Sunday, 16 December 2018
Al quran
அல் குர்ஆன் ஓதுவது சிறப்பானதா ? மௌலித் ஓதுவது சிறப்பானதா ?
-மௌலவீ KRM.ஸஹ்லான் (றப்பானீ)-
அல் குர்ஆன் ஓதுவது சிறப்பானது என்பதை பின் வரும் ஹதீத் தெளிவுபடு த்துகிறது.
سنن الترمذي
2910 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرٍ الحَنَفِيُّ، قَالَ: حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ كَعْبٍ القُرَظِيَّ يَقُولُ: سَمِعْتُ عَبْدَ اللهِ بْنَ مَسْعُودٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ، وَالحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا، لاَ أَقُولُ الْم حَرْفٌ، وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلاَمٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ.
அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால் அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ - 2910)
இதுபோல் பல ஹதீத்கள் அல் குர்ஆன் ஓதுவதன் சிறப்பு பற்றி குறிப்பிடுகின்றன.
அதற்காக எல்லா நேரங்களிலும் குர்ஆன் ஷரீப் ஓதுவது தான் சிறப்பு என்று நினைத்துக் கொண்டு குர்ஆனையே எப்போதும் ஓதிக் கொண்டு இருந்து விட்டால்
அல்குர்ஆனில் கூறப்பட்ட கட்டளைகளை செய்வது எப்போது?
அல் குர்ஆன் ஓதுவது சிறப்பானது என்பதற்காக தொழாமல் அல் குர்ஆனை மட்டும் ஒதிக் கொண்டிருக்க முடியாது.
அல் குர்ஆன் ஓதுவது சிறப்பானது என்பதற்காக ஹஜ் செய்யாமல் அல் குர்ஆனை மட்டும் ஒதிக் கொண்டிருக்க முடியாது. இதுபோன்றுதான் ஏனைய விடயங்களும்.
இதுபோல் தஸ்பீஹ் ஓது வதன் சிறப்புக்கள் பற்றி ஹதீத்களில் அதிகம் காணப்பகின்றன.
صحيح البخاري
6405 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَيٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ، حُطَّتْ خَطَايَاهُ، وَإِنْ كَانَتْ مِثْلَ زَبَدِ البَحْرِ "
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
'ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி' (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் தவறுகள் அழிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே! என்று கூறினார்கள்.
ஆதாரம் புஹாரி -6405
எனவே அல் குர்ஆன் ஓதுவது சிறப்பானது என்பதற்காக 'ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி' என்று தஸ்பீஹ் செய்யாமல் இருக்க முடியாது
அல்குர்ஆனின் கட்டளைப்படி நடப்பது பற்றி பின் வரும் ஹதீத் தெளிவுபடு த்துகிறது.
سنن أبي داود (2/ 70)
1453 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ زَبَّانِ بْنِ فَائِدٍ، عَنْ سَهْلِ بْنِ مُعَاذٍ الْجُهَنِيِّ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ قَرَأَ الْقُرْآنَ وَعَمِلَ بِمَا فِيهِ، أُلْبِسَ وَالِدَاهُ تَاجًا يَوْمَ الْقِيَامَةِ، ضَوْءُهُ أَحْسَنُ مِنْ ضَوْءِ الشَّمْسِ فِي بُيُوتِ الدُّنْيَا لَوْ كَانَتْ فِيكُمْ، فَمَا ظَنُّكُمْ بِالَّذِي عَمِلَ بِهَذَا؟»
அல்குர்ஆனை ஓதி அதன் படி நடப்பவரின் (அதன் கட்டளைகளை எடுத்து நடந்து அதன் விலக்கல்களை தவிர்ந்து நடப்பவர்) பெற்றோருக்கு மறுமையில் கிரீடம் அணிவிக்கப்படும் அதன் ஒளி சூரியனின் ஒளியை விட அழகானது. அவ்வாறாயின் அல்குர்ஆனை ஓதி அதன் படி நடப்பவரின் நிலை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : அபூதாவூத் – 1453
அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கட்டளையிடுகின்றான்.
{إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا} [الأحزاب: 56]
33:56. இந்த நபியின் மீது அல்லாஹ் ஸலவாத்து சொல்கிறான். மலக்குகளும் ஸலவாத்து சொல்கின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள். (அல் அஹ்ஸாப்:56)
ஸலவாத்தும் ஸலாமும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது சொல்லுங்கள் என்பது அல்லாஹ் கட்டளை.
எனவே மௌலித் ஓதுவதன் மூலம் அதிகம் ஸலவாத்சொல்வோம்
மௌலித் கிதாபுகளில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஸலவாத் நிறைந்து காணப்படுகிறது
மௌலித் ஓதும் போது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அதிகம் ஸலவாத் கூறும் பாக்கியம் கிடைக்கின்றன.
மேலும் அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்.
قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ} [يونس: 58]
10:58. “அல்லாஹ்வின் அருட்கொடைக்காகவும், அவனுடைய பெருங்கிருபைக்காகவும் அவர்கள் மகிழ்ச்சியடையட்டும், அவர்கள் திரட்டி வைத்திருக்கும் (செல்வங்களை) விட இது மிக்க மேலானது” என்று (நபியே!) நீர் கூறும்.(யூனூஸ்:58)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் றஹ்மதுன் லில் ஆலமீன் – அகிலத்தார் அனைவருக்கும் அருட்கொடை. அந்த அருட்கொடைக்காக மகிழ்ச்சியடையுமாறு அல்லாஹ் தஆலா கூறுகிறான்.
