மௌலிது ஓதுவது பற்றி மகான்களின் மணி மொழிகள்
قال ابوبكر الصديق رضي الله عنه
من أنفق درهما علي قرائة مولد النبي صلي الله عليه وسلم كان رفيقي في الجنة
அபூபக்கர் ஸித்தீக் ரழியல்லாஹு அன்ஹு அவர்
கள் கூறினார்கள் அண்ணல் நபி
அலைஹி வஸல்லம் அவர்களின் மவ்லிதை ஓதுவதற்காக ஒரு "திர்ஹம்" செலவு செய்பவர் சொர்க்கத்தில் எனது தோழராக இருப்பார்.
قال عمر بن خطاب رضي الله عنه
من عظم مولد النبي صلي الله عليه وسلم فقد أحيا الاسلام
உமர் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் அண்ணல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் மவ்லிதை கண்ணியப்படுத்தியவர் இஸ்லாத்தை உயிர்ப்பித்தவராவார்.
قال عثمان رضي الله عنه
من أنفق درهما علي قرائة مولد النبي صلي الله عليه وسلم فكأنما شهد غزوة بدر وحنين
உதுமான் ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் மஹ்மூத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களது மவ்லிதை ஓதுவதற்காக ஒரு "திர்ஹம்" செலவு செய்தவர் "பதுறு,ஹுனைன் போர் முனைகளில் கலந்து கொண்டவரைப் போலாவார்.
قال علي رضي الله عنه وكرم الله وجهه
من عظم مولدالنبي صلي الله عليه وسلم وكان سببا لقرائته لايخرج من الدنيا الابالامان ويدخل الجنة بغير حساب
அலி ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் நாயகத் திருமேனி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பிறந்த தினத்தை கண்ணியப் படுத்தியவர், மவ்லிது ஓதக்கூடியவர் ஈமானுடனேயே மௌத்தாவார் சுவனத்தில் கேள்வி இன்றி பிரவேசிப்பார்.
قال حسن البصري رضي الله عنه
وددت لوكان لي مثل جبل أحد ذهبا لانفقته علي قرائة مولد النبي صلي الله عليه وسلم
ஹஸன் பஸரீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள் எனக்கு உஹது மலைபோன்ற தங்கமலை இருக்குமாயின்
அனைத்தையும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மௌலிதை ஓதுவதற்காகவே செலவிடுவேன்.
قال معروف الكرخي قدس سره :
من هيأ طعاما لأجل قرائة مولد النبي صلي الله عليه وسلم وجمع اخوانا وأوقد سراجا ولبس جديدا وتبخر وتعطر تعظيما لمولد النبي صلي الله عليه وسلم حشره الله يوم القيامة مع الفرقة الاولي من النبيين وكان في أعلي عليين
மஃறூபுல் கர்கீ ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்
மௌலிது ஓதுவதற்காக உணவு தயாரித்து, நண்பர்களை ஒன்று சேர்த்து, விளக்கேற்றி வைத்து,புத்தாடை உடுத்தி, நறுமணம் பூசி மௌலிதை கண்ணியப்படுத்துபவர் மறுமையில்
எழுப்பப்படும் முதல் பிரிவினரான நபிமார்களுடன் அவர்களை வல்ல நாயன் சேர்த்தருள்வான். உன்னதமான உயர் பதவிகளையும் அவர்கட்கு வழங்குவான்.
قال امام الشافعي رضي الله عنه :
من جمع لمولد النبي صلي الله عليه وسلم اخوانا وهيأطعاما وأخلي مكانا وعمل احسانا وصار سببا لقرائته بعثه الله يوم القيامة مع الصديقين والشهداء والصالحين ويكون في جنات النعيم
இமாம் ஷாபி ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்
நபியவர்களின் மவ்லிதை ஓதுவதற்காக ஆட்களைச் சேர்த்து, உணவு சமைத்து நல்ல முறையில் அன்புடன் அமல் செய்பவரை அல்லாஹுத்தஆலா சித்தீகீன்கள், ஷுஹதாக்கள்
ஆகியோரின் திருக்கூட்டத்தில் எழுப்புவான். இவர்கள் சுவனத்திலும்
அவர்களுடன் இருப்பார்.
