தியாகம், என்றால் என்ன ?
குர்பானி என்றால் என்ன ?
அதன் தத்துவார்த்தம் என்ன ?
தியாகம் என்ற சொல்லை ஆன்மிகம் சாராத மக்கள் மிகத்தவறாக விளங்கி வைத்திருக்கிறார்கள் .
ஆசையை துறப்பது,
உடல் இச்சையை விடுவது !
சிகரெட், மது போன்ற கெட்டப்பழக்கங்களை விட்டொழிப்பது !
ஆடுகளை, மாடுகளை ஆண்டவனின் பேரால், அறுத்து பலியிட்டு, அதன் கறியை மக்களுக்கு பகிர்வது !
இப்படியெல்லாம் நினைத்து, தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
அப்படியானால், தியாகம் என்பதன் தத்துவார்த்தம்தான் என்ன ? என நீங்கள் கேட்பது, எங்களுக்கு விளங்குகிறது ?
என்னத்தை தியாகம் செய்வது ? குர்பானி செய்வது ?
எண்ணத்தை தியாகம் செய்வதே, உண்மையான தியாகம் !
தி- திமிர், அகம்பாவம், ஆணவம், தற்பெருமை முதலியவைகளை தியாகம் செய்வது !
இதுவே, உண்மையில், யாகமாகும் !
இதற்கு பெரும் தடைச்சுவராக, குறுக்கே நிற்பது, நம் மனம் என்னும் நஃப்ஸேயாகும்!
"அழுகையில் மனிதன் இல்லை
சிரிப்பினில் மனிதன் இல்லை
உள்ளத்தில் மனிதன் இல்லை
உறக்கத்தில் மனிதன் உண்டு"
என கவிஞர் பாடியதுபோன்று
ஆழ்ந்த உறக்கத்தில்தான் மனம் ஓய்ந்தொழிந்து, நம் ஆன்மா விழித்து, ஸலாம் என்னும் சாந்தி நிலை நமக்கு உண்டாகிறது !
நம் சாதாரண உறக்கத்தில், கனவுகள் என்ற பெயரில், இந்த மனம் என்னும் மாயப்பிசாசு, நம்மை பாடாய்ப்படுத்துகிறது !
அதனால்தான்,
"கனவுகளே! கனவுகளே ! கலைந்துபோக மாட்டீரோ ?
நினைவுகளே! நினைவுகளே! நின்றுபோக மாட்டீரோ ?
நிம்மதியை தாரீரோ" !
என கண்ணதாசன் கதறி அழுதுப் பாடுகிறார் !
ஆதலால், அந்த அடங்காப் பிடாரியான மனதை, அதில் எழும், கடலலைகள் ஓய்ந்தாலும், ஓயாமல் ஒப்பாரி இராகமிடும், இதயத்தின் எண்ண அலைகளை, உணர்வுக்கொப்பளிப்புக்களை, அடக்கியொடுக்கி, அழித்தொழிக்க
வேண்டும் !
இது, எவ்வாறு சாத்தியமாகும் !
தெரிந்தோ, தெரியாமலோ, நாமே, இந்த நஃப்ஸை, நன்றாக வளர்த்து, கொழுக்க வைத்து, பெரும் பயில்வானாக்கிவிட்டோம் !
அசுரனாக, அரக்கனாக அது ஆனதற்கு, நாமே காரணமாகிவிட்டோம் !
இப்போது, அந்த பயில்வானோடு பகைத்துக்கொண்டு, அதனுடன் மல்யுத்தம் செய்ய முடியுமா ?
அதற்கான தவ வலிமை, நம்மிடம்தான் இல்லையே !
பின்பு, எப்படி அதனை நமக்கு பணியச்செய்வது ?
வெல்வது ?
இதற்கு, மிக இலகுவான, இனிதான, நேரான ஓர் பாதையை, ஞான வழி மஹான்கள், நம்மீது இரங்கி காட்டியருள்கின்றனர் !
அதாவது, நம் பார்வையை, நாட்டத்தை, கவனத்தை, சதாவும், நம்
இதயக்கமலம் எனும், அனாகதா ஆதாரத்தில், அல்லது நேத்திரக் கமலம் என்னும், சுழுமுனை ஆதாரத்தில், அல்லது எல்லாவற்றையும் விட மேலான,
உச்சிக் கமலமாகிய,
ஆயிரம் இதழ் தாமரை என்னும்,
நம் தலை உச்சியுனுள்ளே இருக்கும், சகஸ்ரார ஆதாரத்தில், நம் நாட்டத்தை வைத்திருந்தாலே போதுமானது !
நாமஜெபம் கூட அவசியமில்லை!
அத்துடன்,நம்மை வெட்டவெளியாக, ஷிவமாகவே உணர
வேண்டும்
ஷிவோஹம் !
ஷிவமே நான் !
நானே, எல்லாமாக, அனைத்துமாக,
சர்வேஷ்வரனாக
உள்ளேன் !
என உறுதியுடன், உணர்ந்தாலே போதும் !
வேறு, எந்த தவமும் வேண்டாம் !
சாதனைகளும் தேவையில்லை !
சரி, குர்பானி என்னும் பெயரில், மிருகங்களை அறுத்து பலியிடுதலே கூடாதா ? என்றால், தாளாரமாக கூடும் !
அதே நேரத்தில், நல்லவர்களான,
வல்லவர்களான
நபிமார்கள்,
குத்புமார்கள்,
மஹா அவதார்கள்,
மஹா சித்தர்கள்,
வலிமார்கள்,
எத்தகைய இஹ்ஸான் என்னும், தூய இறைவுணர்வுடன், பலியிட்டார்களோ, அதே உணர்வுடன் அல்லது அதில் ஒரு ஐம்பது சதவீத உணர்விலாவது,
நாமும் ஏகத்துவ ஞானவுணர்வுடன்,
பக்தியுடன்,
ஈமான் இஹ்லாஸுடன்,
இஸ்லாம் எனும் யோகவுணர்வுடன்,
ஏகாந்த உணர்வுடன், குர்பானி கொடுத்தால்,
நிச்சயமாக, ஏக இறைவனான, அல்லாஹ், நம் திருப்பலியை அங்கீகரித்தருள்வான் !
எல்லாவற்றுக்கும் மேலாக,
நம் மனம் எனும் மிருகத்தை பலியிட்டு, தஜ்கியதுன்னஃப்ஸ் எனும் ஆன்ம பரிசுத்தம் அடைவதையே, அவன் மிகவும் விரும்பி ஏற்றுக்கொள்வான் !
🤲🤲🤲🤲🤲🤲
Wednesday, 22 August 2018
What is the inner meaning or philosophy of Sacrifice ?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment