ஆரிஃபீன்களின்
பார்வையில் ஒடுக்கத்துப் புதன்
ஆருயிர் நபிகளாருக்கு இறுதிநோய் ஆரம்பித்த, நபிமார்களுக்கு சோதனைகள் துவங்கிய ,முந்தைய கூட்டத்தார்கள் அழிக்கப்பட்ட, கடும் நோய்கள் தொற்றுகின்ற,கொடிய
(நஹ்ஸ்)கெட்ட தினமே,ஸஃபர் மாதத்தின் (ஒடுக்க)இறுதி புதன்கிழமை .
காறணகாரியமான இவ்வுலகின் நிகழ்வைகளை அவதானித்த ஆரிஃபீன்கள்,அன்று செய்யவேண்டிய ஓதுதல்களையும் துஆக்களையும் வழங்கிச் சென்றுள்ளனர்.
ஸபர் மாதத்தின் கடைசிப் புதனில் , மூன்று லட்சத்து இருபதாயிரம் சோதனைகள்/பலாய்கள் இறங்குவதாக,பல கிரந்தங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஒவ்வொரு வருடத்திற்கெனவும் அல்லாஹ்வால் ஏற்படுத்தப்படுகின்ற பலாய்கள், கஷ்டங்கள், சோதனைகள் *“லவ்ஹுல் மஹ்பூல்” பலகையிலிருந்து பூமியை அடுத்துள்ள முன் வானத்திற்கு* , அன்றுதான் இறக்கப்படுகின்றன”
*44:3 &97:1 மறை வசனங்களை* நம்புபவர்கள், இந்த செய்தியை மறுப்பது, வினோதமாக உள்ளது.
கீழ்க் காணும் திருக்குர்ஆனின் 7 வசனங்களை பீங்கானில்/மாவிலையில் எழுதி, தண்ணீரால் கரைத்து குடிப்பவர்களுக்கு,மேற்படி சோதனைகள் ஏற்பட மாட்டாது- என்றும் இமாம்கள் பலர் கூறியுள்ளார்கள்.
“புதன் கிழமையில் சுவர்க்கத்து நீர் உலகத்து நீருடன் கலப்பதால், *அன்று குளிப்பதும்* சிறந்தது.
ஒவ்வொரு ரக்அத்திலும் ஃபாத்திஹா சூரா ஒதியபின் *“இன்னா அஃதைனா கல் கவ்தர்” சூறத்தை 17 முறையும், “குல்ஹுவல்லாஹ் சூறத்தை” 5 முறையும் , “குல்அஊது பிறப்பில் ஃபலக்” சூறா ஒரு முறையும் “குல் அஊது பிரப்பின்னாஸ்”சூறா ஒரு முறையும் ஓதி,4ரக்அத்* தொழுபவர், அந்த வருடம் முழுவதும் சகல பலாய்களில் நின்றும் பாதுகாக்கப்படுவார்-என ஸூஃபியாக்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த அற்புத நிவாரணியை நமக்குக் கற்றுத்தந்த,அனைத்து தரீக்கத்தின் ஷெய்குமார்களுக்கும்- குறிப்பாக *நக்ஷபந்திய்யா ஷைகுமார்களுக்கும், ஃபாத்திஹா* ஓதி துஆ செய்யவேண்டியது நமது கடமை.காறணம்,நக்ஷபந்திய்யா நிறுவனர்,ஷெய்க் பஹாவுத்தீன் வலியுல்லாஹ் அவர்கள்தான்,முதன்முதலில், இதனை பிரபல்யப்படுத்தியவர்கள்.இவர்களின் பிறப்பைக் குறித்தும்,குத்பு நாயகயவர்கள்,முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.
7ஸலாம்கள்+துஆ வருமாறு:
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
*سَلاَمٌ قَوْلاَ مِّنْ رَّبِّ رَّحِيْمٍ*
*سَلاَمٌ عَلَى نُوْحٍ فِى الْعَالَمِيْنَ.*
*سَلاَمٌ عَلىَ اِبْرَاهِيْمَ.*
*سَلاَمٌ عَلَى مُوْسٰى وَهَارُوْنَ*.
*سَلاَمٌ عَلٰى اِلْيَاسِيْنَ*.
*سَلاَمٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوْهَا خَالِدِيْنَ.*
*سَلاَمٌ هِيَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ.*
*اَللّٰهُمَّ اَعْصِمْنَا مِنَ الْبَلآءِ وَدَرْكِ الشَّقَآءِ وَسُوْءِ الْقَضَآءِ وَشَمَاتَةِ الْآعْدَآءِ وَمَلْجُوْمِ الْوَبَآءِ وَمَوْتِ فُجْاءَةٍ وَمِنْ زَوالِ الْبَرَكَةِ وَالنِّعْمَةِ وَمِنَ الْبَرَصِ وَالْجُذَامِ وَالْجُبْنِ وَالْبَرْصَامِ وَالْحُمّٰى وَالشَّقِيْقَةِ وَمِنْ جَمِيْعِ الْاَمْرَاضِ وَالْاَسْقَامِ بِفَضْلِكَ وَجُوْدِكَ يَاذَالْجَلاَلِ وَالْاِكْرَامِ بِرَحْمَتِكَ يَااَرْحَمَ الرَّاحِمِيْنَ وَصَلَّى اللهُ عَلىَ خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَعَلىَ اٰ لِهِ وَاَصْحَابِهِ وَسَلَّمْ وَالْحَمْدُ لِلّهِ رَبِّ الْعَا لَمِيْنَ اٰمِيْنَ* .۔۔۷
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்.
ஸலாமுன் கவ்லம் மின் ரப்பிர் ரஹீம் ஸலாமுன் அலா நூஹின் ஃபில் ஆலமீன்
ஸலாமுன் அலா இப்ராஹீம்
ஸலாமுன் அலா மூஸா வ ஹாரூன்
ஸலாமுன் அலா இல்யாஸீன்
ஸலாமுன் அலைக்கும் திப்தும் ஃபத்குலூஹா ஃகாலிதீன்
ஸலாமுன் ஹிய ஹத்தா மத்லஇல் ஃபஜ்ர்...@7.
ஒடுக்கத்துப்புதன் பற்றிய குறிப்புகள் ,நூற்றுக்கும் அதிகமாக கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளன.விரிவை அஞ்சி அவற்றின் பெயர்களை மட்டும் இறுதியில் கொடுத்துள்ளோம்.
புதன் கிழமைக்கென , *பிரத்தியேக தொழுகையை தொழுது வந்தார்கள், ஷாதலி* ஆண்டகை அவர்கள் .நாட்களின் துஆக்களை வகுத்துத் தந்த , *முஹ்யித்தீன் ஆண்டகையவர்களோ,புதனன்று மட்டும் அதனை 14தரம்* ,ஓதப்பணித்திருக்கிறார்கள்.
ஆக,காதிரிய்யா ஷாதலிய்யா நகஷபந்திய்யா ஜிஸ்திய்யா ஷத்தாரிய்யா....தரீக்கின் ஷெய்குமார்களின் சத்திய வழியை ,பற்றிப்பிடிப்போமாக!சங்கைக்குரிய அஹ்லுபைத்கள் பொருட்டினால் அதனை அடையப்பெறுவோமாக!!ஆமீன்!!!
ஆதாரங்கள்:
1.அல்குர்ஆன் 17:82 54:19
41:16
2.முஜர்ரபாதுத்தைறபி/
103
3.நிஹாயத்துல் அமல்/
திம்யாதி இமாம்/208
4.தப்ஸீர் ரூஹுல்
பயான்/8/328 &9/324.
5.தப்ஸீர் துர்ருல் மன்தூர்
6.தப்ஸீர் ஜலாலைன்.
7.தப்ஸீர் பைழாவி
8.தப்ஸீர் ஆலூஸி
9.தப்ஸீர் ரூஹுல்
மஆனி/27/119
10.தப்ரானி.
11.பைஹகி
12.இப்னுமாஜா
13.ஹாகிம்
14.தைலமி
15.இப்னுஹிப்பான்
16.ஸீரதுந்துபுலா
17.ஃபழாயிலுஷ்
ஷுஹுரில்
ஹிஜ்ரிய்யா/33-34
18.ஃபிர்தௌஸ்
19.அர்ரவ்ழஹ்
20.அல்பவாயித்.
21.ஸீரா இப்னுஹிப்பான்
22.ஹயாத்துல்ஹைவா
ன்/120/208
23.ஜவாஹிருல் ஃகம்ஸா.
24.அஸ்ரார்
25.ஃபுயூளாதுர்ரப்பானிய்
யா
26.ஃபதாவா
ஹதீதிய்யா/233
27.அஜ்மீர் நாயகத்தின்
அவ்ராத் கிதாப்
28.முஃஜமுல் அவ்ஸாத்/
தப்ரானி இமாம்
29.நூர்நாமா
30.தொழுகை அடவு.
31.ஸிம்து ஸுப்யான்
32.மஆனி/ ஆலிமுல்அருஸ்
நாயகம்.
33.sahebdargah.org
34.shumsmedia.org
35.sufimanzil.org
36.quthbiyamanzil.com
37.mohieddentv.com
38.moulaviabdurrahmangha
wsi-fb
39.kalwath nayagam
thaika-notices.
40.qaathiriyyathul idroosiyya
trust-clips.
tptc2022@gmail.com
2017.
No comments:
Post a Comment