🖤அல்மதத் யா ஷைகு ஜிந்தாஷாஹ் மதார்.....
💚பணிந்தால் உயர்வாய்
💚மன் தவாலஅ ரஃபஅஹீல்லாஹ்
வ மன் தகப்பர அஹீல்லாஹ்
💚அரபியின் முதல் எழுத்து அலிஃப்பாக இருக்கும் போது❓
பிஸ்மில்லாஹ்வில் ஏன் அல்லாஹ் பா வை முதலில் கொண்டு வந்தான்❓
அலிஃப் தன்னை நிமிர்த்தி நிற்கின்றது ஆனால் பா தன்னை தாழ்த்தி பணிந்து இருக்கிறது .
அனைத்து விஷயத்திற்கும் அடிப்படையாக ஆரம்பமாக இருப்பது பிஸ்மி
மலைமேல் ஒருவன் ஏறும் போது குனிந்து தான் ஏற வேண்டும் ஆனால் இறங்கும் போது நிமிர்ந்து தான் இறங்க வேண்டும்
அல்லாஹ் இங்கு நமக்கு சொல்ல வருவது அனைத்திற்கும் அடிப்படை பணிவு தான்.
💚ஆறு விஷயம் இதற்கு உதாரணம்
☘️முதல் விஷயம்
💚நூஹ் (அலை) அவர்களின் கப்பல் ஒதுங்கிய ஜூதி மலை
அல்லாஹ் அனைத்து மலைகளுக்கும் வஹி அறிவித்தான் எனது நபியின் கப்பல் உங்களில் ஒருமலையின் மீது ஒதுங்கும். அனைத்து பெரிய மலைகளும் தன் மீது தான் நபியின் கப்பல் ஒதுங்கும் என்று பெருமை அடித்துக் கொண்டது .ஆனால் ஜுதிமலை மட்டும் தன்னை தாழ்வாக கருதி மிகப்பெரிய மலைகலெல்லாம் உள்ளது நாமோ சிறிய மலையென்று தன்னை கருதியது எனவே இறைவன் அந்த மலைக்கு உன்னத தன்மையை கொடுத்தான்.
☘️விஷயம் :2
💚மூஸா(அலை)அவர்கள்
இறைவனிடம் பேச சென்ற தூர்ஸினா மலை:
அல்லாஹ் எல்லா மலைகளுக்கும் வஹி அறிவித்தான் எல்லா மலைகளும் பெருமை கொண்டது தூர்ஸினா மலை மட்டும் தன்னை தாழ்த்தி பணிவாக்கியது. அல்லாஹ்வுக்கு இது விருப்பமானது அதைத்தான் (துர்ஸினாமலை) மூஸா நபியோடு பேச தேர்த்தெடுத்தான் அந்த துர்ஸினா மலையை பரிசுத்தமான இடம் என்று அல்லாஹ் கூறுகிறான்
☘️விஷயம் : 3
💚யூனுஸ்(அலை) அவர்கள் 40 நாட்கள் தங்கிஇருந்த மீன்
அல்லாஹ் எல்லா மீன்களுக்கும் வஹி அறிவித்தான் எனது நபி யூனுஸ்(அலை) உங்களில் ஒருவரின் வயிற்றில் வருவார் என்றான் உடனே
எல்லா மீன்களுக்கும் தனது வயிற்றில் வருவார் என்று எண்ணியது
ஆனால் யூனுஸ்(அலை) அவர்களை விளுங்கிய மீன் மட்டும் தன்னை பணிவாக கருதியது எனவே அல்லாஹ் அதற்கு அந்த வாய்ப்பை வழங்கினான்.
☘️விஷயம் : 4
💚தேனி அல்லாஹ் எல்லா பறவைகளுக்கும் வஹி அறிவித்தான்: உங்களில் ஒரு பறவை இனத்தின் வயிற்றில் இருந்து மாறுபட்ட பல வண்ணங்களில் ஒரு குடி பானம் வெளியாகும் அது மனிதர்களுக்கு நோய் நிவாரணியாகும்.
உடனே எல்லா பறவைகளும் தன் வயிற்றில்தான் அந்த பானம் உறுவாகும் என்று நினைத்தது ஆனால் சிறிதாக இருந்த தேனி மட்டும் தன்னுடைய வயிற்றில் இருந்தா வரபோகுது என்று நினைத்தது நானே சின்ன பறவை
என்று எண்ணியது எனவே அல்லாஹ் அதன் வயிற்றில் தேனை வைத்தான் அதன் மூலம் மனிதனுக்கு சுகத்தை வைத்தான்.
☘️விஷயம் 5
💚இறைவனுக்கு அடிபணியும் ஸுஜுது இது எந்த மதத்திலும் இல்லாத ஒன்று.
ஒரு மனிதன் தன்னை முழுவதுமாக இறைவனுக்கு பணிந்து விடும்போது அது அல்லாஹ்வுக்கு மிக விருப்பமாகி விடுகிறது.
அதனால்தான் தொழுகையில் அனைத்து ருக்உகளையும் ஒருமுறை வைத்த இறைவன் ஸுஜுதை மட்டும் இரண்டு தடவை வைத்தான்
☘️விஷயம் :6
💚உயிரினும் மேலான உத்தம நபிகள் நாயகம் (ஸல்)
ஸஹாபாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்
யா ரசூலல்லாஹ்
நபி இப்ராஹீம்(அலை) அவர்களை அல்லாஹ் தன் நேசராக
(கலீலுல்லாஹ்வாக) தேர்ந்தெடுத்தான். மூஸா (அலை)அவர்களை தன்னிடம் பேசிய கலீமுல்லாஹ் தேர்ந்தெடுத்தான்.
ஈஸா (அலை)அவர்களை தனது ரூஹுல்லாஹ் வாக தேர்ந்தெடுத்தான். தங்களை அல்லாஹ் எவ்வாறு வைத்துள்ளான்❓
அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் அப்துல்லாஹ்
(அல்லாஹ்வின் அடிமை) என்று பதிலளித்தார்கள். எனவே அல்லாஹ் அவர்களை அனைத்து நபிமார்களை விடவும் உயர்த்தினான் தனது பிரியத்திற்குரிய (ஹபீபுல்லாஹ்வாக) தேர்ந்தெடுத்தான். எனவே யார் பணிந்து நடக்கிறார்களோ அவர்களை அல்லாஹ் உயர்த்துவான்.
☘️பணிவோம் உயர்வோம்...
🖤தம் மதார் பேடா பார்...