*ஒரு முரீது தன்னுடைய ஷைஹிடம் வந்து, நான் நற்பாக்கியசாலி அல்லது துற்பாக்கியவான்களிலிருந்து எழுதப்பட்டுள்ளேனா? என்று எப்படி அறிந்து கொள்வது என்று சொல்லுங்கள் என்று கேட்டார்.*
ஷைஹ்: மகனே நீ தொடர்ந்து நபியின் மீது ஸலவாத்தை சொல்லி வந்தால் நிச்சயமாக நீ நற்பாக்கியசாலியிலிருந்து உள்ளாய் என்று விளங்கிக் கொள்!
உன் வாழ்க்கையில் நபியின் மீது ஸலவாத்தை பெற்றுக் கொள்ளாவிட்டால் துற்பாக்கியவானாக ஆகுவதிலிருந்து முழுமையாக தவிர்ந்து கொள்! நீ அறியமாட்டாய்!
முரீது: ஷைஹே! குர்ஆனிலிருந்து இதற்கு ஆதாரம் என்ன?
ஷைஹு: إن الله وملائكته يصلون على النبي என்ற அல்லாஹ்வின் சொல்லிலே தெளிவான ஆதாரம் உள்ளது.
துற்பாக்கியவான் எந்த விஷயத்திலும் அல்லாஹ்வுடன் கூட்டாக முடியாது.
நற்பாக்கியவான்கள்தான் அல்லாஹ்வுடனும், மலக்குகளுடனும் ஸலவாத்தில் கூட்டாகுவார்கள்.
முரீது: உங்களிடத்தில் தொடர்ந்து ஸலவாத் ஓதுவதின் அர்த்தம் என்ன? ஷைஹே!
ஷைஹு: ஒவ்வொரு நாளும் நபியின் மீது ஸலவாத் சொல்வதை தரிபாடான ஒரு வழமையாக உனக்கென நீ ஆக்கிக் கொள்வதாகும்.
இங்கே, நற்பாக்கியசாலி, ரொம்பவும் நற்பக்கியசாலி என்று உள்ளது.
நற்பாக்கியசாலி என்பவன் ஒவ்வொரு நாளும் நபியின் மீது ஸலவாத் ஓதுபவன்
ரொம்ப நற்பாக்கியசாலி என்பவர் நபி மீது ஸலவாத் ஓதுவத் அவருடைய உணவாக, குடிப்பாக,அவருடைய சிந்தனையாக, அவருடை முக்கிய விஷயமாக, அவருடைய ஒவ்வொரு மூச்சாகவும் ஆகிவிடும்.
இதனை கேட்ட முரீது கண்ணீர் வடித்துவிட்டார்.
இதனை பார்த்து ஷைஹு, உனக்கு கண்ணீர் வருவதே நீ நற்பாக்கியசாலி என்பதற்கான ஆரம்ப அடையாளம்.
நீ மட்டும் நற்பாக்கியசாலியாக இல்லாவிட்டால் உன்னை விட்டுவிட்டு என்னிடத்தில் கேட்டிருக்க மாட்டாய் என்று கூறினார்கள்.
صلوا على النبي *اللهم صل على محمد أللهم صل عليه و سلم*
No comments:
Post a Comment