சொல்லுக்கு அடுத்ததாக, அடியார்களின் வாய்களிலிருந்து, அதிகமதிகமாக உபயோகப்படுத்தப்படும் கலாம் இந்த ஸலாம் !
இதன் தத்துவார்த்தம்தான் என்ன ? என்பதை சற்று ஆய்வு செய்வோம் !
எல்லையற்றத் தன்மையுடன்  ஐக்கியமாகுதல்!
Union with the Infinity !
இதனை "யோகம்" (Yoga) என்றும, அந்த நிலையை அடைந்தவரே உண்மையில் "யோகி" (Yogi) என்றும் அழைக்கத் தகுதியுள்ளவர் !
இந்த யோகம் என்னும் சொல், எண்ணங்களற்ற நிலை !
மனமற்ற நிலை !
Thoughtless condition ! or
The state of No- Mind !
என்னும் பொருளில்தான்
பிரயோகம் செய்யப்பட வேண்டும் !
அதற்கு மாறாக,
மூச்சை இழுத்தல், அடக்குதல், வெளியிடுதல்,
உடல் உறுப்புக்களை பலக்கோணங்களில் வளைத்தல்,
அசைத்தல், தலை கீழாக நிற்குதல் என்றெல்லாம் பொருளல்ல !
இவைகளெல்லாம், யோக நிலையை அடைவதற்கான உபாயங்களில், பயிற்சிகளில் சிலவென்று தான் கூறலாம் !
இத்தகைய யோக நிலையே,
சிவ நிலையே,
யா ஸலாம் !
சாந்தி மயமானவனே !
என்னும் இறை நிலையே,
இஸ்லாம் என்னும் இயற்கை மார்க்கம் !
சன்மார்க்கம் !
சாந்தி மார்க்கம் !
இந்த யோக மார்க்கத்தில், செவ்வனே, நேராக, சீராக நடப்பவரே, யதார்த்தத்தில் முஸ்லிம் ஆவார் !
அவரே சன்மார்கி என்னும் மரணமிலாப் பெருவாழ்வையும் பெற்றவராவார் !
ஏனெனில்,
மரணமற்ற
சிவத்துடன் ஒன்றித்த சிவனுக்கு(சித்தனுக்கு) மரணமில்லை !
அல்லாஹ்வுடன் ஐக்கியமான இன்ஷான் அல்லாஹ்வுக்கு(இன்ஷானே காமில்) மௌத் இல்லை !
இந்த ஆதி நிலையை, அடைய வேண்டும் என்பதற்காகவே,
ஸலாம் என்னும் சொல், நம் நடைமுறை வாழ்க்கையில்,  அல்லாஹ்வால்,
அவன் வகுத்த சரியையிலும் ஞாபகப்படுத்தப்படுகிறது !
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காதுஹு என்று முகமன் கூறுவதில்கூட, முதலாவதாக, ஸலாம் என்ற சொல் வருவதன் காரணம், ஒரு அடியார், இந்த சாந்தி நிலையை
அடைந்துவிட்டால், அவருக்கு அல்லாஹ்வின் ரஹ்மத் எனும் அருளும், பரக்கத் எனும் அபிவிருத்தியும் ஏற்பட்டு விடும் என்பதேயாகும் !
அல்லாஹும்ம அன்தஸ்ஸலாம் !
வ மின்கஸ்ஸலாம்
வ இலைக்க யர்ஜிவுஸ்ஸலாம்
வ ஹய்யினா றப்பனா பிஸ்ஸலாம்
வ அத்ஹில்னா பிரஹ்மத்திக
தாரஸ்ஸலாம்
என்னும் துஆவிலும்
அன்பே ஷிவம் என்பது போலவே, இந்த ஸலாமே அல்லாஹ்வாக உள்ளது என்பதும்
உட்கருத்தாக உள்ளது !
ஆகவே,
நம் உள்ளே, இந்த ஸலாம் என்னும் அமைதி நிலை, சலனமற்ற, எண்ணங்களற்ற நிலை குடிகொள்ள வேண்டும் !
"அமைதி உள்ளம்" யாருக்கு அமைகிறதோ, அவர் இருக்குமிடம் அல்லது வீடு
"தாருஸ் ஸலாம்" என்னும்
"அமைதி இல்லம்" ஆகிவிடும் !
அவருடைய அமைதியின் அதிர்வுகள்,   peaceful vibration  or frequency,
அவரைச்சுற்றிலும், அவரவர் சாந்த, ஜீவ காந்த சக்தியின் அளவு பரவியிருக்கும் !
அவரைச்சுற்றிலுமுள்ள அவர் குடும்பத்தவரும், மற்றவர்களும்
அந்த அமைதி அலைகளினால் ஆட்கொள்ளப்பட்டு, ஒரு அலாதியான நிம்மதியை அடைவர் !
அப்படிப்பட்டவர்,
அவ்லியாக்கள் என்னும் சித்தர்களின் தரஜாவில், படித்தரத்தில் இருப்பவராவார்!
அடுத்து, 
யா நூர் !
ஒளி மயமானவனே!
இந்த ஒப்பில்லா திருநாமத்தின் தத்துவம் என்ன ?
ஒளி என்றால், நாம், நம் புறக்கண்களால் காணும் சூரியனின் கண்கூசும் பிரகாசமா ?
சந்திரனின், விண்மீன்களின்
குளிர்ச்சி தரும் வெளிச்சமா ?
எண்ணெய்யினால் எரிக்கப்படும் அகல் விளக்குகளின்,
குத்து விளக்குகளின் தீப ஒளியா ?
இந்த அறியவியலரிஞர்களின் கண்டுபிடிப்பான மின்சார விளக்குகளின் ஒளியா ?
நிச்சயமாக இவைகளில் எதுவுமில்லை !
இருப்பினும்,  இந்த ஒளி, இவைகள் எல்லாவற்றுக்கும் ஆதிமூலமான ஜோதி !
ஆலமீன்கள் எனும் சர்வ லோகங்களின் ஒளி !
இந்த ஒளியே நம் கல்பின் ஒளி !
அறிவின் ஒளி !
ஆன்ம ஒளி !
மற்ற ஒளிகளெல்லாம் ஒளிந்து விடும் !
ஒழிந்து விடும் !
மறைந்து விடும் !
ஆன்மாவின்
பரமான்மாவின்
ஒளியோ எங்கும் ஒளிந்து விடாது ! என்றும் மங்காது
எப்பொழுதும் மறையாது !
என்றும்,
எக்காலமும், பரிபூர்ணமாக, பிரகாசித்துக்கொண்டேயிருக்கும் !
அல்லாஹும்ம அத்மிம்லனா நூரனா !
இறைவா எங்களின்(ஆன்ம) ஒளியை எங்களுக்கு பரிபூரணமாக்குவாயாக !
ஆமீன் !
என துஆ இறைஞ்சுகின்றோம் !
ஆயினும்,
இதனை எவ்வாறு எய்துவது ? என்பது குறித்து, மறையவனாகிய
ஏகன் அல்லாஹ்,  தன் அரும் மறை திருக்குர்ஆனில்,சூரா நூர் என்னும் அத்தியாயத்தில்,
அல்லாஹு நூருஸ் ஸமாவாத்தி வல் அர்லி.........
என்னும் வசனத்தொடரில்
அல்லாஹ், வானங்கள், மற்றும் பூமியின் ஒளியாக இருக்கின்றான்.
அவனுடைய பிரகாசத்திற்கு உதாரணம்: அதில் விளக்கு இருக்கும் ஒரு மாடம் போன்றதாகும்; அவ்விளக்கு கண்ணாடியினுள் இருக்கிறது; நிச்சயமாக அக்கண்ணாடி பிரகாசிக்கும் ஒரு நட்சத்திரத்தை போன்றதாகும்; அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தின் எண்ணெய்யினால் எரிக்கப்படுகிறது; அது கீழ் திசையை சேர்ந்ததுமன்று, மேல் திசையை சேர்ந்ததுமன்று.
அதன் எண்ணெய், அதை நெருப்புத்தொடாவிடினும், பிரகாசிக்கவே முற்படும்; இவை யாவும் இணைந்து ஒளிக்குமேல் ஒளியாகும்......
என்னும் வசனத்தின் சுருக்கமான ஞான தாற்பரியம் என்னவென்றால்,
நம் தலையிலுள்ள நெற்றியே விளக்கு இருக்கும் மாடமாகவும்
அதில், புருவமத்தியிலுள்ள மத்தியான காபா கௌசைனி என்னும் சுழுமுனை ஆதாரக் கண்ணாடியினுள் நட்சத்திரம்போன்று ஒளி பிரகாசித்துக்கொண்டிருப்பதாகவும்,
குண்டலினி சக்தி என்னும் பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தின் எண்ணெய்யினால் எரிக்கப்பட்டு, ஸித்ரதுல் முன்தஹா என்னும் சகஸ்ரார ஆதாரத்தில் இன்னொரு ஜோதி பிரகாசித்துக்கொண்டிருப்பதாகவும்
இவையெல்லாம் சேர்ந்து ஜோதிக்கு மேல் ஜோதியாக
ஏக ஜோதியாக
அல்லாஹ்வின் நூராக பிரகாசிக்கின்றது என்று ஞானவான்கள்,
தாம், தம் அகக்கண்களால்
தரிசித்த, அந்த ஆனந்த ஜோதியின் அனுபவித்தை,
பேரின்ப உணர்வுடன் உரைக்கின்றனர்
அல்லாஹ்வின் சிந்தனையே
இல்லாத  உள்ளம்  எப்பொழுதும் இருள் சூழ்ந்ததாக இருக்கும் !
எனவே, எங்களின் அன்பிற்கினியவர்களே ! நாம், அல்லாஹ்வின் திக்ர் எனும் கடலில்  மூழ்க மூழ்க,  எண்ணங்களற்றுபோய், தியான நிலை என்னும்
யா சலாம் ! என்ற நிலைக்கு வந்து விடுவோம் !
அந்நேரம்,
அஹம் பிரஹ்ம்மாஸ்மி !
நானே பிரஹ்ம்மம் !
இன்னீ அனல்லாஹ் !
நானே அல்லாஹ் !
ஷிவோஹம் !
ஷிவமே நான் !
என்பதை அறிந்துணர்ந்து
அதாவது, தன்னை, தன் சுயத்தை அறிந்து, ஞானானந்த முத்துக்களை  அள்ளியெடுத்து
பேரின்ப பேற்றை பெறுவோம் !
அந்த அருட்பெரும் சோதியுடன் மீண்டும் ஐக்கியமாவோம்
மஹானந்தர்களாக  நம் பூர்வீக பூரண நிலைக்கு மாறுவோம் !
அதாவது, நம்முடைய ஆதி நிலையை மீண்டும் அடைவோம் !
இந்நிலையை எய்தியவரின் கல்பே,
"ஒளி உள்ளம்"
"பைத்துன் நூர்" என்னும்
"ஜோதி இல்லம்"
இறை நன்றியுடன்,

