Sunday, 15 October 2017

மணக்கும் கலிமா

மணக்கும் கலிமா
‎لا اله الا الله محمد الرسول الله

இதன் முதல்வசனம்
‎لا اله الله
அல்லாஹ் அல்லாத எந்த தெய்வமுமே இல்லை
(எல்லா இலாஹும் அல்லாஹ் தானானதே- எல்லாம் அவனே) என்கின்றது

இரண்டாவது வசனம்
‎محمد الرسول الله
முஹம்மத் صلى الله عليه وسلم அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள் என்கிறது.

இந்தவிடயத்தையே தஸவ்வுப் ஞானபாட்டையில்
ஐனிய்யத் ஹகீகி-ஙெய்ரிய்யத் வஹ்மி என்ற இருவிடயங்களையும் கலிமா வலியுறுத்துகிறது என்பர்.

ஐனிய்யத்து ஹகீகி (ஒன்றே அனைத்துமாய் இருப்பது)அத்துவிதம்,
ஙெய்ரிய்யத் வஹ்மீ (பேதமையில் வெவ்வேறாக தெரிவது)
என்ற இரண்டையும்பற்றி பேசப்படுகின்றது.

நாம் அண்றாடம் ஓதும் லா ஷரீக்க லஹு (அல்லாஹ்வுடன் எந்த வித கூட்டுமே இல்லை)என்ற கலிமாவின் அத்துவித கருத்தேயாகும்.
இல்லல்லாஹு என்பதும் அவ்வாறுதான்.
யதார்த்தமும் அதுதான்.

மிகச்சுருக்கமாக சொல்லப்போனால்
லா இலாஹ இல்லல்லாஹு என்பது ஐனிய்யத்து ஹகீகீ (தரீகத்)
முஹம்மதுர்ரஸூலுல்லாஹ் என்பது கைய்ரிய்யத்து வஹ்மீ. (ஷரீஅத்)

-இன்னுமொருவிதத்தில் இதனை சொன்னால்
‎لا اله الله
எல்லாமாய் ஒரு பொருளே
என்றாலும்
முஹம்மதுர்றஸூலுல்லாஹி
"ஒவ்வொரு உருவத்துக்கும் வெவ்வேறு சட்டமும் குணபாடும் உண்டு"
‎ولكلّ سورة حكم وأثر
என ஸூபிய்யாக்கள் விவரிப்பர்.

1-மூலம் ஒன்று அதன் கோலங்கள் பல,
என்றாலும்
2-கோலத்துக்குரிய சட்டத்தை பேணு!
அதாவது பஞ்சுதான் தொப்பியாகவும் உள்ளாடையாகவும் இருக்கிறது என்பது ஐனிய்யத்து ஹக்கீகி ,
என்றாலும் சட்டமும் குணபாடும் தொப்பிக்கும் உள்ளாடைக்கும் வெவ்வேறானது- இது ஙெய்ரிய்யத் வஹ்மீ(ஷரீஅத்)

எல்லாமே பஞ்சுதான் என்றாலும்
தொப்பியை எடுத்து கீழாடையாய் பாவிக்க முடியாது, வெறும் பஞ்சை எடுத்து தலையில்வைத்து தொப்பி என்க முடியாது.
எனவே கவனிப்பின் பேரிலான கைய்ரிய்யத்தை பேணி நடக்கவேண்டும்.
மனதில் எல்லாமே ஒன்ருதான் என்பதை நிலைநிறுத்தவேண்டும்.

எல்லாமாய் அல்லாஹ் என்ற ஒரு மெய்ப்பொருளே இருக்கிறது என்றாலும் முஹம்மத் என்ற பாத்திரத்துக்கு நபி-றஸூல் என்ற அந்தஸ்தும் சட்டமுமே பேணப்படவேண்டும் என்கிறது கலிமதுத்தையிபா.

முதல் பகுதி- எல்லாமாய் அவனே என்பதால் கண்டதையெல்லாம் வணங்கலாம் என்பது
பொருளல்ல.

தஷ்பீஹில் வெளிப்பட்ட கோலங்களுக்கு வணக்கத்தை செலுத்துவதை தடுக்கும் இறைவன் அதற்கு கடிவாளமாக ஷரீஅத்தை இட்டு ஙெய்ரிய்யத் இஃதிபாரியைப்பேணிநடக்க ஷரீஅத் சட்டத்தை கடமையாக்கியுள்ளான்.

தன்ஸீஹில் உள்ள அவனை வணங்கும்படி ஏவுகிறான். தஷ்பீஹில் அவன் வணங்கப்படுவதை தடுக்கிறான்.
வணக்கம் என்ற செயலை இறைவனின் எந்த மர்த்தபாவுக்கு கொடுக்கவேண்டும் என்று தெளிவாக அல்லாஹ் ஏவியுள்ளான்.

