இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம் ..
இறைவா எனக்கு நேரான வழியை கொடு என்று தினமும் ஐவேளை தொழுகையில் கேட்கிறோம் ...
நேரான வழி என்றால் எதில் நேரான வழி ? என்பதை பற்றி சிந்திக்க வேண்டும் ..
சிலர் இஸ்லாத்தில் நேரான வழியை கொடு என்று அதற்க்கு பொருள் கூறுவார்கள் ..
நேரான வழி என்பதின் பொருள் பித்னா (குழப்பம்) இல்லாத வாழ்க்கையை கொடு என்பதாகும்.
மார்க்க விஷயத்தில் இருக்கும் பித்னா மட்டுமல்ல . உலக வாழ்வில் ஏற்படும் பித்னாவிலும் நேரான வழியை கொடு என்பது அதன் பொருளாகும் .
அனைத்து பித்னாவிலிருந்தும் நம்மை பாதுகாத்து நமக்கு நேரான வழியை கொடுக்கும் தகுதி இறைவனுக்கு மட்டுமே உண்டு ...
காரணம் இறைவன் மட்டுமே
"அல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்"
அனைத்து புகழுக்கும் சொந்தக்காரன்
அவனே "அர்ரஹ்மான்"
இவ்வுலகில் அனைவர்களுக்கும் சமமாக கிருபை செய்யக்கூடியவரன்
அவனே அர்ரஹீம்
மறுவுலகில் நல்லோர்களுக்கு மட்டும் அருள் செய்யக்கூடியவன் .
அவனே மாலிகி யவ்மித்தீன்
தீர்ப்பு நாளின் அதிபதியாக இருக்கிறான் ,
ரஹ்மானாக ,ரஹீமாக ,மாலிக்காக இறைவன் இருப்பதினால்
இய்யாக்க நஹ்புது வ இய்யாக்க நஸ்தஈன் .
இறைவனையே வணங்கவும் ,அவனிடத்திலே உதவியும் தேட சொல்கிறான் .
இறைவனிடத்தில் எப்படி உதவி தேடுவது ? எந்த உதவியை கேட்பது என்றும் நமக்கு
இஹ்தினஸ் சிராத்தல் முஸ்தகீம் ..
நேரான வழியை (அதாவது அணைத்து பித்னாவிலிருந்தும் -குழப்பங்களிலிருந்தும் பாதுகாக்கப்பட்ட வாழ்க்கையை ) எங்களுக்கு தருவாயாக என கேட்க சொல்கிறான் ..
ஒவ்வொரு மனிதனுக்கும் காலையில் எழுந்ததிலிருந்து குழப்பதிலே சிக்கி இருக்கிறோம் .
எனவே அதிகாலை சுபுஹ் தொழுகையில் இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம் என ஓதும்போது இறைவா இன்றைய அனைத்து குழப்பத்திலிருந்து எனக்கு நேரான வழியை கொடுப்பாயாக என்ற சிந்தனை வரவேண்டும் .
நடுப்பகல் (லுஹர்) தொழுகையில் இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம் என ஓதும்போது இறைவா இன்றைய அனைத்து குழப்பத்திலிருந்து எனக்கு நேரான வழியை கொடுப்பாயாக என்ற சிந்தனை வரவேண்டும் .
அஸர் (மாலை) நேர தொழுகையில் இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம் என ஓதும்போது இறைவா இன்றைய அனைத்து குழப்பத்திலிருந்து எனக்கு நேரான வழியை கொடுப்பாயாக என்ற சிந்தனை வரவேண்டும் .
மக்ரிப் (பொழுது சாய்ந்த பின்) தொழும் தொழுகையில் இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம் என ஓதும்போது இறைவா இன்றைய அனைத்து குழப்பத்திலிருந்து எனக்கு நேரான வழியை கொடுப்பாயாக என்ற சிந்தனை வரவேண்டும் .
இஷா (இரவு ) நேர தொழும் தொழுகையில் இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம் என ஓதும்போது இறைவா இன்றைய அனைத்து குழப்பத்திலிருந்து எனக்கு நேரான வழியை கொடுப்பாயாக என்ற சிந்தனை வரவேண்டும் .
இப்படிப்பட்ட சிந்தனையுடன் அனைத்து தொழுகையிலும் இறைவனிடம் குழப்பத்திலிருந்து பாதுகாப்பு கேட்டால் அனைத்துவகையான குழப்பத்திலிருந்து நாம் பாதுகாக்கப்படலாம் இன்ஷா அல்லாஹ் ...
Sunday, 15 October 2017
இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment