Wednesday, 19 September 2018

مجموعة كتب

*مجموعة كتب أكثر من ممتازة كنز ،قم بعمل"save"طور مكتبتك*
*سَاهِمُوا بِنَشْرِهَا فَالدّالُّ علَى الخَيرِ كَفَاعِلِه*

كتب الحديث :

- كتاب صحيح البخاري : https://goo.gl/vfGzAq
- كتاب صحيح مسلم : https://goo.gl/yTGB3P
- كتاب سنن ابي داود : https://goo.gl/ouhavB
- كتاب سنن النسائي : https://goo.gl/tJWZD9
- كتاب سنن الترمذي : https://goo.gl/pk8mKb
- كتاب سنن ابن ماجة : https://goo.gl/HizomS

- تطبيق جامع الكتب التسعة للحديث : https://goo.gl/M4KgTe

كتب الفقه :

- كتب الفقه الحنفي : https://goo.gl/9H9iT5
- كتب الفقه المالكي : https://goo.gl/g4MxxT
- كتب الفقه الشافعي : https://goo.gl/6C9Syl
- كتب الفقه الحنبلي : https://goo.gl/O5Lhxs

كتب السيرة النبوية :

- كتاب السيرة لابن هشام : https://goo.gl/p0cmeh
- كتاب السيرة لابن كثير : https://goo.gl/ydNe6x
- كتاب الرحيق المختوم : https://goo.gl/h4OlkM

كتب التفسير :

- كتاب تفسير الشعراوي : https://goo.gl/P47bNO
- كتاب تفسير القرطبي : https://goo.gl/PqGfJW
- كتاب تفسير ابن كثير : https://goo.gl/b4Lutb
- كتاب تفسير ابن عباس : https://goo.gl/XKwVjS

كتب متنوعة :

- الموسوعة الكونية الكبري : https://goo.gl/09uhvI
- سلسلة اعلام المسلمين : https://goo.gl/CnNgpU
- سلسلة الكون كتاب الله المنظور : https://goo.gl/W5ym5q
- كتاب اركان الاسلام : https://goo.gl/9nq7f9
- كتاب اركان الايمان : https://goo.gl/ALMd9s
- كتاب ففروا الي الله : https://goo.gl/IuIFH7
- كتاب احياء علوم الدين : https://goo.gl/04yiIh
- كتاب الاتقان في علوم القران : https://goo.gl/MlPld3
- كتاب رياض الصالحين : https://goo.gl/jMCP9D
- كتاب شرح الاربعون النووية : https://goo.gl/GUJZvY
- كتاب فقه السنة : https://goo.gl/KzR5Zx
- كتاب قصص الانبياء لابن كثير : https://goo.gl/YdGGYW
- كتاب مائة من عظماء الاسلام : https://goo.gl/Xtr2y3
- كتاب دلائل النبوة : https://goo.gl/fIDFsf
- كتاب السنن الكبري للبيهقي : https://goo.gl/xDpoCy
- كتاب السنن الصغري للبيهقي : https://goo.gl/sXkmiz

- كتب محمد راتب النابلسي : https://goo.gl/Og3g3D

زكاة العلم نشره
سَاهِمُوا بِنَشْرِهَا فَالدّالُّ علَى الخَيرِ كَفَاعِلِ
محمد شافعي عارف محضری شهودى

Tuesday, 18 September 2018

பூமான் நபிகளாரின் புனித ரவ்லா ஷரீப்

நபி (ஸல்) அவர்களின் ரவ்ளா ஷரீபின் கட்டிட வரலாறு

இமாம் காளி இயாள் (ரஹ்) அவர்கள் மற்றுமுள்ள மார்க்க அறிஞர்கள் பெரும்பாண்மையோர் ''நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு உடலை தாங்கி நிற்கும் புண்ணியமிகு கப்ரு உலகில் உள்ள எல்லா இடங்களைக் காட்டிலும் சிறந்தது என தீர்ப்பளித்துள்ளனர். (இத்திஹாப் 4: 416,417)

சில நல்லோர்கள்,உலமாக்கள்,
இமாம்கள் மற்றும் நபி (ஸல்) அவர்களின் கப்ரு, கஃபா பைத்துல் முகத்தஸைக்காட்டிலும் சிறந்தது எனத் தீர்ப்பளித்து விசுவாசத்தின் விளைநிலமான நபி (ஸல்) அவர்களை கண்ணியம் செய்வதே ஈமானைத் தக்கவைத்து கொள்ளும் உபாயம் என உபதேசம் செய்துள்ளார்ள். இவர்களில் முக்கியமானவர்கள் ஜர்கஸீ, அபதீ போன்ற பேரரிஞர்களாவர். (வஃபாவுல் வஃபா 1: 83)