இத்திருவசனத்தின் அடிப்படையில் றபீஉல் அவ்வல் மாதத்தில் ஸுப்ஹான
மெளலித் ஓதி ஸலவாத்துசொல்லி அன்னதானம் – ஸதகா வழங்கி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ற அருட்கொடைக்காக மகிழ்ச்சியடைகின்றோம்.
மேலும் அல்லாஹ் தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கட்டளையிடுகின்றான்.
{وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ} [الضحى: 11]
93:11. மேலும், உம்முடைய இறைவனின் அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) சொல்லிக்காட்டுங்கள். (அல் ழுஹா 11)
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடை. அந்த அருட்கொடையைப் பற்றி (பிறருக்கு) சொல்லிக்காட்டுங்கள் என அல்லாஹ் தஆலா கூறுகிறான்.
அந்த அடிப்படையில் இந்த வசனத்தின் படி ரபீஉல்அவ்வல் மாதத்தில் ஸுப்ஹான மெளலித் ஓதி கவி மூலமும் பயான்கள் மூலமும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ற அருட்கொடையைப் பற்றி மக்கள் மத்தியில் எடுத்து சொல்கின்றோம்.
எனவே அல்குர்ஆன் ஓதுவது எவ்வாறு சிறப்பானதோ அதுபோல் ஸலவாத் சொல்லுவதும் சிறப்பானது தான். அதுவும் இறை கட்டளைக்கு அடி பணிவது தான் .
அந்த ஸலவாத் மௌலித் என்ற பெயரில் நடை பெற்றாலும் அது சிறப்பானது தான் என்பதில் சந்தேகமில்லை
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது புகழ்பாடுவதும் அவர்களுக்காக மகிழ்ச்சியடைவதும் அல்லாஹ்வின் கட்டளைக்கு அடி பணிவது தான் என்பதிலும் சந்தேகமில்லை.
Friday, 16 November 2018
பேரின்பம்
மனத்தூய்மைக்கு கொஞ்சம் ஆன்மீகம் பேசுவோமா!!!
இன்பம் பொதுவானது...அதில் இரண்டு வகை 1சிற்றின்பம் 2பேரின்பம்... அதென்ன சிற்றின்பம்...பேரின்பம். இதைப் பற்றி முக்காலமும் அறிந்த நம் மகான்கள் என்ன சொல்கிறார்கள் ...பார்ப்போமா
இன்பத்தில் என்னய்யா சிற்றின்பம் ...பேரின்பம்...!!_
படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம்.
படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம்.
படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம்.
படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம்.
படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.
படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.
என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.
இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.
நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.
நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.
அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.
அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.
செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.
செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.
செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.
செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.
புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.
அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.
இன்பத்தை அடைந்தாலும் திருப்தி அடையாதசிற்றின்பம்.
வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.
நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.
நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.
உடலோடு மனதை தொடர்பு படுத்துவது சிற்றின்பம்.
உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.
இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.
துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.
எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.
எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.
பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.
மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.
பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.
பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.
சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.
எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.
பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.
தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.
அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம்.
அளவற்றது, முடிவிலாதது பேரின்பம்.
அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்.
அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.
அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.
அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.
பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.
பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.
முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.
முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.
இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம்.
கருணையுடையது, தர்மமானது பேரின்பம்.
உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.
உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்.
புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்.
புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.
மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்.
மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.
மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்.
மரணத்தையும் வெல்வது பேரின்பம்.
மனமாய் இருந்தால் சிற்றின்பம்.
மனதைக் கடந்தால் பேரின்பம்.
வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்.
எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.
பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்.
மொத்தமாய் கண்டால் பேரின்பம்.
அகங்காரம் கொண்டால் சிற்றின்பம்.
அகங்காரம் துறந்தால் பேரின்பம்.
தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்.
அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்.
துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்.
துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்.
ஜீவராசிகளால் தரமுடிந்தது சிற்றின்பம்.
இறைவனால் தரப்படுவது பேரின்பம்.
உலகைப் பற்றினால் சிற்றின்பம்.
இறைவனைப் பற்றினால் பேரின்பம்.
பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம்.
தன் நலம் கொள்ளாதது பேரின்பம்.
இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்.
இன்பமான இன்பமே பேரின்பம்.
அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம்.
ஞானம் விரும்புவது பேரின்பம்.
பெற்று மகிழ்வது சிற்றின்பம்.
கொடுத்து மகிழ்வது பேரின்பம்.
சக்தியை இழப்பது சிற்றின்பம்.
சக்தியாய் மாறுவது பேரின்பம்.
பற்றுக் கொள்வது சிற்றின்பம்.
பற்றற்று இருப்பது பேரின்பம்.
மாறுவது, தாவுவது சிற்றின்பம்.
மாறாதது நிலைத்தது பேரின்பம்.
நிலையற்றது சிற்றின்பம்.
நிரந்தரமானது பேரின்பம்.
சிற்றின்பம் தவிர்த்து பேரின்பம் பெறுவோம்
நன்றி மசூரா வாட்ஸ்அப் குரூப்
Tuesday, 13 November 2018
கேள்வியும் பதிலும்
#ரோமாபுரியின்_சக்கரவர்த்தி_கைஸர், அமீர் முஆவியா ரலியுல்லாஹூ அன்ஹூ அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி,
அதில் கீழ்காணும் கேள்விகளுக்கு பதில் வேண்டியிருந்தார்.
