பாங்கு சத்தம் கேட்டவுடனே பக்திமான்போல் பள்ளிவாயலுக்கு ஓடிச்சென்று இமாம் ஜமாஅத்துடன்
ஐந்து வேளையும் தவறாமல், மனதை மட்டும் மேயவிட்டு விட்டு, வரவு செலவு கணக்குகளையெல்லாம் மனதுக்குள் பார்த்துக்கொண்டு
உடன்பிறந்த அண்ணன் அக்காளுக்கு கன்னத்தில் பளாரென்று ஒரு அறையை விடலாமா ?
தம்பி, தங்கையை
ஒரு தட்டு தட்டலாமா ?
பெண்டாட்டியை உதை உதையென்று உதைக்கலாமா ?
தொழவராத பிள்ளைகளை பிண்ணியெடுக்கலாமா ? என்று இவ்வாறெல்லாம் மனதில் கொடிய திட்டங்களைப்போட்டுக்கொண்டு,
மனதால் பாவம் செய்துக்கொண்டு
உடலால் மட்டுமே தொழக்கூடிய அல்லது
குர்ஆன் ஓதக்கூடிய,
வெளிரங்கத்தில் இபாதத் என்ற பெயரில் நல்ல அமல்கள் செய்வதுபோல் வேஷம் போடக்கூடிய கொடிய முனாஃபிக்குகளை
கல்நெஞ்சர்களை, நீசர்களை,
எல்லாம் அறிந்த அல்லாஹ், ஒருக்காலும் மன்னித்து ஏற்றுக்கொள்ள மாட்டான் !
பாங்கின் சப்தத்தை கேட்கும்போது,
ஒரு இனிய உணர்வு இயல்பாக வரவேண்டும்
அல்லாஹும்ம றப்ப ஹாதிஹி தஃவத்தித் தாமத்தி........
யா அல்லாஹ் இந்த தொழுகை அழைப்புக்கு உரியவனும் நீயே !
அழைப்பவனும் நீயே !
அழைக்கப்படும் அடியார்களும் நீயே !
என்ற ஹக்கீகத்தை யதார்த்தத்தை உணரும்போது,
இந்த அழைப்பு மட்டுமல்ல!
எல்லா உழைப்பும் நீயே !
எல்லா செயல்களுக்கும் உரியவன் நீயே !
சிருஷ்டிகள் உண்மையல்ல !
அவ்வாறு தோன்றுவது நீயே !
அதேபோல் எல்லாம் நீயே !
எல்லாம் உன் செயலே !
நீயே நானாக,
நானே நீயாக
அவனாக, அனைத்துமாக இருக்கின்றாய் ! என்று நினைத்து அவனருளாலே உணர்வதே இறைவுணர்வு !
இதுவே
கல்பின், ரூஹின்
தக்வா !
அதேநேரம், ஒரு மனிதன், கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தை சொ ல்லாலேத் தரக்கூடிய தாரத்தின், கொடிய சித்திரவதையை தாங்கும் சக்தியில்லாமல்
தற்கொலை செய்து கொண்டால், அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான் !
ஆதலால், தண்ணீர் அடிப்போம் என்ற எண்ணத்தில்
பாருக்குள்சென்று
பீர், அல்லது ஒய்ன்
ஒரு பெக்கை உள்ளுக்குள் அழுதுக்கொண்டே குடிக்கின்றான் !
ஆனால், யார் குடியையும் கெடுக்கவேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் ஒரு துளிக்கூட இல்லை !
யா அல்லாஹ் ! நான்
பாவம் செய்கின்றேன்!
என்னை மன்னித்தருள்புரி !
நீ மிகவும் மன்னிக்கக்கூடியவன் ! என இறைவனின் அளவற்ற கருணையின்மீது
மன்னிக்கும் தன்மையின் மீது நம்பிக்கை வைத்து
மன்றாடுகின்றான்
தாய், தந்தைக்கும் பாசத்தை பிச்சையாகத் தரும் தயாளன் அல்லாஹ், நாடினால், நிச்சயம் தன் அடியான் தான் யார் ? என்னும் உண்மையை சரிவர அறியாததனால்தான், இவ்வாறு பாவம் செய்கின்றான் !
இவனை மன்னித்து ஹிதாயத்தை தந்து விடுவோம் என திருவுளம் கொள்கின்றான் !
அவனை சீதேவித்தனமுள்ளவனாக, நல்லடியானாக மாற்றியும் விடுகின்றான் !
ஏனெனில், அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா
தன் அடியார்களின் உள்ளங்களை மட்டும்தான் விசேஷமாகப் பார்க்கின்றான்!
இதனால்தான் எம்பெருமான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,
அல்லாஹ் உங்களின் உடல்களையும், தோற்றங்களையும் பார்ப்பதில்லை !
ஆனால், நிச்சயமாக உங்களின் கல்புகளையே சதாவும் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான் என நவின்றனர் !
இதனால்தான், நம் ஸூஃபி மஹான்கள்
தஜ்கியத்துன் நஃப்ஸ் என்னும்
மனத்தூய்மைக்கே மிகவும் முக்கியத்தும் அளிக்கின்றனர் !
அய்யன் வள்ளுவர் பெருமானும்
"மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்தறன் ஆகுல நீர பிற"
என மனத்தூய்மையையே மிக்க வலியுறுத்துகின்றார் !
மனம் தூய்மையடைவது நம் கைகளில் நிச்சயம் இல்லை !
வல்ல ரஹ்மான் அல்லாஹ்விடம்
முழுமனதுடன், உருக்கத்துடன் பிரார்த்திக்க வேண்டும் !
இதற்கும் அவனருள் வேண்டும் !
அல்லாஹும்ம தஹ்ஹிர் குலூபனா !
யா அல்லாஹ் !
எங்களின் உள்ளங்களை பரிசுத்தப்படுத்தப்படுத்துவாயாக !
ஆமீன் !
என துஆ செய்வதோடு நின்று விடாமல்
முயற்சியில் இறங்க வேண்டும் !
மனம் எவ்வாறு பரிசுத்தமடையும் ?
ஸுப்பூஹுன் குத்தூஸுன்
றப்பனா வ றப்புல்
மலாயிகத்தி வர் ரூஹ் !
பரிசுத்தம் அல்லாஹ்வுடைய ஸிஃபத், தன்மையாதலால்,
அவனையே மிக அதிகமாக நினைவு கூர்வதின் மூலமும்
அவனது ஹபீப்
பெருமானார் (ஸல்) அவர்களின் மீது அதிகமாக ஸலவாத் கூறுவதின் மூலமும்
அவனது நல்லடியார்களான
மஷாயிக்குமார்கள் எனும் மஃரிஃபத்துடைய ஞான சற்குருக்கள்,
அவர்களின் பிரதிநிதிகள்,
சீடர்களின் ஸொஹ்பத் எனும் சத்சங்கத்தில் நம்மை மனப்பூர்வமாக இணைத்துக்கொள்வதின் மூலமும்
வல்ல அல்லாஹ்
நம் உள்ளங்களைத் தூய்மைப்படுத்தி விடுவான் !
ஆமீன் !
Thursday, 31 May 2018
இறைக்காதல்
Subscribe to:
Posts (Atom)