நபி (ஸல்) அவர்களின் ரவ்ளா ஷரீபின் கட்டிட வரலாறு

நபி (ஸல்) அவர்களின் கப்ரு ஷரீப் மிகவும் தரைமட்டமில்லாமலும் மிக உயரமில்லாமலும் கப்ரின் மேல்பகுதி அழகான சிவந்த பொடிக்கற்களால் பதிக்கப்பட்டிருந்தது. ஆயிஷா (ரளி) அவர்கள் இருந்த அறையிலே நபி (ஸல்) அவர்கள் அடக்கப்பட்டார்கள். எனவே ஆயிஷா (ரளி) அவர்கள் அந்த அறையின் குறுக்கே மண்ணினால் ஒரு மதிலை எழுப்பி, நபி (ஸல்) அவர்களின் கப்ரு ஷரீஃப் ஒரு புறமிருக்க ஆயிஷா (ரளி) மறுபுறம் இருந்து கொண்டார்கள். அடிக்கடி நபி (ஸல்) அவர்களை ஜியாரத்துக்கு வருவதற்கு அதே மதிலில் ஒரு வாசலை வைத்துக் கொண்டார்கள். அன்னை ஆயிஷா (ரளி) அவர்களின் வீட்டின் மேற்கூறை பழுதுப்பட்டு இருந்ததால் காலப்போக்கில் இந்த மண்மதில் மழையால் கரைந்துவிட்டது.

இதன் பின் உமர் (ரளி) அவர்கள் தங்களது ஆட்சிக்காலத்தில் (ஹிஜ்ரி23 வரை) நபி (ஸல்) அவர்களின் கப்ரு ஷரீஃபை சுற்றி முக்கோணவடிவில் அழகிய கருங்கற்கலாலும்,சுண்ணாம்பாலும்,
மதில் எழுப்பினார்கள். எனினும் ஜியாரத் செய்பவர்களுக்கு தெரியும் அளவே மதில்களின் உயரம் இருந்தன.

நபி (ஸல்) அவர்களின் கப்ரின் பரக்கத்தை நாடி கப்ருக்கு அருகில் இருக்கும் மண்ணை எடுச்துச் செல்ல ஆரம்பித்தனர். இவ்வாறு மண்ணை எல்லோரும் எடுத்தால் நாளடைவில் நபி (ஸல்) அவர்களின் கப்ரை சுற்றி பெரும் பள்ளம் ஏற்பட்டு,புனிதமிகு ரவ்ளாவுக்கு பெரும் ஆபத்து ஏற்படும் எனப்பயந்த ஆயிஷா (ரளி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் ரவ்ளாவைச் சுற்றி சிறிது உயரமாக மதில் எழுப்பும்படி சொல்லி அவ்வாறே மதில்கள் கட்டப்பட்டன. இம்மதில்களில் நபி (ஸல்) அவர்களின் கப்ரு தெரியும்படி துவாரம் வைக்கப்பட்டது. இந்த ஜன்னல் போன்ற துவாரம் வழியாகவும் மக்கள் பரக்கத்தை வேண்டி மண்ணை எடுக்க ஆரம்பித்தார்கள். இதனால் ஜன்னல் போன்ற துவாரமும் அடைக்கப்பட்டது. (வஃபாவுல் வஃபா 2: 544)

பின்னர், அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரளி) அவர்களின் ஆட்சி காலத்தில் மேற்கண்ட மதில்கள் மிகவும் உயரமாக இல்லாததால் அவற்றை நல்ல உயரமாக கட்டினார். அபூபக்கர் (ரளி),உமர் (ரளி) ஆகியோரின் புனிதமிகு கப்ருகளையும் அதைச்சுற்றி சுவர்கள் எழுப்பும் விஷயத்திலும் எடுத்துக் கொண்டார்கள் என அனஸ் (ரளி) அவர்கள் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்களின் கப்ரு இருந்த இடத்தை சுற்றி முதன் முதலில் சுவர் எழுப்பியவர் உமர் (ரளி) ஆகும். இந்த சுவர்கள் உயரம் குறைவாய் இருந்ததால் அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரளி) அம்மதில்கைள உயரமாகக் கட்டினார்கள். (ஐனீ 4:252, வஃபாவுல் வஃபா 2: 544)

