சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைப்படி நபிமார்கள் மஹ்சூமீன்கள்.( அதாவது பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள்)
வலிமார்கள் (இறை நேசர்கள்) மஹ்Fபூலீன்கள் (அவர்களும் பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள்தான்)
பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டால்தான் இறை நெருக்கத்தை பெற முடியும். ஒரு பக்கம் பாவங்கள் செய்துகொண்டே மறுபக்கம் இறை நெருக்கத்தை பெற முடியாது.
உள்ளத்தில் ஒன்று இறைவன் இருப்பான்.
அல்லது ஷைத்தான் இருப்பான்.
உள்ளத்தில் ஷைத்தானிய சிந்தனை வந்துவிட்டால் இறைவன் வெளியேறி விடுவான்.
இறைவனின் சிந்தனையோடு வாழ்ந்தால் ஷைத்தான் வெளியேறி விடுவான்.
மஹ்சூமீன் ,மஹ்பூFலீன் இரண்டிற்கும் "பாவங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள்"என்ற ஒரே பொருள்தான். ஆனால் பெரும் வித்தியாசம் இருக்கிறது.
நபிமார்கள் மஹ்சூமீன்கள் (பாவங்களிலிருந்து அல்லாஹ் பாதுகாத்தான். பாதுகாப்பான். அவர்களுக்கு சுய நாட்டம்(இக்தியார்) கிடையாது. அவர்களை அல்லாஹ் தன்னுடனே வைத்துக்கொள்வான்.அல்லாஹ்வை விட்டு வெளியேறி அவர்களால் பாவங்கள் செய்ய முடியாது. (இருந்தாலும் சில பாவங்களை இறைவன் வெளியாக்குவது நமது படிப்பினைக்காகத்தான். இது நீண்ட பாடம்..)
வலிமார்கள் மஹ்Fபூலீன்கள் அவர்களையும் அல்லாஹ்தான் பாவங்களிலிருந்து பாதுகாத்தான்,பாதுகாப்பான். ஆனால் அவர்களுக்கு இக்தியார் (சுய விருப்பம்) இருக்கும்.
அவர்கள் நாடினால் அல்லாஹ்வின் பாதுகாப்பிலே இருக்கலாம். அவர்கள் நாடினால் அல்லாஹ்வின் பாதுகாப்பை விட்டும் வெளியேறி விடலாம்.
இதுதான் நபிமார்களுக்கும் வலிமார்களுக்குமான வித்தியாசம்.
அடுத்ததாக ஒரு மனிதர் தன்னை நபி என கூறினால் அவர் முஹ்ஜிஜாத்களை (அற்புதங்களை ) செய்து காட்ட வேண்டும்.
அற்புதங்கள் செய்து காட்டாதவரை அவரை நபி என. நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.
அதே நேரத்தில் ஒரு மனிதர் தன்னை வலி (இறை நேசர்) என கூறினால் அவர் அற்புதங்கள் செய்து காட்ட வேண்டிய அவசியமில்லை.
நாம் விரும்பினால் அவரை வலியாக ஏற்றுக்கொள்ளலாம்.
விரும்பாவிட்டால் வ.விலகி சென்று விடலாம். .
(விலகித்தான்செல்ல வேண்டும் நீ வலி இல்லை என்று மல்லுக்கட்டக்கூடாது. காரணம் அவர் உண்மையிலே வலி இல்லை என்றால் நாம் தப்பித்துக்கொள்வோம். அவர் உண்மையில் இறைவனின் நேசராக இருந்து அவரை நாம் நோவினை செய்தால் இறைவனிடம் மாட்டிக்கொள்வோம்) . எனவே அமைதியாக கடப்பதே சிறந்தது.
காரணம் வலிமார்கள் (இறை நேசர்கள்) இவ்வுலகில் நான்கு வகையாக இருப்பார்கள்.
1.அவர் வலி என்று அவருக்கும் தெரியாது. மக்களுக்கும் தெரியாது.
2. அவர் வலி என்று அவருக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும்.
3.அவர் வலி என்று மக்கள் நம்புவார்கள். அவருக்கு தெரியாது.
4. அவர் வலி என்று அவருக்கு மட்டுமே தெரியும், மக்களுக்கு தெரியாது.
இந்த நான்கில் ஏதேனும் ஒரு வகை வலிமார்கள் 40 பேரில் ஒருவர் இருக்கலாம்.
அது நீங்களாக இருக்கலாம்.உங்கள் பக்கத்து வீட்டுக்காரராக இருக்கலாம்.
எனவே எந்த மூஃமினான அடியார்களை பார்த்தாலும் இவர் காபிர், இவர் பாஸிக், இவர் முஷ்ரிக்,இவர் முனாபிக் என்று பார்க்காமல் இவர் அல்லாஹ்வின் நேசராக இருப்பாரோ என்ற சிந்தனையில் ஒவ்வொரு மூஃமின்களையும் நாம் பார்த்தால் அல்லாஹ் என் அடியான் என்னுடைய ஒவ்வொரு மூஃமினான அடியார்களயும் பார்த்து இவர் இறை நேசராக இருப்பாரோ இவர் இறை நேசராக இருப்பாரோ என நினைத்து வாழ்கிறான்.
இந்த நல்ல சிந்தனைக்காக (அல்லாஹ் அப்படி சிந்திப்பவரை ,அனைவர்களையும் இறை நேசராக பார்ப்பவரை ) முதலில் தன் நேசராக ஆக்கிக்கொள்வானாம்..
இன்ஷா அல்லாஹ்....