அல் இமாமுல் காஷானீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்.
கண்கள் காணக்கூடிய அனைத்து வஸ்த்துக்களும் ஹக் தஆலாவேதான். ஆனால் "கயால்" என்று கூறப்படும் திரையிடப்பட்ட மாயை அதற்கு படைப்பு என்று பெயிரிடுகிறது. காரணம் அது (ஹக்) சிருஷ்டி என்ற உருவத்தினால் மறைக்கப்பட்டிருக்கின்றமையே ஆகும். (ஷர்ஹு புஸூஸில் ஹிகம் லில் காஷானீ, பக்கம் - 152 )
இமாம் அப்துல் ஙனீ அந் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். "வுஜூத்" படைக்கப்பட்டதாக ஆக முடியாது" (அல்வுஜூதுல் ஹக் லிந்நாபலஸீ , பக்கம் - 29 )
இமாம் தாவூத் அல் கைஸரீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள். பார்க்கப்படுபவது ஹக் தஆலாதான். அதாவது சகல படைப்புக்களிலும் அவனையே காணுகின்றோம். படைப்பு என்பது பேதமையாகும். அதனால்தான் அது படைப்பென்று அழைக்கப்படுகின்றது. ஏனெனில் "அல்கல்கு" என்பதற்கு மொழி இலக்கணத்தில் "பொய்" என்றே கூறப்படும்.
(ஷர்ஹு புஸூஸில் ஹிகம் லில் கைஸரீ, 1-365)
மேலும் இமாம் அப்துல் ஙனீ அந் நாபலஸீ றஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு தனது பாடலில் கூறுகின்றார்கள்.
வுஜூத் என்பது ஹக்கு, கல்கு என்று சொல்லப்படுவது போன்று இரண்டு இல்லை. அப்படியானால் அது இரண்டு வஸ்த்துக்கள் என்றாகிவிடும். இந்தக் கருத்து எதார்த்தவாதியிடம் இழி கொள்கையும், தவறானதுமாகும்.
(தீவானுல் ஹகாயிக் லிந் நாபலஸீ, பக்கம் - 104)
மேலும் கூறுகின்றார்கள். படைப்பு, படைத்தவன் என்று இரண்டில்லை. மாறாக ஒன்றேதான்.
(ஹுக்மு ஷத்ஹில் வலிய்யி லிந் நாபலஸீ, பக்கம் 196 )
இமாம் காஷானீ, இமாம் தாவூத் அல் கைஸரீ, இமாம் அப்துல் ஙனீ அந் நாபலஸீ ஆகியோர் ஏற்றுக் கொள்ளப்பட்ட, தேர்ந்தெடுக்கப்பட்ட இமாம்களும், பன்னூலாசிரியர்களுமாவர். மேலும் பேணுதல், துறவரம், மார்க்கப்பற்றுடையோரும், சிறப்புக்குரியோரும், புத்திக் கூர்மையானோருமாவர். அறிவு ஞானத்தில் சூரியன் போன்றோரும், தஸவ்வுப் கலையில் வேரூன்றிப்போன மலைகளுமாவர். இறை இரகசியங்கள் , "மஃரிபஹ்" எனப்படும் இறை ஞானக்கலையில் அலையடிக்கும் கடல்களுமாவர். "வஹ்ததுல் வுஜூத்" இறையியலில் ஆழமான கிணறுகளுமாவர்.
ஒரு ஆலிம் - மௌலவீ - அவர்கள் அருந்தியவற்றில் ஒரு துளியேனும் அருந்தாத நிலையில், அவர்கள் அறிந்தவற்றில் ஒரு நுக்தஹ்- புள்ளியேனும் அறியாத நிலையில் அவர்களை எவ்வாறு மறுக்க முடியும்? ஆச்சரியம் என்னவெனில் இந்த ஆலிம் மத்றஸாக்களிலும், கல்லூரிகளிலும் இலக்கண, இலக்கியம், சட்டக்கலை, வரலாறு போன்றவற்றில் சிறிதளவும், ஹதீதுக்கலை, தப்ஸீர் கலை நூற்களில் சில வரிகளையும், அகீதஹ் எனப்படும் கொள்கை சம்பந்தப்பட்ட கலை நூற்களில் சில வரிகளையும் மட்டுமே கற்று மௌலவீ பட்டம் பெற்று வெளியாகி, உண்மையில் அறிவுத்துறையில் பூச்சியமாகவும், வெங்காயமாகவும் இருந்து கொண்டு, ஒரு அறபு வசனத்தை சரிவர சொல்திறம் (இஃறாப்) செய்யமுடியாதவராகவும் இருந்து கொண்டும் அவர்களை மறுக்கிறார்.