உமையாக்கள் ஆட்சிகாலத்தில் உமர் பின் அப்துல் அஜீஜ் (ரளி) அவர்கள் மதீனாவின் கவர்னராக இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு கப்ரு ஷரீஃபை சுற்றியிருந்து மதில்கள் பலமில்லாமல் போகவே அம்மதில்களிலிருந்து சற்று இடைவெளிவிட்டு,சுற்றுச்சுவர் கட்ட ஏற்பாடானது. இவ்வாறு புணருதாரம் செய்ய, நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களின் வீடுகளை வாங்கி விரிவாக்கம் நடந்தது. இவ்வாறு நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு ரவ்ளா ஷரீஃபின் வெளிச் சுவர்கள் கட்டப்பட்டபின்பு உட்சுவர்கள் இடிக்கப்பட்டன. அப்போது இதன் அதிர்வு தாங்காமல் நபி (ஸல்) அவர்கள்,அபூபக்கர் (ரளி), உமர் (ரளி) அடக்கப்பட்டிருந்த கப்ருகளின் சுற்றுப்புறத்தின் ஒருபகுதி இடிந்து சரிந்து விட்டது.  இதேபோல் கப்ரின் ஒருபுறமிருந்து மண்திட்டும் சரிந்ததால் கப்ரிலிருந்து முழங்கால் முதல் பாதம் வரை ஒருவரின் கால்பகுதி வெளியே தெரிந்தது. இது நபி (ஸல்) அவர்களின் கால்தான் என பதறித்துடித்து ஆச்சரியப்பட்டு துக்கத்துடன் அழுது கூக்குறலிட ஆரம்பித்தனர். கூட்டமும் வெகுவாக கூட ஆரம்பித்தது. அப்போது அங்கிருந்த உர்வா (ரளி) அவர்கள் இது நபி (ஸல்) அவர்கள் கால் அல்ல. இது நிச்சயமாக உமர் (ரளி) அவர்களின் கால்தான் எனத் தெரிவித்து மக்களின் துயரை துடைத்தார். இந்நிகழ்ச்சி உமர் பின் அப்துல் அஜீஜ் (ரளி) அவர்களின் முன்னிலையிலே நடந்தது. மீண்டும் உமர் (ரளி) அவர்களின் புனிதமான கால் கப்ரில் உள்புறம் வைக்கப்பட்டு
கப்ருகள் கட்டப்பட்டன. (ஐனீ 4:251, பத்ஹுல் பாரி3:165, ஹயாதுஸ் ஸஹாபா22-23, தஹ்தீபுத் தஹ்தீப் 7: 475-477)

حدثنا فروة ، حدثنا علي ، عن هشام بن عروة ، عن أبيه لما سقط عليهم الحائط في زمان الوليد بن عبد الملك أخذوا في بنائه فبدت لهم قدم ففزعوا وظنوا أنها قدم النبي صلى الله عليه وسلم فما وجدوا أحدا يعلم ذلك حتى قال لهم عروة لا والله ما هي قدم النبي صلى الله عليه وسلم ما هي إلا قدم عمر ، رضي الله عنه. (بخارى-1390)

அப்தில் மலிக்கின் (ஆட்சிக்) காலத்தின்போது நபி(ஸல்) அடக்கம் செய்யப்பட்ட அறையின் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. அதைப் புனர் நிர்மாணம் செய்வதில் மக்கள் ஈடுபட்டபோது ஒரு பாதம் வெளியில் தெரிந்தது. உடனே மக்கள் பதறிப் போய் அது நபி(ஸல்) அவர்களின் பாதமாக இருக்குமோ என நினைத்தனர். இது பற்றித் தெரிந்தவர் யாருமில்லாதிருந்தபோது நான் 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது நபி(ஸல்) அவர்களின் பாதமே இல்லை; மாறாக,இது உமர்(ரலி) அவர்களின் பாதகமாகும் என்றேன்" என உர்வா கூறுகிறார். (புகாரி:1390)

அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரளி) அவர்களால் கட்டப்பட்ட மதில்கள் பலமானதாக நிர்மாணிக்கபட்டு, அதன் மேல் தளம் எழுப்பப்பட்டது. கப்ரின் மேற்பகுதி அழகான வேலைப்பாடுகள் உள்ள மரக்கட்டைகள்,பலகைகளைக் கொண்டு வேயப்பட்டது. அதன் பின் கலீஃபா ஹாரூன் ரஷீதின் காலத்தில், நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு கப்ரின் மேல் மரத்தால் கட்டப்பட்ட பகுதி திறக்கப்பட்டபோது அதில்193 வேலைப்பாடு மிக்க மரக்கட்டைகள் இருந்தன. அவை 70 கட்டைகள்,உத்திரங்கள் முறிந்து சிதிலமடைந்திருந்தன. அவைகளுக்கு பதிலாக 70புதிய கட்டைகள் மாற்றப்பட்டன. புனிதமிகு கப்ரின் அறையின் மதில்கள் அழகான பாலிஷ் செய்யப்பட்ட கற்கலால் கட்டப்பட்டன.