Monday, 13 August 2018

அல்லாஹ்வின் வாஜிபான 20தன்மைகள்

அல்லாஹுவின்
வாஜிபான 20 தன்மைகளுக்கு
குர்ஆனின் மூலம் விளக்கம் தர
ப்பட்டுள்ளன.
அல்லாஹூ தன்திருமறையில்

الَّذِيْنَ يَذْكُرُوْنَ اللّٰهَ قِيَامًا وَّقُعُوْدًا وَّعَلٰى جُنُوْبِهِمْ وَيَتَفَكَّرُوْنَ فِىْ خَلْقِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ‌ رَبَّنَا مَا خَلَقْتَ هٰذَا بَاطِلًا  سُبْحٰنَكَ فَقِنَا عَذَابَ النَّارِ‏ 
இத்தகையவர்கள் (தங்கள்) நின்றநிலையிலும்,இருப்பிலும்,  படுக்கையிலும் அல்லாஹ்வை யே நினைத்து, வானங்களை யும் பூமியையும் அவன்படைத்தி ருப்பதை ஆராய்ச்சி செய்வார் கள்.மேலும்,"எங்கள்இறைவனே! நீ இவற்றை வீணாக படைக்க வில்லை. நீ மிகத் தூயவன். (நரக) நெருப்பின் வேதனை யிலிருந்து எங்களை நீ காப்பா ற்றுவாயாக!
(அல்குர்ஆன் : 3:191)

நபி(ஸல்)தன் மொழியில்

  1 - عنِ ابنِ عبَّاسٍ: أنَّه صلَّى اللهُ عليه وسلَّم خرَج على أصحابِه فقال: ما جمَعكم ؟ فقالوا: اجتمَعْنا نذكُرُ ربَّنا ونتفكَّرُ في عظَمتِه، فقال: تفكَّروا في خَلْقِ اللهِ، ولا تفَكَّروا في اللهِ؛ فإنَّكم لن تقدُروا قَدْرَه. .
الراوي: عبدالله بن عباس المحدث: السخاوي - المصدر: المقاصد الحسنة - الصفحة أو الرقم: 191
خلاصة حكم المحدث: إسناده ضعيف
நபி(ஸல்)அவர்கள் ஒரு நாள் வெளியே வந்தார்கள்  தம் தோழர்கள் ஒன்று சேர்ந்து இருந்தார்கள் தோழர்களே!எதற்காக ஒன்று சேர்ந்து இருக்கிறீர்கள் என்று நபிய வர்கள கேட்க?நாங்கள் நம்
ரப்பை "திக்ரு "செய்கிறோம்
அவனின் கண்ணியத்தை பற்றி
சிந்திக்கிறோம் என்று கூறினா ர்கள். அப்போது நபி( ஸல்)அவர் கள் அல்லாஹ்வால் படைக்கப்ப ட்டபடைப்புகளைப்(எவ்வாறு படைத்திருக்கிறான்)என்று சிந்தியுங்கள நிச்சயமாக அவன்(எப்படி,எவ்வாறு,)இருக்கிறான் என்ற கற்பனை செய்வ தற்குநீங்கள்சக்திபெறமாட்டீர்கள்?ஆகவே  அல்லாஹ்வின்  உள்ளமையைபற்றி  மட்டும் சிந்திக்காதீர்கள?அறிவிப்பு:இப்னு அப்பாஸ் ரலி அவர்கள்
பதிவு:மகாஸீதுல் ஹஸனா ஹதீஸ் எண் 191
                      
           ١.الوجود
                         அல்உஜூத்                         
   உள்ளமை கொண்டவன்

اَللّٰهُ خَالِقُ كُلِّ شَىْءٍ‌ وَّ هُوَ عَلٰى كُلِّ شَىْءٍ وَّكِيْلٌ‏ 
அல்லாஹ்வே எல்லாபொருள்க ளையும் படைத்தவன்; அவனே எல்லா பொருள்களின் பொறு ப்பாளன்.
(அல்குர்ஆன் : 39:62)
                       
                   ٢.القديم        கதீம்
           -பூர்வீகமானவன் 

وَالْقَمَرَ قَدَّرْنٰهُ مَنَازِلَ حَتّٰى عَادَ كَالْعُرْجُوْنِ الْقَدِيْمِ‏ 
(உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்சமடலைப்போல்(பிறையாக) ஆகும்வரையில்சந்திரனுக்கு நாம் பல நிலைகளைஏற்படுத்தி  இருக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 36:39)
                            ٣.البقأء
               அல்பகாஃவு            முடிவில்லாதரிபாடுவுள்ளவன்
وَّيَبْقٰى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلٰلِ وَالْاِكْرَامِ‌‏ 
மிக கண்ணியமும் பெருமையும் தங்கிய உங்களதுஇறைவனின் திருமுகம் மட்டும் (அழியாது) நிலைத்திருக்கும்.
(அல்குர்ஆன்55:27)
        ٤.   المخالفة الحواديث
முஹாலிபஃதுல் ஹலாதிஸி
புதிய புதிய நிகழ்வுக்கு மாற்றமானவன்
   لَيْسَ كَمِثْلِهٖ شَىْءٌ ‌

அவனுக்கு ஒப்பானது ஒன்று மில்லை
அல்குர்ஆன்:42:11
                 ٥    قيامه بنفسه
கியாமுஹு பிநஃப்ஸிஹி
தன்தானே என்றும்  நிலையானவன் 
وَعَنَتِ الْوُجُوْهُ لِلْحَىِّ الْقَيُّوْمِ‌
(அந்நாளில்)நிரந்தரமானவனும் நிலையானவனுமாகிய(இறை)வன் முன் அனைவருடைய தலைகளும் குனிந்துவிடும்.
(அல்குர்ஆன் : 20:111)
                        
                        
                 ٦   وحدانيته
        வஹதானிய்யதிஹி
      ..என்றும் தனித்தவன்

وَاِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ  
(மனிதர்களே!)உங்கள்வணக்கத்திற்குத்தகுதியானவன்ஒரேயொரு இறைவனே ஆவான்.
(அல்குர்ஆன் : 2:163)

                           ٧.حياة
                   ஹயாத்து
          என்றும் வாழ்பவன்
اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ الْحَـىُّ الْقَيُّوْمُ