1, கிப்லா இல்லாத பகுதி எது ?
2, தந்தை இல்லாதவர் யார் ?
3, குடும்ப பாரம்பரியமில்லாதவர் யார் ?
4, ஒருவரை அவருடைய கப்று கொண்டு நடந்தது அவர் யார் ?
5, கருவறையில் படைக்கப்படாத மூன்று வஸ்துக்கள் எவை ?
6, மூன்று பொருள் :- ஒன்று முழுமையானது. இன்னொன்று அரைகுறையானது. மற்றொன்று ஒன்றுமே இல்லாத வஸ்து. இவை யாவை ?
7, உலகிலுள்ள எல்லாப் பொருளின் வித்தையும் ஒரு பாட்டிலில் போட்டு எனக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு கேள்விகள் அடங்கிய இக்கடிதத்தை அமீர் முஆவியா ரலியுல்லாஹூ அன்ஹூ அவர்கள், அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலியுல்லாஹூ அன்ஹூ அவர்களுக்கு அனுப்பினார்கள்....!!!
அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் “திருக்குர்ஆனின் விஷய ஞானத்தையும் மார்க்கத்தின் சட்ட ஞானத்தையும் யா அல்லாஹ்! இவருக்கு கற்றுக்கொடு” [புகாரி : 75,143]
என விஷேசமாக துஆ செய்யப்பட்டவரும் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவர் என பிரபலமாக அறியப்பட்டவருமான
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர்காதஹூ
பேரறிஞர் இப்னு அப்பாஸ் ரலியுல்லாஹூ அன்ஹூ அவர்கள் மேற்படி கடிதத்திற்கு அளித்த பதில்கள் வருமாறு :-
1, கிப்லா இல்லாத பகுதி கண்ணியம் வாய்ந்த கஃபாவின் உள்பாகமாகும்...!!
2,தந்தை இல்லாதவர்,ரூஹுல்லாஹ் நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும்...
3, குடும்ப பாரம்பரியமில்லாதவர், பாவா ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும்....!
4, கப்று கொண்டு நடந்தது, ஹள்ரத் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களாகும்....!!
5, கருவரையில் வைத்து படைக்கப்படாத மூன்று வஸ்துக்களாவன ;
[1] நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பகரமாக குர்பானி கொடுப்பதற்காக நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆடு..!!!.
[2] கற்பாறையிலிருந்து வெளிவந்த நபி சாலிஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அதி அற்புத ஒட்டகம்...!!
[3] மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பாம்பு.
6, சுய புத்தி உள்ளவர் முழுமையானவர்...!! சொல் புத்தி மட்டும் உடையவர் அரைகுறையானவர்..!!!
சொல் புத்தியும் இல்லை. சுய புத்தியும் இல்லை. இவர் தான் ஒன்றுமே இல்லாத வஸ்து...!!!.
7, ஹள்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு பாட்டிலில் நீரை நிரப்பி “இது தான் எல்லா பொருளின் மூல வித்து” என பதிலளித்தார்கள்...!!!!
ஏனெனில் அல்லாஹ் தன் மறையில் وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ "நீரிலிருந்து தான் உயிருள்ள ஒவ்வொரு வஸ்துவையும் நாம் ஆக்கினோம்". [அல்குர்ஆன் :21 ;30] எனக் கூறுகிறான்...!!!!
ஸுபுஹானல்லாஹ்
ஸித்றத்துல் முன்தஹா
Saturday, 13 October 2018
மஹ்சூமீன்கள்_மஹ்fபூலீன்கள் எழுதியவர் ஹாரிஸ் ஐமாலி
சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைப்படி நபிமார்கள் மஹ்சூமீன்கள்.( அதாவது பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள்)
வலிமார்கள் (இறை நேசர்கள்) மஹ்Fபூலீன்கள் (அவர்களும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள்தான்)
பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டால்தான் இறை நெருக்கத்தை பெற முடியும். ஒரு பக்கம் பாவங்கள் செய்துகொண்டே மறுபக்கம் இறை நெருக்கத்தை பெற முடியாது.
உள்ளத்தில் ஒன்று இறைவன் இருப்பான்.
அல்லது ஷைத்தான் இருப்பான்.
உள்ளத்தில் ஷைத்தானிய சிந்தனை வந்துவிட்டால் இறைவன் வெளியேறி விடுவான்.
இறைவனின் சிந்தனையோடு வாழ்ந்தால் ஷைத்தான் வெளியேறி விடுவான்.
மஹ்சூமீன் ,மஹ்பூFலீன் இரண்டிற்கும் "பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள்"என்ற ஒரே பொருள்தான். ஆனால் பெரும் வித்தியாசம் இருக்கிறது.
நபிமார்கள் மஹ்சூமீன்கள் (பாவங்களிலிருந்து அல்லாஹ் பாதுகாத்தான். பாதுகாப்பான். அவர்களுக்கு சுய நாட்டம்(இக்தியார்) கிடையாது. அவர்களை அல்லாஹ் தன்னுடனே வைத்துக்கொள்வான்.அல்லாஹ்வை விட்டு வெளியேறி அவர்களால் பாவங்கள் செய்ய முடியாது. (இருந்தாலும் சில பாவங்களை இறைவன் வெளியாக்குவது நமது படிப்பினைக்காகத்தான். இது நீண்ட பாடம்..)
வலிமார்கள் மஹ்Fபூலீன்கள் அவர்களையும் அல்லாஹ்தான் பாவங்களிலிருந்து பாதுகாத்தான்,பாதுகாப்பான். ஆனால் அவர்களுக்கு இக்தியார் (சுய விருப்பம்) இருக்கும்.
அவர்கள் நாடினால் அல்லாஹ்வின் பாதுகாப்பிலே இருக்கலாம். அவர்கள் நாடினால் அல்லாஹ்வின் பாதுகாப்பை விட்டும் வெளியேறி விடலாம்.
இதுதான் நபிமார்களுக்கும் வலிமார்களுக்குமான வித்தியாசம்.
அடுத்ததாக ஒரு மனிதர் தன்னை நபி என கூறினால் அவர் முஹ்ஜிஜாத்களை (அற்புதங்களை ) செய்து காட்ட வேண்டும்.
அற்புதங்கள் செய்து காட்டாதவரை அவரை நபி என. நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
அதே நேரத்தில் ஒரு மனிதர் தன்னை வலி (இறை நேசர்) என கூறினால் அவர் அற்புதங்கள் செய்து காட்ட வேண்டிய அவசியமில்லை.
நாம் விரும்பினால் அவரை வலியாக ஏற்றுக்கொள்ளலாம்.
விரும்பாவிட்டால் வ.விலகி சென்று விடலாம். .
(விலகித்தான்செல்ல வேண்டும் நீ வலி இல்லை என்று மல்லுக்கட்டக்கூடாது. காரணம் அவர் உண்மையிலே வலி இல்லை என்றால் நாம் தப்பித்துக்கொள்வோம். அவர் உண்மையில் இறைவனின் நேசராக இருந்து அவரை நாம் நோவினை செய்தால் இறைவனிடம் மாட்டிக்கொள்வோம்) . எனவே அமைதியாக கடப்பதே சிறந்தது.
காரணம் வலிமார்கள் (இறை நேசர்கள்) இவ்வுலகில் நான்கு வகையாக இருப்பார்கள்.
1.அவர் வலி என்று அவருக்கும் தெரியாது. மக்களுக்கும் தெரியாது.
2. அவர் வலி என்று அவருக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும்.
3.அவர் வலி என்று மக்கள் நம்புவார்கள். அவருக்கு தெரியாது.
4. அவர் வலி என்று அவருக்கு மட்டுமே தெரியும், மக்களுக்கு தெரியாது.
இந்த நான்கில் ஏதேனும் ஒரு வகை வலிமார்கள் 40 பேரில் ஒருவர் இருக்கலாம்.
அது நீங்களாக இருக்கலாம்.உங்கள் பக்கத்து வீட்டுக்காரராக இருக்கலாம்.
எனவே எந்த மூஃமினான அடியார்களை பார்த்தாலும் இவர் காபிர், இவர் பாஸிக், இவர் முஷ்ரிக்,இவர் முனாபிக் என்று பார்க்காமல் இவர் அல்லாஹ்வின் நேசராக இருப்பாரோ என்ற சிந்தனையில் ஒவ்வொரு மூஃமின்களையும் நாம் பார்த்தால் அல்லாஹ் என் அடியான் என்னுடைய ஒவ்வொரு மூஃமினான அடியார்களயும் பார்த்து இவர் இறை நேசராக இருப்பாரோ இவர் இறை நேசராக இருப்பாரோ என நினைத்து வாழ்கிறான்.
இந்த நல்ல சிந்தனைக்காக (அல்லாஹ் அப்படி சிந்திப்பவரை ,அனைவர்களையும் இறை நேசராக பார்ப்பவரை ) முதலில் தன் நேசராக ஆக்கிக்கொள்வானாம்..
இன்ஷா அல்லாஹ்....
Wednesday, 19 September 2018
مجموعة كتب
*مجموعة كتب أكثر من ممتازة كنز ،قم بعمل"save"طور مكتبتك*
*سَاهِمُوا بِنَشْرِهَا فَالدّالُّ علَى الخَيرِ كَفَاعِلِه*
كتب الحديث :
- كتاب صحيح البخاري : https://goo.gl/vfGzAq
- كتاب صحيح مسلم : https://goo.gl/yTGB3P
- كتاب سنن ابي داود : https://goo.gl/ouhavB
- كتاب سنن النسائي : https://goo.gl/tJWZD9
- كتاب سنن الترمذي : https://goo.gl/pk8mKb
- كتاب سنن ابن ماجة : https://goo.gl/HizomS
- تطبيق جامع الكتب التسعة للحديث : https://goo.gl/M4KgTe
كتب الفقه :
- كتب الفقه الحنفي : https://goo.gl/9H9iT5
- كتب الفقه المالكي : https://goo.gl/g4MxxT
- كتب الفقه الشافعي : https://goo.gl/6C9Syl
- كتب الفقه الحنبلي : https://goo.gl/O5Lhxs
كتب السيرة النبوية :
- كتاب السيرة لابن هشام : https://goo.gl/p0cmeh
- كتاب السيرة لابن كثير : https://goo.gl/ydNe6x
- كتاب الرحيق المختوم : https://goo.gl/h4OlkM