பின்னர் ஹிஜ்ரி 232-ல் கலீஃபா முத்தவக்கில் காலத்தில் நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு கப்ரை சுற்றியுள்ள மதில்களின் வெளிப்புறமும், உட்புறமும் வெள்ளை பளிங்கி கற்கள் பதிக்கப்பட்டு மிக நேர்த்தியான வேலைப்பாடுகளால்;;அல்ஹுஜரதுஷ் ஷரீஃபா''அழகுப் படுத்தப்பட்டது.

பின்னர் கலீஃபா முக்தபீ பில்லாஹ் அவர்களின் ஆட்சிகாலத்தில் ஹிஜ்ரி548-ல் மேலும் பளிங்கிக் கற்கள் பதிக்கப்பட்டு சிதிலம் அடைந்தப் பகுதியை நீக்கப்பட்டு,செப்பனிடப்பட்டு நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு கப்ரு, அபூபக்கர் (ரளி), உமர் (ரளி) ஆகியோர்கள் கப்ருகள் இருந்த அறை, அதை ஒட்டியுள்ள பகுதிகள் அனைத்தும் புனர்தானம் செய்யப்பட்டு பளிங்கிக் கற்கள் பதிக்கப்படடுள்ளன.

பின்னர் ஹிஜ்ரி 654-ல் வருடம் ரமலான் மாதம் முதல் நாள் அன்று, நபி (ஸல்) அவர்கள் அடங்கியிருக்கும் மஸ்ஜிதுன் நபவியின் மனாராவில் விளக்கு ஏற்றுவதற்காக சென்ற ஒருவர் தன்னுடன் கொண்டு சென்ற தீவட்டியை மறந்து மனாராவிலேயே வைத்துவிட்டு வந்துவிட்டார். அதன் தீ மனாராவில் சுற்றி வடிந்து காலாகாலம் தரையிலும் பரவியிருந்த எண்ணை வடுக்களில் பற்றி தீ பரவியது. பற்றி எரிந்த தீ,பள்ளிவாசல் மேல் தளத்தை இரையாக்கி,எங்கும் பரவிய தீ,மஸ்ஜிதுன் நபவியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு கரித்து துவசம் செய்தது. இத்தீ விபத்தில்,நபி (ஸல்) அவர்களது புனிதமிகு கப்ர், அபூபக்கர்-உமர் (ரளி) ஆகியோர்கள் கப்ர், உதுமான் (ரளி) ஓதிய குர்ஆன் ஆகியை மட்டும் எரியவில்லை.

ஹிஜ்ரி 650-ஆம் ஆண்டு,எகிப்து மன்னர் நூருத்தீன் ஜன்கீ, யமன் நாட்டு மன்னர் ஷம்சுத்தீன் யூசுஃப் ஆகியோர் கட்டுமான பொருட்களை அனுப்பி ரவ்ளா, மற்றும் மஸ்ஜிதுந் நபவியின் கட்டுமானப் பணியை தொய்வில்லாது நடைபெறும்படி செய்தனர். புpன்னர் ஹிஜ்ரி 658-ல் எகிப்தின் மன்னர் ருக்னுத்தீன் பைப்ரஸ் அவர்கள், ரவ்ளா மற்றும் மஸ்ஜிதுன் நபவியின் விடுபட்ட பகுதியின் கட்டுமானத்திற்காக பொருட்கள், 53 கட்டப் பொறியாளர்களையும் ஜமாலுத்தீன் ஸாலிஹ் என்பவரின் தலைமையில் மதீனாவிற்கு அனுப்பி அவைகைள அழகுடன் நிர்மாணிக்கப்பட்டு புதுப்பொழிவுடன் ஆக்கினார்கள்.