قال سري السقطي رحمه الله :
من قصد موضعا يقرء فيه مولد النبي صلي الله عليه وسلم فقد فصد روضة من رياض الجنة لانه ماقصد ذلك الموضع الا لمحبة النبي صلي الله عليه وسلم
இமாம் ஸிர்ரியுல் ஸிக்தி ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்
ஒரு குறிப்பிட்ட இடத்தை மவ்லிது ஓதுவதற்கென
எண்ணி தேர்வு செய்துவைக்கும் நபர் சுவனத்தில் ஒரு
நந்தவனத்தை தெரிவு செய்தவர் போலாவார்.
காரணம் அவர் அஹ்மது நபிமீதுள்ள அளவிலாத
அன்பின்காரணத்தினால்தானே ஓரிடத்தைத் தேர்வு செய்தார்.
قال الامام السيوطي رحمه الله:
مامن بيت اومسجد اومحلة قرئ فيه مولد النبي صلي الله عليه وسلم الا حفت الملئكة ذلك البيت اوالمسجد اوالمحلة وصلت الملائة علي أهل ذلك المكان وعمهم الله تعالي بالرحمة والرضوان
மவ்லிது ஓதப்படும் இடத்தினை மலாயிக்கத்துக்கள் சூழ்ந்து
கொள்கின்றனர். அவ்விடத்தில் உள்ளவர்கள் மீது ஸலவாத்
கூறுகின்றனர். அல்லாஹுத்தஆலா தனது திருப்பொருத்தம்,
ரஹ்மத் ஆகியவைகளைக் கொண்டு அவ்விடத்தை சூழ்ந்து
கொள்கிறான்.
இமாம் ஜலாலுத்தீன் ஸுயூத்தி ரழியல்லாஹு அன்ஹு கூறினார்கள்
எந்த முஸ்லிமின் இல்லத்தில் மெளலிது
ஓதப்படுகின்றதோ அந்த இல்லத்தை தீயால் எரிதல்,மற்றும்
அனைத்து வகை சோதனைகள், கஷ்டங்களை விட்டும் அல்லாஹ்
பாதுகாக்கின்றான். அவ்வில்லத்தார்கள் மரணமடைந்து கப்றின் கேள்விகள்
அவர்களுக்கு இலேசாக்கப்படுகின்றன.
قال الامام فخر الدين الرازي رحمه الله :مامن شخص قرء مولد النبي صلي الله عليه وسلم علي ملح أوبر أوشيئ آخر من المأكولات الاظهرت فيه البركة وفي كل سيئ
யாராவது ஒருவர் ஏதும் தின்பண்டங்களை வைத்து மௌலிது ஓதுகிறாரோ,அவருக்கு அப்பொருளிலிருந்து பரக்கத்தை நல்குவான்.
அப்பண்டங்களை உண்பவருக்கு இறைவன் பிழை பொறுத்துக் கொள்கின்றான்.
நபிகள் கோமானின் வாழ்க்கை சரிதையைக் கொண்ட மௌலிது மஜ்லிசில் சிறிதளவு நீர் வைத்து ஓதி ஊதி குடிப்பவருக்கு ஆயிரம் வகை நிஃமத்துக்களும், பிரகாசமும், நூரும் அவரது உள்ளத்தில்
சேருகின்றன. ஆயிரம் வகை நோய் அவரை விட்டும் நீங்குகின்றன.
தங்கத்தாலோ, வெள்ளியாலோ அல்லது வேறு உலோகங்களினால் செய்யப்பட்ட ஒரு நாணயத்தின் மீது மவ்லிதை ஓதி ஊதி அந்த
நாணயத்தை வேறு நாணயங்களுடன் சேர்த்து வைத்தால்
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின்
பரக்கத் அருள்மாரி பொழியும். வறுமை அணுகாது.
ஆதாரம் : அந்நிஃமத்துல் குப்ரா,
இமாம் இப்னு ஹஜர் ஹைதமி கூறினார்கள்
நன்றி - அல் அஸ்ரார் மெய்ஞான மாத இதழ்
98415 67213
No comments:
Post a Comment