كتب التفسير :
- كتاب تفسير الشعراوي : https://goo.gl/P47bNO
- كتاب تفسير القرطبي : https://goo.gl/PqGfJW
- كتاب تفسير ابن كثير : https://goo.gl/b4Lutb
- كتاب تفسير ابن عباس : https://goo.gl/XKwVjS
كتب متنوعة :
- الموسوعة الكونية الكبري : https://goo.gl/09uhvI
- سلسلة اعلام المسلمين : https://goo.gl/CnNgpU
- سلسلة الكون كتاب الله المنظور : https://goo.gl/W5ym5q
- كتاب اركان الاسلام : https://goo.gl/9nq7f9
- كتاب اركان الايمان : https://goo.gl/ALMd9s
- كتاب ففروا الي الله : https://goo.gl/IuIFH7
- كتاب احياء علوم الدين : https://goo.gl/04yiIh
- كتاب الاتقان في علوم القران : https://goo.gl/MlPld3
- كتاب رياض الصالحين : https://goo.gl/jMCP9D
- كتاب شرح الاربعون النووية : https://goo.gl/GUJZvY
- كتاب فقه السنة : https://goo.gl/KzR5Zx
- كتاب قصص الانبياء لابن كثير : https://goo.gl/YdGGYW
- كتاب مائة من عظماء الاسلام : https://goo.gl/Xtr2y3
- كتاب دلائل النبوة : https://goo.gl/fIDFsf
- كتاب السنن الكبري للبيهقي : https://goo.gl/xDpoCy
- كتاب السنن الصغري للبيهقي : https://goo.gl/sXkmiz
- كتب محمد راتب النابلسي : https://goo.gl/Og3g3D
زكاة العلم نشره
سَاهِمُوا بِنَشْرِهَا فَالدّالُّ علَى الخَيرِ كَفَاعِلِ
محمد شافعي عارف محضری شهودى
Tuesday, 18 September 2018
பூமான் நபிகளாரின் புனித ரவ்லா ஷரீப்
நபி (ஸல்) அவர்களின் ரவ்ளா ஷரீபின் கட்டிட வரலாறு
இமாம் காளி இயாள் (ரஹ்) அவர்கள் மற்றுமுள்ள மார்க்க அறிஞர்கள் பெரும்பாண்மையோர் ''நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு உடலை தாங்கி நிற்கும் புண்ணியமிகு கப்ரு உலகில் உள்ள எல்லா இடங்களைக் காட்டிலும் சிறந்தது என தீர்ப்பளித்துள்ளனர். (இத்திஹாப் 4: 416,417)
சில நல்லோர்கள்,உலமாக்கள்,
இமாம்கள் மற்றும் நபி (ஸல்) அவர்களின் கப்ரு, கஃபா பைத்துல் முகத்தஸைக்காட்டிலும் சிறந்தது எனத் தீர்ப்பளித்து விசுவாசத்தின் விளைநிலமான நபி (ஸல்) அவர்களை கண்ணியம் செய்வதே ஈமானைத் தக்கவைத்து கொள்ளும் உபாயம் என உபதேசம் செய்துள்ளார்ள். இவர்களில் முக்கியமானவர்கள் ஜர்கஸீ, அபதீ போன்ற பேரரிஞர்களாவர். (வஃபாவுல் வஃபா 1: 83)
நபி (ஸல்) அவர்களின் ரவ்ளா ஷரீபின் கட்டிட வரலாறு
நபி (ஸல்) அவர்களின் கப்ரு ஷரீப் மிகவும் தரைமட்டமில்லாமலும் மிக உயரமில்லாமலும் கப்ரின் மேல்பகுதி அழகான சிவந்த பொடிக்கற்களால் பதிக்கப்பட்டிருந்தது. ஆயிஷா (ரளி) அவர்கள் இருந்த அறையிலே நபி (ஸல்) அவர்கள் அடக்கப்பட்டார்கள். எனவே ஆயிஷா (ரளி) அவர்கள் அந்த அறையின் குறுக்கே மண்ணினால் ஒரு மதிலை எழுப்பி, நபி (ஸல்) அவர்களின் கப்ரு ஷரீஃப் ஒரு புறமிருக்க ஆயிஷா (ரளி) மறுபுறம் இருந்து கொண்டார்கள். அடிக்கடி நபி (ஸல்) அவர்களை ஜியாரத்துக்கு வருவதற்கு அதே மதிலில் ஒரு வாசலை வைத்துக் கொண்டார்கள். அன்னை ஆயிஷா (ரளி) அவர்களின் வீட்டின் மேற்கூறை பழுதுப்பட்டு இருந்ததால் காலப்போக்கில் இந்த மண்மதில் மழையால் கரைந்துவிட்டது.
இதன் பின் உமர் (ரளி) அவர்கள் தங்களது ஆட்சிக்காலத்தில் (ஹிஜ்ரி23 வரை) நபி (ஸல்) அவர்களின் கப்ரு ஷரீஃபை சுற்றி முக்கோணவடிவில் அழகிய கருங்கற்கலாலும்,சுண்ணாம்பாலும்,
மதில் எழுப்பினார்கள். எனினும் ஜியாரத் செய்பவர்களுக்கு தெரியும் அளவே மதில்களின் உயரம் இருந்தன.