ஹிஜ்ரி 706-ல் ரவ்ளா ஷரீப் மற்றும் மஸ்ஜிதுன் நபவியின் மேற்கு,கிழக்குப் பகுதியில் மாடிகள் மேற்கூறைகள் கட்டப்பட்டு உறுதியாக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், அபூபக்கர்-உமர் (ரளி) ஆகியோர்களின் கப்ருகளையும் அழகு படுத்துவதிலும் மிக, மிக அக்கறை கொண்ட சுல்தான் கலாவூனும்,ருக்னுத்தீன் பைப்ரஸ்,சுல்தான் காய்த்தபாதயீ,மற்றும் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி சரித்திரத்தில் இடம் பிடித்து நபியவர்களின் உள்ளத்திலும் இடம் பிடித்துள்ளனர்.

ஹிஜ்ரி 731-ல், மலிக்குல் அஷ்ரப் பர்ஷ்பாய் என்பவர், நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசலை மேலும் ஒரு நீண்ட பெரிய மாடியை கட்டினார். இதன் பின்னர்,ஹிஜ்ரி 777-ல் சுல்தான் கலாவூன் என்பவர் மஸ்ஜிதுன் நபவியை விரிவு படுத்தி, ரவ்ளா ஷரீபுக்கு செல்ல தனிப்பாதை அமைத்தார்.

ஹிஜ்ரி 779-ல் சுல்தான் காய்தபாய் என்பவர் பொருப்பேற்று,பள்ளிவாசலின் கிழக்குப் புறச் சுவர் இடிக்கப்பட்டு, மேலும் 27 முழங்கள் அகலப்படுத்தப்பட்டு சுவர் எழுப்பப்பட்டது. பின்னர் ஹிஜ்ரி 781-ல், நபி (ஸல்) அவர்களின் ரவ்ளா புனர் நிர்மாணப் பணிக்கு ஹாஜா ஷம்ஜீ என்பவர் தனி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவரின் மேற்பார்வையில் ரவ்ளா ஷரீபின் மேல்தளமும் அதனுடன் சேர்ந்து நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு கப்ரின் மேல் எழுப்பப்பட்ட நீலநிற குப்பாவைச் சுற்றியுள்ள பகுதியும் உயர்த்தப்பட்டு, மின்பரின் கிழக்குபுறமுள்ள மேற்பகுதியில் முறிந்தும், உடைந்தும் போன கட்டைகள், உத்திரங்கள் பலவற்றை மாற்றி அமைக்கப்பட்டது.

ஹிஜ்ரி 853-ல் சுல்தான் லாஹிர் ஜக்மகின் காலத்தில் மஸ்ஜிதுன் நபவியின் மாடியின் தளத்தில், நபி (ஸல்) அவர்களின், அபூபக்கர்-உமர் (ரளி) ஆகியோர்களின் புனிதமிகு கப்ருகள் இருக்கும் கட்டிடத்தின் ரவ்ளா ஷரீபின் மேல்தளத்தில் பெரும் கீரல் (விரிசல்) ஏற்பட்டது. மிகுந்த பொருட் செலவில் அக்கறையுடன் அதை செப்பனிட்டு ரவ்ளா புதுப்பிக்கப்பட்டது.

பின்னர், ரவ்ளா ஷரீப் விரிவாக்கப்பட்டு மூன்று வாயில்கள் உள்ள அறையாக கட்டப்பட்டது. அதன் சுற்றுப் புறங்களில் பித்தளைக் கம்பிகளால் ஆன ஜன்னல்கள் வைக்கப்பட்டன. புனிதமிகு கப்ருகளை நெருங்கி மரியாதை இல்லாமல் நடந்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக கப்ருகளைச் சுற்றி வேலி போன்ற இரும்புத் தடுப்பு அமைக்கப்பட்டது. இந்த தடுப்புக்கு பித்தளை முலாம் பூசப்பட்டது. ஜும்ஆ நாளன்று கூட்டம் அதிகமாக இருப்பதால் ரவ்ளா ஷரீபின் பணியாளர்கள் மட்டும் தடுப்புக்கு உள்ளே நின்று தொழ அனுமதிக்கப்பட்டனர். இந்த அறையே; ஹுஜ்ரத் ஷரீபா (கண்ணியமான அறை) என்று அழைக்கப்பட்டது.