நாம் இவ் ஆலிமை (அவர் மதனியாக இருக்கட்டும் அல்லது மக்கியாக, அல்லது கலாநிதியாக அல்லது ஷெய்காக இருக்கட்டும்) வஹ்ததுல் வுஜூத் பேசக் கூடிய ஸூபிய்யாக்கள் விடயத்தில் குறுக்கிடுவதை எச்சரிக்கிறோம்.
இந்த ஆலிம் தன்னுடைய மடமையின் காரணத்தால் உஹது மலையை அது இருக்குமிடத்திலிருந்து தன்னுடைய மூச்சுக்காற்றினால் அகற்ற முனைகிறார். அதே போன்று வெள்ளை மாளிகையை அது இருக்குமிடத்திலிருந்து ப்லாஸ்டிக் கோடரி மூலம் உடைக்க நினைக்கிறார்.
இந்த ஆலிம், தன்னை வளர்க்கும் படியான, ஆன்மீக உச்சிக்கு ஏற்றும் படியான ஒரு காமிலான ஷெய்கிடம் மண்டியிட்டு அவரிடமிருந்து அல்லாஹ்வைப் பற்றிய அறிவு ஞானங்களையும், அவனளவில் சேர்க்கும் படியான அறிவுகளையும் பெற்றுக் கொள்ளுமாறு நல்லுபதேசம் செய்கின்றோம்;.
قال القاشاني رحمه الله (كلُّ خلقٍ تَرَاهُ العُيونُ فهو عينُ الحقِّ ولكنّ الخيال المحجوبَ سمَّاهُ خلقًا، لكونه مستورًا بصُورةٍ خلقيّةٍ) (شرح فصوص الحكم للقاشاني، ص 152 )
قال الإمام عبد الغنيّ النّابلسي رحمه الله (لا يصِحُّ أن يكونَ الوجودُ مخلوقًا ) (الوجود الحقّ للنّابلسي، ص 29 )
وقال داؤود القيصريُّ رحمه الله (فالحقُّ هو المشهودُ ، أي فى جميع المظاهر، والخلقُ موهومٌ، لذلك يُسمّى خلقًا، فإنّ الخلقَ فى اللّغة الإفكُ) (شرح فصوص الحكم للقيصريّ، 1 ஃ 365 )
يقول الإمام عبد الغنيّ النابلسي رحمه الله،
ليس الوجودُ كما يقال اثنان - حــقٌّ وخلقٌ إذهــما شيـئان
هذا المقالُ عليه قُبْحُ عقيدةٍ - عند المحقِّقِ ظاهرُ البُطلان
(ديوان الحقائق للنّابلسي، ص 104 )
ويقول النّابلسي رحمه الله أيضا، (وما هما - الخالقُ والمخلوقُ - إثنانِ بلْ عينٌ واحدةٌ )
(حكم شطح الوليّ للنّابلسي، ص196 )
وأمّا الإمام القاشاني والإمام داؤود القيصـريّ والإمام عبد الغنيّ النّابلسـي فهم أئمّة معتمدون ومختارون وأصحاب مصنّفات كثيرة، وأصحاب ورع وزهد وعفّة وديانة ، وشرف وعزّة وفطانة، شموس فى العلوم كلّها، وجبال راسخات فى فنّ التصوّف ، وبحار متموّجات فى المعارف الإلهيّة والأسرار الربّانيّة، وآبار عميقة فى عقيدة وحدة الوجود،
فكيف ينكرهم عالم - مولوي - لم يشـرب ممّا شربوا ولو قطرة، ولم يعلم ممّا علموا ولونقطة، فالعجب من هذا العالم درس فى المدارس والكلّيّات بعض العلوم من النّحو والصـرف والفقه والتّاريخ ، وبعض ورقات من التفسير والحديث، وبعض سطور من كتب العقيدة، ثمّ أخذ شهادة المولويّ من أساتيذه وتخرّج منها، وهو فى الحقيقة صفر فى العلوم وبصل فيها، ينصب بمهارته الفاعل ويرفع المفعول،
وأنا أحذّر هذا العالم ولو كان مكيّا أو مدنيّا ، شيخا أو دكتورا، من الإعتراضات على المتصوّفة القائلين بوحدة الوجود،
وهذا العالم يريد بجهله وحماقته إزالة جبل أحد عن مكانه بنفخته، ويريد هدم القصـر الأبيض بفأس مصنوع بِبِلاسْتِكِيّة، وأوصي هذا العالم أن يتربّع بين يدي شيخ كامل يُرَبّيه ويرقّيه إلى درجات روحيّة، وأن يأخذ منه العلوم بالله، والعلوم التي توصله إلى باب مولاه عزّ وجلّ،
No comments:
Post a Comment