நபி (ஸல்) அவர்களின் கப்ரின் பரக்கத்தை நாடி கப்ருக்கு அருகில் இருக்கும் மண்ணை எடுச்துச் செல்ல ஆரம்பித்தனர். இவ்வாறு மண்ணை எல்லோரும் எடுத்தால் நாளடைவில் நபி (ஸல்) அவர்களின் கப்ரை சுற்றி பெரும் பள்ளம் ஏற்பட்டு,புனிதமிகு ரவ்ளாவுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் எனப்பயந்த ஆயிஷா (ரளி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் ரவ்ளாவைச் சுற்றி சிறிது உயரமாக மதில் எழுப்பும்படி சொல்லி அவ்வாறே மதில்கள் கட்டப்பட்டன. இம்மதில்களில் நபி (ஸல்) அவர்களின் கப்ரு தெரியும்படி துவாரம் வைக்கப்பட்டது. இந்த ஜன்னல் போன்ற துவாரம் வழியாகவும் மக்கள் பரக்கத்தை வேண்டி மண்ணை எடுக்க ஆரம்பித்தார்கள். இதனால் ஜன்னல் போன்ற துவாரமும் அடைக்கப்பட்டது. (வஃபாவுல் வஃபா 2: 544)
பின்னர், அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரளி) அவர்களின் ஆட்சி காலத்தில் மேற்கண்ட மதில்கள் மிகவும் உயரமாக இல்லாததால் அவற்றை நல்ல உயரமாக கட்டினார். அபூபக்கர் (ரளி),உமர் (ரளி) ஆகியோரின் புனிதமிகு கப்ருகளையும் அதைச்சுற்றி சுவர்கள் எழுப்பும் விஷயத்திலும் எடுத்துக் கொண்டார்கள் என அனஸ் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்களின் கப்ரு இருந்த இடத்தை சுற்றி முதன் முதலில் சுவர் எழுப்பியவர் உமர் (ரளி) ஆகும். இந்த சுவர்கள் உயரம் குறைவாய் இருந்ததால் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரளி) அம்மதில்கைள உயரமாகக் கட்டினார்கள். (ஐனீ 4:252, வஃபாவுல் வஃபா 2: 544)
உமையாக்கள் ஆட்சிகாலத்தில் உமர் பின் அப்துல் அஜீஜ் (ரளி) அவர்கள் மதீனாவின் கவர்னராக இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு கப்ரு ஷரீஃபை சுற்றியிருந்து மதில்கள் பலமில்லாமல் போகவே அம்மதில்களிலிருந்து சற்று இடைவெளிவிட்டு,சுற்றுச்சுவர் கட்ட ஏற்பாடானது. இவ்வாறு புணருதாரம் செய்ய, நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களின் வீடுகளை வாங்கி விரிவாக்கம் நடந்தது. இவ்வாறு நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு ரவ்ளா ஷரீஃபின் வெளிச் சுவர்கள் கட்டப்பட்டபின்பு உட்சுவர்கள் இடிக்கப்பட்டன. அப்போது இதன் அதிர்வு தாங்காமல் நபி (ஸல்) அவர்கள்,அபூபக்கர் (ரளி), உமர் (ரளி) அடக்கப்பட்டிருந்த கப்ருகளின் சுற்றுப்புறத்தின் ஒருபகுதி இடிந்து சரிந்து விட்டது. இதேபோல் கப்ரின் ஒருபுறமிருந்து மண்திட்டும் சரிந்ததால் கப்ரிலிருந்து முழங்கால் முதல் பாதம் வரை ஒருவரின் கால்பகுதி வெளியே தெரிந்தது. இது நபி (ஸல்) அவர்களின் கால்தான் என பதறித்துடித்து ஆச்சரியப்பட்டு துக்கத்துடன் அழுது கூக்குறலிட ஆரம்பித்தனர். கூட்டமும் வெகுவாக கூட ஆரம்பித்தது. அப்போது அங்கிருந்த உர்வா (ரளி) அவர்கள் இது நபி (ஸல்) அவர்கள் கால் அல்ல. இது நிச்சயமாக உமர் (ரளி) அவர்களின் கால்தான் எனத் தெரிவித்து மக்களின் துயரை துடைத்தார். இந்நிகழ்ச்சி உமர் பின் அப்துல் அஜீஜ் (ரளி) அவர்களின் முன்னிலையிலே நடந்தது. மீண்டும் உமர் (ரளி) அவர்களின் புனிதமான கால் கப்ரில் உள்புறம் வைக்கப்பட்டு
கப்ருகள் கட்டப்பட்டன. (ஐனீ 4:251, பத்ஹுல் பாரி3:165, ஹயாதுஸ் ஸஹாபா22-23, தஹ்தீபுத் தஹ்தீப் 7: 475-477)
حدثنا فروة ، حدثنا علي ، عن هشام بن عروة ، عن أبيه لما سقط عليهم الحائط في زمان الوليد بن عبد الملك أخذوا في بنائه فبدت لهم قدم ففزعوا وظنوا أنها قدم النبي صلى الله عليه وسلم فما وجدوا أحدا يعلم ذلك حتى قال لهم عروة لا والله ما هي قدم النبي صلى الله عليه وسلم ما هي إلا قدم عمر ، رضي الله عنه. (بخارى-1390)
அப்தில் மலிக்கின் (ஆட்சிக்) காலத்தின்போது நபி(ஸல்) அடக்கம் செய்யப்பட்ட அறையின் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. அதைப் புனர் நிர்மாணம் செய்வதில் மக்கள் ஈடுபட்டபோது ஒரு பாதம் வெளியில் தெரிந்தது. உடனே மக்கள் பதறிப் போய் அது நபி(ஸல்) அவர்களின் பாதமாக இருக்குமோ என நினைத்தனர். இது பற்றித் தெரிந்தவர் யாருமில்லாதிருந்தபோது நான் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது நபி(ஸல்) அவர்களின் பாதமே இல்லை; மாறாக,இது உமர்(ரலி) அவர்களின் பாதகமாகும் என்றேன்" என உர்வா கூறுகிறார். (புகாரி:1390)
அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரளி) அவர்களால் கட்டப்பட்ட மதில்கள் பலமானதாக நிர்மாணிக்கபட்டு, அதன் மேல் தளம் எழுப்பப்பட்டது. கப்ரின் மேற்பகுதி அழகான வேலைப்பாடுகள் உள்ள மரக்கட்டைகள்,பலகைகளைக் கொண்டு வேயப்பட்டது. அதன் பின் கலீஃபா ஹாரூன் ரஷீதின் காலத்தில், நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு கப்ரின் மேல் மரத்தால் கட்டப்பட்ட பகுதி திறக்கப்பட்டபோது அதில்193 வேலைப்பாடு மிக்க மரக்கட்டைகள் இருந்தன. அவை 70 கட்டைகள்,உத்திரங்கள் முறிந்து சிதிலமடைந்திருந்தன. அவைகளுக்கு பதிலாக 70புதிய கட்டைகள் மாற்றப்பட்டன. புனிதமிகு கப்ரின் அறையின் மதில்கள் அழகான பாலிஷ் செய்யப்பட்ட கற்கலால் கட்டப்பட்டன.