ஹுஜ்ரத் முபாரக்காவில் நுழைவதற்கும் நபி (ஸல்) அவர்கள், அபூபக்கர்-உமர் (ரளி) அகியோர்கள் அடக்கமாகியுள்ள அறைகளின் வாயில்களில் ஒரு வாயில் மட்டும் திறந்தே இருக்கும். (வஃபாவுல் வஃபா 2:616)

ஹஜ் உடைய காலங்களில் மட்டும் மக்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருப்பதால்,அக்காலத்தில் மட்டும் ரவ்ளாவின் அறை பூட்டப்பட்டு வந்தது. நபி (ஸல்) அவர்களின் அறைக்கும் இரும்புத் தடுப்புக்கும் இடைப்பட்ட பகுதி ஹஜ் காலங்களில் பெண்கள் தங்கள் குழந்தையுடன் தங்கும் இடமாகும். சில சமயம் பிள்ளைகள் அப்பகுதியில் அசுத்தம் செய்துவிடும். எனவே, ஹிஜ்ரி 732-ல் சுல்தான் மலிக்கு நாஸிர் ஹஜ்ஜுக்கு வந்து, நபி (ஸல்) அவர்களின் இடத்திற்கு வந்து இவையெல்லாம் பார்த்து,நபி (ஸல்) அவர்களின் புனிதமிகு அறைக்கும் இரும்புத் தடுப்புக்கும் இடைப்பட்ட பகுதியை மட்டும் ஹஜ்ஜுக் காலங்களில் மட்டும் பூட்டிவிட உத்தரவு இட்டார். அதன்பின் ஹஜ்ஜுக்காலங்களில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் நபி (ஸல்) அவர்களை ஜியாரத் செய்ய அந்த அறையில் நுழைவதால் பெரும் சிரமம் ஏற்பட்டு கட்டுப்பாடு இல்லாமல் போனது. எனவே, புனித அறையின் எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டன. இவ்வாறு ஹுஜ்ரத் ஷரீபாவை அடைக்கப்பட்டதால் நபி (ஸல்) அவர்களின் ஜியாரத் மட்டும் தடைபடவில்லை.

(தகவல்: மகான்களின் மண்ணறைகள்)

ஆஷூரா

ஆஷுரா_தினத்தில்
*********************
நடைபெற்ற_அற்புத_சம்பவங்கள்

ஆஷூறா தினம் அதிவிஷேடங்களை உள்ளடக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ள நாளாகும் இதனால்தான் இந்நாளை முஸ்லிம்கள் விஷேட நாளாக அமைத்துள்ளார்கள்


1) இன்றுதான் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டினால் ஆதம் (அலைஹி வஸல்லம்) அவர்களின் குற்றத்தை அல்லாஹ் மன்னித்து அவர்களை ஏற்றுக் கொண்டான்.


2) இன்றுதான் நபி நூஹ் (அலைஹி வஸல்லம்) அவர்களின் கப்பல் ஜூதி எனும் மலையில் தரை தட்டியது. இந்தக் கப்பல் தூபான் என்ற வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட சமயம் நூஹ் நபீ (அலைஹி வஸல்லம்) அவர்களால்தான் செய்யப்பட்டது. ஜூதி மலையில் தட்டிய கப்பலை ஆராய்ச்சியாளர்கள் இப்போது கண்டுபிடித்துள்ளார்கள். ஜூதி மலை இன்னும் இருக்கிறது. இந்த மலையில் நபீ நூஹ் (அலைஹி வஸல்லம்) அவர்கள் கட்டிய பள்ளிவாயல் ஒன்று இன்றும் அவ்வாறே இருக்கிறது. மனிதர்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று அதைப் பார்த்து வருகிறார்கள்.


3) இன்றுதான் நபீ மூஸா (அலைஹி வஸல்லம்) அவர்களும், நபீ ஈஸா (அலைஹி வஸல்லம்) அவர்களும் பிறந்தார்கள்.

4) இன்றுதான் நும்றூத் எனும் சர்வாதிகாரி நபீ இப்றாஹீம் (அலைஹி வஸல்லம்) அவர்களை நெருப்புக் கிடங்கில் எறிந்தான்.

5) இன்றுதான் நபீ யூனுஸ் (அலைஹி வஸல்லம்) அவர்களின் சமூகத்தை விட்டும் வேதனை நீக்கப்பட்டது.

6) இன்றுதான் நபீ ஐயூப் (அலைஹி வஸல்லம்) அவர்களின் துன்பம் நீங்கியது.

7) இன்றுதான் நபீ யஃகூப் (அலைஹி வஸல்லம்) அவர்கள் தனது மகன் யூசுப் (அலைஹி வஸல்லம்) அவர்களை இழந்ததால் இழந்திருந்த கண்பார்வையை மீண்டும் பெற்றார்கள்.


8)இன்றுதான் பாழ் கிணற்றில் எறியப்பட்டிருந்த நபீ யூசுப் (அலைஹி வஸல்லம்) அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.


9) இன்றுதான் நபி ஈஸா (அலைஹி வஸல்லம்) அவர்களும் இத்ரீஸ் (அலைஹி வஸல்லம்) அவர்களும் வானத்தின் பக்கம் உயர்த்தப்பட்டார்கள்.

10) இன்றுதான்ந பீ யூனுஸ் (அலைஹி ஸ்ஸலாம்) அவர்களை மீனின் வயிற்றில் இருந்து காப்பாற்றிய தினம்.

11) இன்றுதான் நபீ தாஊத் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் பாவத்தை மன்னித்த தினம்.

12) இன்றுதான் நபீமார்களான மூஸா, ஹாறூன் அலைஹிமுஸ் ஸலாம் ஆகியோரின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்ட தினம்.


13) இன்றுதான் நபீ ஹழிர் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களின் அறிவை அதிகப்படுத்திய தினம்.


14) இன்றுதான் சுவர்க்கம், நரகம் இரண்டையும் படைத்த தினம்.


15) இன்றுதான் தவ்றாத், சபூர், இன்ஜீல், குர்ஆன் முதலான வேதங்களை இறக்கி வைத்த தினம்.


16) ஜிப்ரீல், மீக்காயீல், இஸ்றாபீல், இஸ்றாயீல் (அலைஹிமுஸ் ஸலாம்) ஆகியோரை படைத்த தினம்.

17) இன்றுதான் அர்ஷ், குர்ஸீ, லவ்ஹு, கலம், முதலானவற்றை படைத்த தினம்.

18) இன்றுதான் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் யாவையும் படைத்த தினம்.


19) இன்றுதான் வானங்கள், பூமி யாவையும் படைத்த தினம்.

20) இன்றுதான் உலகம் படைப்பதற்கு ஆரம்பிக்கப்பட்ட நாள்.


21)இன்றுதான் பூமியில் முதன் முதலாக மழை பெய்த நாள்.

22)இன்றுதான் அல்லாஹ்வின் அருள் பூமியிலுள்ளவர்களுக்கு முதன் முதலில் இறங்கியது.

23) இன்றுதான் நபீ நூஹ் (அலைஹி வஸல்லம்) அவர்களின் காலத்தில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப் பெருக்கின் பின்பு முதன் முதலாக இப்பூமியில் சமையல் செய்யப்பட்டது பத்தாம் நாளான ஆஷூறா தினம்தான். நபீ நூஹ் (அலைஹி வஸல்லம்) அவர்கள்தான் முதலில் சமையல் செய்தார்கள்.


24) இன்றுதான் சுலைமான் நபீ (அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு முழுவுலக ஆட்சியும் வழங்கப்பட்டது.

25) இன்றுதான் நபீ ஸகரிய்யா (அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு நபீ யஹ்யா (அலைஹி வஸல்லம்) மகனாகப் பிறந்தார்கள்.

26) இன்றுதான் நபீ மூஸா (அலைஹி வஸல்லம்) அவர்கள் பிர்அவ்னையும், அவனுடைய சூனியக்காரர்களையும் தோற்கடித்தார்கள்.


27) இன்றுதான் பிர்அவ்ன் நீரில் மூழ்கி இறந்தான்.


28) இன்றுதான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பேரர் ஹுஸைன் (ரழியல்லாஹு அன்ஹு) ஷஹீதாக்கப்பட்டார்கள்.

29) இன்றுதான் அஹ்லுல்பைத் என்று அழைக்கப்படுகின்ற நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் இனபந்துக்களில் அநேகர் ஷஹீதாக்கப்பட்டார்கள்.

எனவே முஸ்லிம்கள் இந்நாளை சாதாரண நாளாக நினைத்து வீண் விளையாட்டில் கழிக்காமல் நோன்பு நோற்றல், குர்ஆன் ஓதுதல், ஸலவாத் ஓதுதல், திக்று செய்தல், மௌலித் ஓதுதல், ராதிப் மஜ்லிஸ்,பிக்று செய்தல், தியானம் செய்தல்,முறாகபஹ் முஷாஹதஹ் எனப்படும் பேரின்ப ஆத்மீக தியானம் செய்தல் போன்ற நல்ல விடயங்களைக் கொண்டு இந்நாளைச் சிறப்பித்தல் அவசியமாகும்.

​​
♣ ஆஷூறா தினத்தில் ரொட்டி சுட்டு ஏழைகளுக்கு தர்மம் செய்து, யாஸீன் ஓதுதல்.


நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பேரர் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் அவர்களின் குடும்பத்தினல் அனேகர் ஈராக் நாட்டிலுள்ள கர்பலா எனுமிடத்தில் எதிரிகளால் ஷஹீதாக்கப்பட்டது இத்தினத்திலேயாகும். இதனால்தான் ஆஷூறா தினத்தில் ரொட்டி சுட்டு (ஹஸன், ஹுஸைன், அலி, பாதிமாஹ், அஹ்லுல் பைத்துகள்) ரலியல்லாஹு அன்ஹும் ஆகியோரின் ஆத்மசாந்திக்காக யாஸீன் கத்தம் ஓதி வருகிறார்கள். இன்றுவரை இந்த வழக்கம் பல நாடுகளில் குறிப்பாக இந்தியா இலங்கையில் பல ஊர்களில் ஓதிவரப்படுகிறது .


இந்த வழக்கம் பல்லாண்டு காலமாக இருந்து வந்த போதினும் சமீபத்தில் தோன்றிய வழிகெட்ட கூட்டங்களிற் சில இவ்வழக்கம் பித்அத் என்றும், ஷிர்க் என்றும் மக்களிடையே பறை சாற்றி வருகின்றது. இத்தகைய கூட்டங்கள் பற்றிப் பொது மக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

​​
♣ ஆஷூறா தினத்தில் நாம் செய்ய வேண்டிய நல்ல விஷயங்கள்


இத்தகைய சிறப்புகளை பெற்ற ஆஷுராவுடைய நாளில் நாம் செய்ய வேண்டிய நல்ல விஷயங்களை பார்ப்போம். சில முஸ்தஹ்பான அமல்களை சூபியாக்கள், உலமா பெருமக்கள் கிதாபுகளில் எழுதியுள்ளார்கள்.


1) ஆஷுராவுடைய தினத்தில் குளிப்பது. இதனுடைய பலன் என்னவென்றால் அந்த வருடம் முழுவதும் நோய் நொம்பலங்கள் ஏற்படாது.

2) கண்ணுக்கு சுர்மா இடுவது. இதனுடைய பலன் கண் நோய் வராது.

3) ஸதகா செய்வது. ஏனென்றால் ஹதீஸில் வருகிறது. எவரொருவர் ஒரு திர்ஹம் ஸதகா செய்தால் எழுநூறு ஆயிரம் திர்ஹம் ஸதகா செய்த நன்மை கிடைக்கும்.


4) அனாதைகளின் மீது இரக்கம் காட்டுவது. யாரொருவன் ஆஷுராவுடைய தினத்தில் அநாதைக்கு இரக்கம் காட்டுவானோ அந்த அனாதையின் ஒவ்வொரு தலைமுடியின் அளவுக்கு ஸவாபு கிடைக்கும்.


5) நோயாளிகளை சந்திப்பது. நோயாளிகளை சந்திப்பதனால் ஷஹீதுடைய அந்தஸ்து கிடைக்கும்.


6) அதிகமான நபிலான தொழுகைகளை தொழுந்து கொள்ளுங்கள். இத்தினத்தில் நான்கு றக்அத்துக்கள் தொழுவது ஒவ்வொரு றக்அத்திலும் பாத்திஹா ஸூறத் ஒரு தரமும் ஸூறதுல் இஹ்லாஸ் பதினொரு தரமும் ஓதி தொழுகையை முடித்தால்அவனது ஐம்பது வருட பாவங்களைஇறைவன் மன்னிப்பதுடன் ஒளியினால் ஒரு மின்பர் மேடையும் அமைக்கின்றான்.


7) உறவை துண்டித்தவர்களுடன் சேர்ந்து நடக்க வேண்டும்.


8)குடும்பத்தார்களுக்கு செலவழிப்பது.

9) துஆ கேட்பது மிகுதியாக பாவ மன்னிப்பு கேட்பது.


10) நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பேரர் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் பெயரால் மௌலித் ஓதுதல், அந்த அடிப்படையில் ஆஷுறா தினமும், ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் ஷஹாததும் ஹிஜ்ரி 61ம் ஆண்டு ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள் (ஷஹாதத்) வீர மரணமடைந்ததாக இஸ்லாமிய வரலாற்று நூல்களில் இமாம்கள் பதிவு செய்துள்ளார்கள்.

நூல்: தாரீக் தபரீ-5 /400, அல் பிதாயா வந் நிஹாயா-8/215