Monday, 18 September 2017

அஷ்ஷெய்ஹூல்காமில்மௌலவிஜூபைர்அஹமதுஷூஹூதிஷாஹ்ஃபைஜிபாகவி

‎‏‪வல்லோன் மறை போற்றும் வலிமார்கள்‬ ‎أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ ‪10:62‬ நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் நல்லடியார்களுக்கு நிச்சயமாக யாதொரு பயமுமில்லை; அவர்கள் துன்பப்படவும் மாட்டார்கள் என்பதை நீங்கள் உறுதியாக அறிந்து கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் : 10:62) ‎‫الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ ‬அவர்கள் இறைவனை உண்மையாகவே நம்பிக்கை கொண்டு அவனுக்குப் பயந்தும் நடந்து கொள்கின்றனர்.(10:63) 1 . அவ்லியாக்கள் என்றால் யார்? ‎الولي : هو كل مؤمنٍ تقيٍّ ؛ இறை அச்சமுள்ள எல்லா முஃமின்களும் அவ்லியாக்களே‫!‬ ‎لقوله تعالى : الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ‪10:63 ‬ ## و لقوله تعالى : ۚ إِنْ أَوْلِيَاؤُهُ إِلَّا الْمُتَّقُونَ وَلَٰكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ இறை தக்வாவுடையவர்களையே தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அவ்லியாக்களாக இருக்கமுடியாது. எனினும், அவர்களில் பெரும் பாலானவர்கள் இதனைப் புரியாமல் இருக்கிறார்கள் . 8:34 எனவே எல்லா நபிமார்களும் அவ்லியாக்களே ! எல்லா ஸஹாபாக்களும் அவ்லியாக்களே ! நான்கு இமாம்களும் அவ்லியாக்களே ! ‪2.அவர்களின் அடையாளங்கள்‬ ‎وفي تفسير ابن كثير : حديث مرفوع كما قال البزار عن سعيد بن جبير، عن ابن عباس قال: ‎قال رجل: يا رسول الله، مَنْ أولياء الله؟ قال: "الذين إذا رءُوا ذُكر الله". ‎ثم قال البزار: وقد روي عن سعيد مرسلا. யாரைப்பார்த்தால் இறைவனின் ஞாபகம் வருமோ அவர்கள் தான் இறை நேசச் செல்வர்கள்‫.‬ ‎حديث إبن ماجه‪ ‬4109 والإمام أحمد ‪27601‬ عَنْ أَسْمَاءَ بِنْتِ يَزِيدَ‪ ‬أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ أَلَا أُنَبِّئُكُمْ بِخِيَارِكُمْ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ خِيَارُكُمْ الَّذِينَ إِذَا رُءُوا ذُكِرَ اللَّهُ عَزَّ وَجَلَّ உங்களில் உன்னதமானவர்கள் யார் என சொல்லட்டுமா என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கேட்டார்கள் .ஆம் சொல்லுங்களேன் என சஹாபாக்கள் சொன்னார்கள் . உங்களில் உன்னதமானவர் யாரெனில் யாரைப் பார்த்தால் மட்டுமே அல்லாஹ் (ஆகிரத்) நினைவு வருமோ அவர் தான் என நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொன்னார்கள் என்பதாக அஸ்மா ரலியல்லாஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் .ஹதீஸ் அஹ்மத் இப்னு மாஜஹ் 4109 3 . இறை நேசர்களின் அந்தஸ்து.......... ‎[رواه البخاري‪] 6021 ‬عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ‪ ‬قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ فَإِذَا أَحْبَبْتُهُ كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ وَلَئِنْ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ الْمُؤْمِنِ يَكْرَهُ الْمَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ ஸஹீஹ் புகாரி:6502 யார் என் நேசரை பகைத்துக் கொண்டாரோ அவருடன் நான் போர்ப் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்களில் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்ப்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் நஃபிலான வழிபாடுகளால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டே இருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு அவனை நான் நேசித்து விடும் போது , அவன் கேட்கின்ற செவியாக ,அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகி விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்கு பாதுகாப்பு அளிப்பேன். ஓர் இறை நம்பிக்கையாளரின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப்போன்று நான் செய்யும் எந்தச் செயலிலும் தயக்கம் காட்டுவதில்லை. அவரோ மரணத்தை வெறுக்கிறார்.நானும் மரணத்தின் மூலம் அவருக்குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்‫.‬ ‪1) ‬هذا الحديث أصل في باب ولاية الله تعالى وهو أعظم وأصح حديث خاص بأولياء الله تعالى‪ .‬ ‪2) ‬هذا حديث قدسي كبير الشأن :لما اشتمل عليه من أمور عظام توصل إلى درجة الوِلاية الحقة‪ .‬ யார் என்னுடைய நேசர்களைப் பகைத்துக் கொள்கிறார்களோ அவர்களோடு போர் செய்வதாக ரப்புல் ஆலமீன் எச்சரிக்கிறான்‫.‬ நஃபிலான வணக்கங்களால் ஒரு மனிதன் எவ்வாறான நன்மைகளைப் பெற முடியும். என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. 4 . அவர்களின் அமல்கள் உன்னதமானது எந்த அமலையும் அது சிறியதுதானே என எண்ணிக் கை விடமாட்டார்கள். எந்த‫ ‬தீயதையும் அது மக்ரூஹ்தானே என எண்ணி செய்ய மாட்டார்கள். ‎صحيح مسلم ‪ 1707 ‬عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ‪ ‬قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَصْبَحَ مِنْكُمْ الْيَوْمَ صَائِمًا قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا قَالَ فَمَنْ تَبِعَ مِنْكُمْ الْيَوْمَ جَنَازَةً قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا قَالَ فَمَنْ أَطْعَمَ مِنْكُمْ الْيَوْمَ مِسْكِينًا قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا قَالَ فَمَنْ عَادَ مِنْكُمْ الْيَوْمَ مَرِيضًا قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا اجْتَمَعْنَ فِي امْرِئٍ إِلَّا دَخَلَ الْجَنَّةَ ஸஹீஹ் முஸ்லிம் 1865. அபூஹுரைரா ரலியல்லாஹு அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எங்களிடம் ”இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்கர் ரலியல்லாஹு அவர்கள் ”நான்” என்றார்கள். ”இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவை பின்தொடர்ந்து சென்றவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்கர் ரலியல்லாஹு அவர்கள் ”நான்” என்றார்கள். ”இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?” என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்கர் ரலியல்லாஹு அவர்கள் ”நான்” என்றார்கள். ”இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்கர் ரலியல்லாஹு அவர்கள் ”நான்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் " எந்த மனிதர் நல்லறங்களான இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை” என்றார்கள்.

No comments:

Post a Comment