பின்னர் ஹிஜ்ரி 232-ல் கலீஃபா முத்தவக்கில் காலத்தில் நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு கப்ரை சுற்றியுள்ள மதில்களின் வெளிப்புறமும், உட்புறமும் வெள்ளை பளிங்கி கற்கள் பதிக்கப்பட்டு மிக நேர்த்தியான வேலைப்பாடுகளால்;;அல்ஹுஜரதுஷ் ஷரீஃபா''அழகுப் படுத்தப்பட்டது.
பின்னர் கலீஃபா முக்தபீ பில்லாஹ் அவர்களின் ஆட்சிகாலத்தில் ஹிஜ்ரி548-ல் மேலும் பளிங்கிக் கற்கள் பதிக்கப்பட்டு சிதிலம் அடைந்தப் பகுதியை நீக்கப்பட்டு,செப்பனிடப்பட்டு நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு கப்ரு, அபூபக்கர் (ரளி), உமர் (ரளி) ஆகியோர்கள் கப்ருகள் இருந்த அறை, அதை ஒட்டியுள்ள பகுதிகள் அனைத்தும் புனர்தானம் செய்யப்பட்டு பளிங்கிக் கற்கள் பதிக்கப்படடுள்ளன.
பின்னர் ஹிஜ்ரி 654-ல் வருடம் ரமலான் மாதம் முதல் நாள் அன்று, நபி (ஸல்) அவர்கள் அடங்கியிருக்கும் மஸ்ஜிதுன் நபவியின் மனாராவில் விளக்கு ஏற்றுவதற்காக சென்ற ஒருவர் தன்னுடன் கொண்டு சென்ற தீவட்டியை மறந்து மனாராவிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டார். அதன் தீ மனாராவில் சுற்றி வடிந்து காலாகாலம் தரையிலும் பரவியிருந்த எண்ணை வடுக்களில் பற்றி தீ பரவியது. பற்றி எரிந்த தீ,பள்ளிவாசல் மேல் தளத்தை இரையாக்கி,எங்கும் பரவிய தீ,மஸ்ஜிதுன் நபவியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு கரித்து துவசம் செய்தது. இத்தீ விபத்தில்,நபி (ஸல்) அவர்களது புனிதமிகு கப்ர், அபூபக்கர்-உமர் (ரளி) ஆகியோர்கள் கப்ர், உதுமான் (ரளி) ஓதிய குர்ஆன் ஆகியை மட்டும் எரியவில்லை.
ஹிஜ்ரி 650-ஆம் ஆண்டு,எகிப்து மன்னர் நூருத்தீன் ஜன்கீ, யமன் நாட்டு மன்னர் ஷம்சுத்தீன் யூசுஃப் ஆகியோர் கட்டுமான பொருட்களை அனுப்பி ரவ்ளா, மற்றும் மஸ்ஜிதுந் நபவியின் கட்டுமானப் பணியை தொய்வில்லாது நடைபெறும்படி செய்தனர். புpன்னர் ஹிஜ்ரி 658-ல் எகிப்தின் மன்னர் ருக்னுத்தீன் பைப்ரஸ் அவர்கள், ரவ்ளா மற்றும் மஸ்ஜிதுன் நபவியின் விடுபட்ட பகுதியின் கட்டுமானத்திற்காக பொருட்கள், 53 கட்டப் பொறியாளர்களையும் ஜமாலுத்தீன் ஸாலிஹ் என்பவரின் தலைமையில் மதீனாவிற்கு அனுப்பி அவைகைள அழகுடன் நிர்மாணிக்கப்பட்டு புதுப்பொழிவுடன் ஆக்கினார்கள்.
ஹிஜ்ரி 706-ல் ரவ்ளா ஷரீப் மற்றும் மஸ்ஜிதுன் நபவியின் மேற்கு,கிழக்குப் பகுதியில் மாடிகள் மேற்கூறைகள் கட்டப்பட்டு உறுதியாக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், அபூபக்கர்-உமர் (ரளி) ஆகியோர்களின் கப்ருகளையும் அழகு படுத்துவதிலும் மிக, மிக அக்கறை கொண்ட சுல்தான் கலாவூனும்,ருக்னுத்தீன் பைப்ரஸ்,சுல்தான் காய்த்தபாதயீ,மற்றும் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி சரித்திரத்தில் இடம் பிடித்து நபியவர்களின் உள்ளத்திலும் இடம் பிடித்துள்ளனர்.
