Thursday, 22 March 2018

அண்ணலார் ஸல்லல்லாஹூ அலைகிவஸல்லம் அழுகை

#மாநபிவழிநடந்த
#மஹான்கள்...!
()())()()()()()()()()
அந்த மஹானிடம்
அவர்களின் மகனார்
இறந்த செய்தியை சொன்னார்கள்..!

"இன்னாலில்லாஹி...
சொல்லி விட்டு
மகனைப் பார்க்க
சென்றார்கள்..!"

"நீங்கள்
கொஞ்சமும்
கவலைப்படவோ...
கண்ணீர் சிந்தவோ... இல்லையே..?
எனக் கேட்டார்கள்

"ஏன் கவலைப் படணும்..?
கண்ணீர்
சிந்தணும்..?"

"அல்லாஹ்வின்
விதியை
நான் பொருந்திக்
கொண்டேன்
ஆகவே
பொறுமையாக
இருக்கிறேன்..!"
என்றார்கள்.

பின்பு
மஹானின் மஹனாரை
குளிப்பாட்டி
ஜனாஸா
தொழ வைத்து
கப்ரில் அடக்கிய
அடுத்த நொடி...

"அந்த மஹான்
கப்ரைப் பார்த்து
தேம்பி..தேம்பி..
அழுதார்கள்..!"

"இப்போ ஏன்
அழுகிறீர்கள்..?"
என மக்கள்
கோபமாக கேட்டனர்.

"அல்லாஹ்விடமிருந்து
அசரீரி வந்தது.."

"முஹம்மத்
ஸல்லல்லாஹூ
அலைஹி வஸல்லம்
அவர்களை விட
நீர் உயர்ந்தவரா..?"

"நபி-ஸல் அவர்கள் தங்களின் மகனார்
இப்றாஹிம்
ரலியல்லாஹூ
இறந்த போது
அழுதார்களே..!"
என அசரீரி வந்தது

"எனவே
நபி-ஸல்
அவர்களின்
சுன்னத்தை  நிறைவேற்ற
அழுகிறேன்..!"
என்றார்கள்.
:::::::::::::::::::::::::::::::

நபியின் அழுகை
   ''''""'"""""""""""""'"
நபி-ஸல் அவர்கள்
இறந்துப்போன
தன் மகனாரைப் பார்த்து அழுதார்கள்..

நீங்ளுமா
அழுகிறீர்கள்..?
என ஒரு தோழர்
கேட்டார்

நபி-ஸல்
அவர்கள்
சொன்னார்கள்

"இதுதான்
இறக்கம்..என்று
சொல்லியபின்

"கண்களோ
கண்ணீரை
சிந்துகிறது....
இதயமோ கவலைக்
கொள்கிறது..!
என்றார்கள்.
(புகாரி     -1303)
(முஸ்லிம்-2315)

No comments:

Post a Comment