அல்லாஹ் (எவ்வித மகத்துவமு டையவனென்றால்) அவனைத் தவிர வணக்கத்திற்குத் தகுதி யான இறைவன் வேறு யாரும் (இல்லவே) இல்லை. அவன் (மரணமில்லா) உயிருள்ளவன்; என்றும் நிலையானவன்
(அல்குர்ஆன்3:2)
                            ٨.العلم -இல்மு
 

அறிவு
قُلْ اِنَّمَا الْعِلْمُ عِنْدَ اللّٰهِ            ١.الوجود
                         அல்உஜூத்                         
   உள்ளமை கொண்டவன்

நபியே! நிச்சயமாக கல்வி (ஞானம்)அல்லாஹ்விடத்தில்தான் இருக்கின்றது. என்று
கூறுங்கள்.
(அல்குர்ஆன் : 67:26)
                             ٩.الارادة
                 இராதத்
                  நாட்டம்
اِنَّمَاۤ اَمْرُهٗۤ اِذَاۤ اَرَادَ شَیْـٴًـــا اَنْ يَّقُوْلَ لَهٗ كُنْ فَيَكُوْنُ‏ 
அவன் யாதொரு பொருளை(ப் படைக்க)க் கருதினால் அதனை "ஆகுக!" எனக் கூறுவதுதான்  உடன் அது ஆகிவிடுகின்றது.
(அல்குர்ஆன் : 36:82)

                          ١٠.قدير
                     கதீருன்
                    ஆற்றல்
اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ‏ 
நிச்சயமாகஅல்லாஹ்அனைத்தின் மீதும் (எவ்விதமும் செய்ய) பேராற்றலுடையவன்.
(அல்குர்ஆன் : 2:20)
                          ١١.السمع  
                      ஸம்உ
                     கேள்வி
                     ١٢. والبصر
                      பஸருன்
                     பார்வை

وَّ جَعَلَ لَـكُمُ السَّمْعَ وَالْاَبْصٰرَ وَالْاَفْـِٕدَةَ‌ ۙ لَعَلَّكُمْ تَشْكُرُوْنَ‏ 

உங்களுக்குச் செவிகளையும், கண்களையும், அறிவையும் கொடுத்தவனும் அவன்தான். இதற்கு நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவீர்களாக!
(அல்குர்ஆன் : 16:78)

                        ١٣.    الكلام
                      கலாம்
                       பேச்சி
وَكَلَّمَ اللّٰهُ مُوْسٰى تَكْلِيْمًا

மூஸாவை அல்லாஹ்  பேச வை த்தான்மூஸாவுடன்அல்லாஹ்பேசியும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:164)

                       ١٤    الحي
                அல்ஹைய்யு
        
என்றும்தன்தானேஉயிருடன் இருப்பவன்
اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَۙ الْحَىُّ الْقَيُّوْمُ‏ 
அல்லாஹ், அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவனுமில்லை. அவன் நிரந்தரமானவன்; என்றும் நிலையானவன்.
(அல்குர்ஆன் : 3:2)
                         العالم
                  அல்ஆலிமு
         என்றும்தன்தானே                அறிவுடனிருப்பவன்    

هُوَ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ‌  عٰلِمُ الْغَيْبِ وَالشَّهَادَةِ‌  هُوَ الرَّحْمٰنُ الرَّحِيْمُ‏ 
அந்த அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறொரு நாயனில்லை. (அவனே) மறைவானதையும்வெளிப்படை யானதையும் நன்கறிந்தவன். அவனே அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையவன்.
(அல்குர்ஆன் : 59:22)

                       ١٦.    المريد
                அல்முரீது
என்றும்தன் நாட்டமுடையவன்
فَعَّالٌ لِّمَا يُرِيْدُ ‏ 
தான் விரும்பியதையெல்லாம் செய்யக்கூடியவன்.
(அல்குர்ஆன் : 85:16)
                        ١٧.    القادر
                  அல்காதிர்
என்றும் தன்ஆற்றலுள்ளவன்

قُلْ اِنَّ اللّٰهَ قَادِرٌ عَلٰٓى اَنْ يُّنَزِّلَ اٰيَةً وَّلٰـكِنَّ اَكْثَرَهُمْ لَا يَعْلَمُوْنَ‏ 
நபியே!) நீங்கள் கூறுங்கள்: (அத்தகைய) ஓர் அத்தாட்சியை இறக்கிவைக்க நிச்சயமாக அல்லாஹ்சக்தியுடையவன்தான். (அவ்வாறு இறக்கியும் வை த்துள்ளான்.)  எனினும் அவர்க ளில்பெரும்பாலோர்(அதனை)அறிந்துகொள்வதில்லை.
(அல்குர்ஆன்6:37)
                     ١٨    السميع
                அஸ்ஸமீஉ
என்றும்தானே கேட்பவன்
وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ‏ 
அவன்(அனைத்தையும்)செவியு றுபவனும் அறிபவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 2:137)
                             ١٩.البصير
                 அல்பஸீர்
என்றும்.தானே பார்ப்பவன்

               وَاللّٰهُ بَصِيْرٌ بِمَا يَعْمَلُوْنَ ‏ 
அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்றுநோக்குபவனாகஇருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 2:96)
ا                    ٢٠    ا لمتكلم
            அல்முதகல்லிம்
   என்றும்சுயமாகபேசுபவன்
قَالُوْۤا اَنْطَقَنَا اللّٰهُ الَّذِىْۤ اَنْطَقَ كُلَّ شَىْءٍ وَّهُوَ خَلَقَكُمْ اَوَّلَ مَرَّةٍ وَّاِلَيْهِ تُرْجَعُوْنَ‏ 

அதற்கு அவைகள், "எல்லா பொருள்களையும் பேசும்படி செய்கின்ற அல்லாஹ்வே எங்களையும் பேசும்படி செய்தான். அவன்தான் உங்களை முதல் முறையாகவும் படைத்தான்.(இறந்த)பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக் கின்றீர்கள்" என்றும் அவை கூறும்.
(அல்குர்ஆன் : 41:21)

மேற்கண்ட அனைத்து தன்மை
களும் வணங்கப்படுபவனுக்கு
கட்டாயம்நிரந்தரமாகஅழிவில்லாமல்இருக்கவேண்டியதன்மைகளாகும்.இந்த மிஸ்கீன் வரைந்தவற்றில்குறையிருப்பின்சுட்டிக்காட்டுமாறுமிகதாழ்மையுடன்கேட்டுக்கொள்கிறேன்

மிஸ்கீனின் கவி ஒன்று

ரப்பே உன் பேச்சு வேண்டும்
ரப்பே உன் நினைவு வேண்டும்
உன்தன்நினைவுடனே யான்
உன்னிடம் மீள வேண்டும்

படைப்பின்தன்மை யாவும்படை த்தோனின் சொந்தமாகும்-படை த்தோனைஅறிந்துவணங்க
ரப்பே மனுவைப் படைத்தான்

வாழ்வு அறிவு நாட்டம்  சக்தி
வல்ல  நாயனின் சொந்தம்
கேள்வி பார்வை பேச்சு
வல்ல நாயனின்  சொந்தம்

உயிரற்ற யன்னை  நீயே
உயிருள்ளோனாககாட்டி  உயிருள்ளோனே நீயே உன்- நினைவில்நிலைக்கச்செய்வாய்

அறிவில்லா யன்னை நீயே
உன்னைஅறிய காட்டி
உன்னை அறிந்து வணங்க
உதவி புரிந்தருள்வாய்

நாட்ட மற்ற யன்னை நீயே
உன்நாட்ட முள்ளோனாக காட்டி
நன்நாட்டமுடனே யன்னை
உன்னாட்டமாகிடுவாய்

முடமான யன்னை நீயே
சக்தியுள்ளோனாக காட்டி
சக்தி நிறைந்த வனே
சக்தியை அருள்புரிவாய்
 
செவிடனான யன்னை நீயே
கேட்போனாக காட்டிஉன்
உள்ளமையைகேட்டுரசித்துக்
உன் வழியில் நடக்க செய்வாய்

குருடனான யன்னை நீயே
பார்க்கும் பாக்கியம் தந்து
உன் மறையை பார்த்து ருசிக்க
பாக்கியம் தந்தருள்வாய்

ஊமையான யன்னை நீயே
பேச வைத்தது கேட்டு ரசிக்கும்
ரசிகனே ! நீயே அல்லாஹூ
உன்னையே! பேச வைப்பாய்

ரப்பே  உள்ளமை ஏழிலும்
எதிலும்இணையாக்கிடாமல்
இவ்வுலகில் வாழ்ந்திடவே
இணையில்லா அருள் புரிவாய்

ரப்பே!உன் ஜமாலி குலாமின்
கவியினைஏற்றிடுவாய்
கலிமாவின் வாழ்கைதன்னை
கரையின்றி தந்தருள்வாய்