Friday, 16 November 2018

பேரின்பம்

மனத்தூய்மைக்கு கொஞ்சம் ஆன்மீகம்  பேசுவோமா!!!

இன்பம் பொதுவானது...அதில் இரண்டு வகை 1சிற்றின்பம் 2பேரின்பம்... அதென்ன சிற்றின்பம்...பேரின்பம். இதைப் பற்றி முக்காலமும் அறிந்த நம்   மகான்கள் என்ன சொல்கிறார்கள் ...பார்ப்போமா

இன்பத்தில் என்னய்யா சிற்றின்பம் ...பேரின்பம்...!!_

படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம்.

படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம்.

படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம்.

படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம்.

படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.

படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.

என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.

இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.

நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.

நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.

அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.

அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.

செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.

செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.

செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.

செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.

புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.

அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.

இன்பத்தை அடைந்தாலும் திருப்தி அடையாதசிற்றின்பம்.

வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.

நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.

நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.

உடலோடு மனதை தொடர்பு படுத்துவது சிற்றின்பம்.

உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.

இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.

துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.

எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.

எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.

பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.

மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.

பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.

பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.

சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.

எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.

பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.

தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.

அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம்.

அளவற்றது, முடிவிலாதது பேரின்பம்.

அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்.

அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.

அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.

அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.

பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.

பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.

முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.

முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.

இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம்.

கருணையுடையது, தர்மமானது பேரின்பம்.

உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.

உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்.

புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்.

புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.

மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்.

மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.

மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்.

மரணத்தையும் வெல்வது பேரின்பம்.

மனமாய் இருந்தால் சிற்றின்பம்.

மனதைக் கடந்தால் பேரின்பம்.

வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்.

எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.

பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்.

மொத்தமாய் கண்டால் பேரின்பம்.

அகங்காரம் கொண்டால் சிற்றின்பம்.

அகங்காரம் துறந்தால் பேரின்பம்.

தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்.

அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்.

துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்.

துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்.

ஜீவராசிகளால் தரமுடிந்தது சிற்றின்பம்.

இறைவனால் தரப்படுவது பேரின்பம்.

உலகைப் பற்றினால் சிற்றின்பம்.

இறைவனைப் பற்றினால் பேரின்பம்.

பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம்.

தன் நலம் கொள்ளாதது பேரின்பம்.

இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்.

இன்பமான இன்பமே பேரின்பம்.

அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம்.

ஞானம் விரும்புவது பேரின்பம்.

பெற்று மகிழ்வது சிற்றின்பம்.

கொடுத்து மகிழ்வது பேரின்பம்.

சக்தியை இழப்பது சிற்றின்பம்.

சக்தியாய் மாறுவது பேரின்பம்.

பற்றுக் கொள்வது சிற்றின்பம்.

பற்றற்று இருப்பது பேரின்பம்.

மாறுவது, தாவுவது சிற்றின்பம்.

மாறாதது நிலைத்தது பேரின்பம்.

நிலையற்றது சிற்றின்பம்.

நிரந்தரமானது பேரின்பம்.

சிற்றின்பம் தவிர்த்து பேரின்பம் பெறுவோம்

நன்றி மசூரா வாட்ஸ்அப் குரூப்

Tuesday, 13 November 2018

கேள்வியும் பதிலும்

#ரோமாபுரியின்_சக்கரவர்த்தி_கைஸர், அமீர் முஆவியா ரலியுல்லாஹூ அன்ஹூ    அவர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பி,

அதில் கீழ்காணும் கேள்விகளுக்கு பதில் வேண்டியிருந்தார்.

1, கிப்லா இல்லாத பகுதி எது ?

2, தந்தை இல்லாதவர் யார் ?

3, குடும்ப பாரம்பரியமில்லாதவர் யார் ?

4, ஒருவரை அவருடைய கப்று கொண்டு நடந்தது அவர் யார் ?

5, கருவறையில் படைக்கப்படாத மூன்று வஸ்துக்கள் எவை ?

6, மூன்று பொருள் :- ஒன்று முழுமையானது. இன்னொன்று அரைகுறையானது. மற்றொன்று ஒன்றுமே இல்லாத வஸ்து. இவை யாவை ?

7, உலகிலுள்ள எல்லாப் பொருளின் வித்தையும் ஒரு பாட்டிலில் போட்டு எனக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு கேள்விகள் அடங்கிய இக்கடிதத்தை அமீர் முஆவியா ரலியுல்லாஹூ அன்ஹூ அவர்கள், அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலியுல்லாஹூ அன்ஹூ அவர்களுக்கு அனுப்பினார்கள்....!!!

அருமை நாயகம்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களால் “திருக்குர்ஆனின்   விஷய ஞானத்தையும் மார்க்கத்தின் சட்ட ஞானத்தையும் யா அல்லாஹ்! இவருக்கு கற்றுக்கொடு” [புகாரி : 75,143]

என விஷேசமாக துஆ செய்யப்பட்டவரும் திருக்குர்ஆன் விரிவுரையாளர்களின் தலைவர் என பிரபலமாக அறியப்பட்டவருமான

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபர்காதஹூ

பேரறிஞர் இப்னு அப்பாஸ் ரலியுல்லாஹூ அன்ஹூ   அவர்கள் மேற்படி கடிதத்திற்கு அளித்த பதில்கள் வருமாறு :-

1, கிப்லா இல்லாத பகுதி கண்ணியம் வாய்ந்த கஃபாவின் உள்பாகமாகும்...!!

2,தந்தை இல்லாதவர்,ரூஹுல்லாஹ்    நபி   ஈஸா  அலைஹிஸ்ஸலாம்  அவர்களாகும்...

3, குடும்ப பாரம்பரியமில்லாதவர், பாவா ஆதம் அலைஹிஸ்ஸலாம்  அவர்களாகும்....!

4, கப்று கொண்டு நடந்தது, ஹள்ரத் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம்  அவர்களாகும்....!!

5, கருவரையில் வைத்து படைக்கப்படாத மூன்று வஸ்துக்களாவன ;

[1] நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம்  அவர்களுக்குப் பகரமாக குர்பானி கொடுப்பதற்காக நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்  அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆடு..!!!.

[2] கற்பாறையிலிருந்து வெளிவந்த நபி  சாலிஹ்  அலைஹிஸ்ஸலாம்   அவர்களின் அதி அற்புத ஒட்டகம்...!!

[3] மூஸா அலைஹிஸ்ஸலாம்  அவர்களின் பாம்பு.

6, சுய புத்தி உள்ளவர் முழுமையானவர்...!! சொல் புத்தி மட்டும் உடையவர் அரைகுறையானவர்..!!! 

சொல் புத்தியும் இல்லை. சுய புத்தியும் இல்லை. இவர் தான் ஒன்றுமே இல்லாத வஸ்து...!!!.

  7,  ஹள்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு  அவர்கள் ஒரு பாட்டிலில் நீரை நிரப்பி “இது தான் எல்லா பொருளின் மூல வித்து” என பதிலளித்தார்கள்...!!!!

ஏனெனில் அல்லாஹ் தன் மறையில் وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ "நீரிலிருந்து தான் உயிருள்ள ஒவ்வொரு வஸ்துவையும் நாம் ஆக்கினோம்". [அல்குர்ஆன் :21 ;30] எனக் கூறுகிறான்...!!!!

ஸுபுஹானல்லாஹ்

ஸித்றத்துல் முன்தஹா