எல்லாம் அவனே என்ற பேச்சு ஹகீகத்தைக்கருதிய
லா இலாஹ இல்லல்லாஹு என்ற வசனத்தின் அத்துவித பேச்சு.
கலிமதுத்தையிபாவின் முதற்பாதியை விளங்கிக்கொள்ளாமல் அதன் இரண்டாம் பாதியை விளங்கியிருக்கும் மக்களுக்கு
முதற்பாதியை எடுத்து அழுத்தி விளக்குவதால்
முஹம்மதுர்ரஸூலுல்லாஹுவை அவர்  கடைப்பிடிக்கிறார் இல்லை என்று தீர்மானத்துக்கு வந்துவிடக்கூடாது!
சரீஅத்- சரஹுவை கைவிட்டுவிட்டார் என்று குறைசொல்லவும்கூடாது. (இதுதான் இன்று நடக்கிறது)
இரண்டும் வண்டியின் இரு சக்கரங்கள் போன்றது.
இரண்டும் அவசியம்.லா இலாஹ இல்லல்லாஹு என்ற கலிமதுத்தையிபா சொல்வது தெளஹீத் எனும் அத்துவிதத்தையாகும்.
எனவே அத்துவிதம் வேறு இஸ்லாமிய ஞானம் வேறல்ல.

அத்துவிதம் என்ற ஓர்மைநிலை பற்றிய ஞானமானது இந்துமத வேதாந்திகளால் தவறாகப்புரியப்பட்டு திரிபுபட்டது.
அதாவது ஒருவஸ்த்து இன்னொருவஸ்த்தின்மீது இறங்கி ஒன்றாகிவிடுதலையும் (ஹுலூல்: தாமரையில் வண்டு வந்தமர்வதுபோன்ற)
இரு வஸ்த்துக்கள் ஒன்றுடன் ஒன்று இரண்டரக்கலந்து ஒன்றாகிவிடுவதையும் (இத்திஹாத்: சீனி நீருடன் கலந்து ஒன்றாகிவிடுவது போன்ற) அடிப்படையாகக்கொண்டு அதனை அத்துவிதம் என விளக்கினர்.
என்றாலும் இவர்களின் இவ்விளக்கத்தில் இருமை தரிபடுத்தப்படுகிறது. இது ஷிர்க்- கூட்டு- இணை ஆகும்.
இந்துக்களின் இந்த தவறான விளக்கத்தைப்பெற்றுக்கொண்டே இன்று பலர் அத்துவிதம் இஸ்லாத்திற்கு முரணானது என்று பேசுகின்றனர்.

யதார்த்தத்தில் அத்துவிதம் என்றால் என்ன!
உள்ளது ஒன்றே ஒன்றுதான்,
அல்லாஹ் மட்டுமே உள்ளவன்
அவனல்லாத எதுவுமே இல்லை
எல்லாம் அவனே
என்பதுதான் அத்துவிதமாகும். இங்கு அல்லாஹ்வைத்தவிர வேறு எதுவுமே இல்லை என்ற ஓர்மைதான் இஸ்லாம் சொல்லும் அத்துவிதம்.
அதாவது இவ் அத்துவிதக்கொள்கையையே ஸூபிஸ ஞானம் என்றும் வஹ்ததுல்வுஜூத் என்றும் ஸூபிய்யாக்களால் அழைக்கப்படுகின்றது.
.....
இந்த அத்துவித ஸூபிஸ இறைஞானத்தை ஸூபிய்யாக்கள் பல்வேறு பாணிகளில் விவரித்துள்ளனர்.

‎قال الشبلي سمعت الجنيد يقول: التصوّف أن يُميتك الحقُّ عنك ويُحييك به،

ஷிப்லி ரஹீமஹுல்லாஹ் கூறுகிறார்கள்.
நான் ஜுனைதுல் பக்தாதீ அவர்கள் சொல்லக் கேட்டேன். "தசவ்வுப் என்பது ஹக் (அல்லாஹ்) உன்னை மரிக்கச்செய்து அவனைக் கொண்டு உயிர்ப்பிப்பதாகும்"

‎التصوّف أن تعرف ربَّك بالبقاء، ونفسَكَ بالفناء،
தஸவ்வுப் என்பது உன் இறைவன் தரிபாடானவன் என்றும், நீ பனா இல்லாதவன் என்றும் அறிதல்.

‎التصوّف هو العصمةُ عن رؤية الكون،
தஸவ்வுப் என்பது  சிருட்டியை பார்ப்பதை விட்டும் பாதுகாத்துக் கொள்ளல். அதாவது அது அவன் என்றே பார்த்தல்.

இங்கு துவிதம் என்ற இருமை நிலையைக்களைந்து அத்துவிதம் என்ற ஓர்மை நிலைபற்றியே ஸூபிய்யாக்கள் விவரிக்கின்றனர்.
இவ் அத்துவிதத்தை திருமறையின் அநேக இடங்களில் இறைவன் குறிப்பிடுகின்றான்.

அதெல்லாம் இல்லை அத்துவிதம் இஸ்லாமிய ஞானமில்லை என்று ஒருவர் சொன்னால்
துவிதம்தான் இஸ்லாமா என்று கேட்கவேண்டியேற்படும்!

லா ஷரீக்க லஹூ
அவனுடன் எந்த வித கூட்டுமே இல்லை
என்பது தெளிவான  அத்துவிதம்தானே என்று கேள்வி எழும்.

No comments:

Post a Comment