சத்தியத்தை அறிய வந்தோரே..!
அறிந்து கொள்ளுங்கள்.
கலிமாவில் உள்ள
"லா" என்பது,
" இல்முல் எகீன் "
என்றும்,
" இலாஹ்' என்பது
" ஐனுல் எகீன் "
என்றும்,
" இல்லா" என்பது
" ஹக்குல் எகீன் "
என்றும்,
"அல்லாஹு" என்பது
" கமாலுல் எகீன்"
என்றும்,
அறியப்படுத்தவதாகும்.
"இல்முல் எகீன்"
என்பது
உங்களுடைய
கல்வி,
கேள்வி அறிவால்
மக்கா நகரம் என்று,
ஒன்று
இருப்பதாக நீங்கள் அறிந்து கொள்வதுபோல்,
ஒப்புக்கொள்வது போல், அந்த அறிவால்,
அல்லாஹ் இருக்கிறான், என்று ஒப்புக்கொள்வது.
"ஐனுல் எகீன்"
என்பது
அந்த நகரை நோக்கி,
சென்று
அதனை காண்பது போன்று,
உங்களுடைய
"நாயனை"
உங்கள் அகக்கண்களால்,
காண்பதாகும்.
"ஹக்குல் எகீன்"
என்பது
அந்த நகரத்திற்குள்,
நுழைந்து அனுபவப்பூர்வமாக உணர்வது போல,
உங்கள் நாயனின்
"திருலிகா"வை தத்ரூபமாகவும்,
பிரத்தியட்சமாகவும்,
நீங்கள்
தரிசப்பதாகும்.
"கமாலுல் எகீன்"
என்பது
அப்புனித நகரத்தின்,
நடு மையத்திற்கு
வந்து
அங்குள்ள,
கஃபத்துல்லாஹ்வில் நுழைந்து,
உங்கள் கண்கள்,
குளிர்வது போல் அல்லாஹ்வுடைய
"ரஹ்ம்"
எனும்,
கருணையானந்த வெள்ளத்தில்,
அமிழ்ந்து,
நீங்கள்
அவனது,
"ஹையுல் ஹையூம்"
எனும்,
நித்திய ஏகாந்தத்தில் நிலைப்பதாகும்.
நாகூர் ஆண்டகை வரலாற்றிலிருந்து
No comments:
Post a Comment