ஹிஜ்ரி 731-ல், மலிக்குல் அஷ்ரப் பர்ஷ்பாய் என்பவர், நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசலை மேலும் ஒரு நீண்ட பெரிய மாடியை கட்டினார். இதன் பின்னர்,ஹிஜ்ரி 777-ல் சுல்தான் கலாவூன் என்பவர் மஸ்ஜிதுன் நபவியை விரிவு படுத்தி, ரவ்ளா ஷரீபுக்கு செல்ல தனிப்பாதை அமைத்தார்.
ஹிஜ்ரி 779-ல் சுல்தான் காய்தபாய் என்பவர் பொருப்பேற்று,பள்ளிவாசலின் கிழக்குப் புறச் சுவர் இடிக்கப்பட்டு, மேலும் 27 முழங்கள் அகலப்படுத்தப்பட்டு சுவர் எழுப்பப்பட்டது. பின்னர் ஹிஜ்ரி 781-ல், நபி (ஸல்) அவர்களின் ரவ்ளா புனர் நிர்மாணப் பணிக்கு ஹாஜா ஷம்ஜீ என்பவர் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவரின் மேற்பார்வையில் ரவ்ளா ஷரீபின் மேல்தளமும் அதனுடன் சேர்ந்து நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு கப்ரின் மேல் எழுப்பப்பட்ட நீலநிற குப்பாவைச் சுற்றியுள்ள பகுதியும் உயர்த்தப்பட்டு, மின்பரின் கிழக்குபுறமுள்ள மேற்பகுதியில் முறிந்தும், உடைந்தும் போன கட்டைகள், உத்திரங்கள் பலவற்றை மாற்றி அமைக்கப்பட்டது.
ஹிஜ்ரி 853-ல் சுல்தான் லாஹிர் ஜக்மகின் காலத்தில் மஸ்ஜிதுன் நபவியின் மாடியின் தளத்தில், நபி (ஸல்) அவர்களின், அபூபக்கர்-உமர் (ரளி) ஆகியோர்களின் புனிதமிகு கப்ருகள் இருக்கும் கட்டிடத்தின் ரவ்ளா ஷரீபின் மேல்தளத்தில் பெரும் கீரல் (விரிசல்) ஏற்பட்டது. மிகுந்த பொருட் செலவில் அக்கறையுடன் அதை செப்பனிட்டு ரவ்ளா புதுப்பிக்கப்பட்டது.
பின்னர், ரவ்ளா ஷரீப் விரிவாக்கப்பட்டு மூன்று வாயில்கள் உள்ள அறையாக கட்டப்பட்டது. அதன் சுற்றுப் புறங்களில் பித்தளைக் கம்பிகளால் ஆன ஜன்னல்கள் வைக்கப்பட்டன. புனிதமிகு கப்ருகளை நெருங்கி மரியாதை இல்லாமல் நடந்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக கப்ருகளைச் சுற்றி வேலி போன்ற இரும்புத் தடுப்பு அமைக்கப்பட்டது. இந்த தடுப்புக்கு பித்தளை முலாம் பூசப்பட்டது. ஜும்ஆ நாளன்று கூட்டம் அதிகமாக இருப்பதால் ரவ்ளா ஷரீபின் பணியாளர்கள் மட்டும் தடுப்புக்கு உள்ளே நின்று தொழ அனுமதிக்கப்பட்டனர். இந்த அறையே; ஹுஜ்ரத் ஷரீபா (கண்ணியமான அறை) என்று அழைக்கப்பட்டது.
ஹுஜ்ரத் முபாரக்காவில் நுழைவதற்கும் நபி (ஸல்) அவர்கள், அபூபக்கர்-உமர் (ரளி) அகியோர்கள் அடக்கமாகியுள்ள அறைகளின் வாயில்களில் ஒரு வாயில் மட்டும் திறந்தே இருக்கும். (வஃபாவுல் வஃபா 2:616)
ஹஜ் உடைய காலங்களில் மட்டும் மக்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால்,அக்காலத்தில் மட்டும் ரவ்ளாவின் அறை பூட்டப்பட்டு வந்தது. நபி (ஸல்) அவர்களின் அறைக்கும் இரும்புத் தடுப்புக்கும் இடைப்பட்ட பகுதி ஹஜ் காலங்களில் பெண்கள் தங்கள் குழந்தையுடன் தங்கும் இடமாகும். சில சமயம் பிள்ளைகள் அப்பகுதியில் அசுத்தம் செய்துவிடும். எனவே, ஹிஜ்ரி 732-ல் சுல்தான் மலிக்கு நாஸிர் ஹஜ்ஜுக்கு வந்து, நபி (ஸல்) அவர்களின் இடத்திற்கு வந்து இவையெல்லாம் பார்த்து,நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு அறைக்கும் இரும்புத் தடுப்புக்கும் இடைப்பட்ட பகுதியை மட்டும் ஹஜ்ஜுக் காலங்களில் மட்டும் பூட்டிவிட உத்தரவு இட்டார். அதன்பின் ஹஜ்ஜுக்காலங்களில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் நபி (ஸல்) அவர்களை ஜியாரத் செய்ய அந்த அறையில் நுழைவதால் பெரும் சிரமம் ஏற்பட்டு கட்டுப்பாடு இல்லாமல் போனது. எனவே, புனித அறையின் எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டன. இவ்வாறு ஹுஜ்ரத் ஷரீபாவை அடைக்கப்பட்டதால் நபி (ஸல்) அவர்களின் ஜியாரத் மட்டும் தடைபடவில்லை.
(தகவல்: மகான்களின் மண்ணறைகள்)