رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ اِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَّدُنْكَ رَحْمَةً اِنَّكَ اَنْتَ الْوَهَّابُ
“எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே!
இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!” 3:8
எங்கள் இரட்சகனே!
குழப்பமான இந்நேரத்தில் எங்களுக்கு நேர்வழிகாட்டுவாயாக!
நபிவழியை பின்பற்றுபவர்கள் என எங்களைச் சொல்லிக்கொள்கிறோம்,
ஆனால் அவர்கள் கற்று கொடுத்து தாங்களும் நடந்து காட்டிய பொறுமை,
தன் சகோதரனுக்கு
விட்டுக் கொடுத்தல்,
அகம்பாவமின்மை,
தான் விரும்புவதையே பிறருக்கும் விரும்புதல்
போன்ற பண்புகளைப் பின்பற்றாமல் எங்களுக்குள் பிளவு பட்டிருக்கிறோம்.
எங்கள் ரப்பே! எம் சகோதரர்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவாயாக!
اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ ، وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ
யா அல்லாஹ் ! எங்களுக்குள் பிளவை திட்டமிட்டு உருவாக்குபவர்களுக் கெதிரில் உன்னை ஆக்குகிறோம். அவர்களின் தீமைகளை விட்டு உன்னிடம் பாதுகாப்பைத் தேடுகிறோம்.

ஆமீன்.. ஆமீன்.. ஆமீன்.. யா ரப்பல் ஆலமீன்.
No comments:
Post a Comment