Wednesday, 15 August 2018

தாருஸ்ஸலாம்

தாருஸ் ஸலாம் !
💚💚💚💚💚💚
சாந்தி இல்லம்   !
💛💛💛💛💛💛
பைத்துன் நூர் !
ஜோதி இல்லம் !
💥💥💥💥💥💥⭐⭐⭐⭐⭐⭐
யா ஸலாம் !
சாந்தி மயமானவனே !
யா நூர் !
ஜோதி மயமானவனே !
ஏகன் அல்லாஹ்வின், அஸ்மாவுல் ஹுஸ்னா என்னும் தொன்னூற்று ஒன்பது திருநாமங்களில்
இந்த இரண்டு நாமங்களுக்கும் தனிச்சிறப்புண்டு !
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை சந்திக்கும்போதும், வீட்டினுள் அல்லது பள்ளிவாயினுள் நுழையும்போதும்,  தனது பர்ளான,
சுன்னத்தான, நஃபீளான அனைத்து தொழுகைகளிலும், அத்தஹிய்யாத்தின் அந்தமாக, இந்த ஸலாம் என்னும் திருநாமத்தையே பிரயோகம் செய்கின்றார் !
சொர்க்கத்திற்கும், தாருஸ் ஸலாம் என்றே சொல்லப்படுகிறது !
ஸலாமுன் கவ்லம் மின் றப்பிற் ரஹீம் என, இறைவனும் சுவனவாசிகளுக்கு, சோபனம் கூறுகின்றான் !
உலக மகாப் பிரளயத்தின்போதும், "ஸலாமுன் அலா நூஹின் ஃபில் ஆலமீன்" என கூறி, யா ஸலாமாகிய, சாந்திமயமானவனாகிய அல்லாஹ், தன் நபியையும், அவருக்கு ஈமான் கொண்ட அனைத்து  மனிதர்களையும்  சகல ஜீவராசிகளையும், தனது ஹஃபாலஹ் என்னும் பாதுகாப்பைத் தந்தருளினான் !
தனது கலீல் என்னும் தோழரான ஹள்ரத் இப்றாஹீம்(அலைஹி) அவர்களுக்காக,
"யா நாரு கூனீ பர்தன் வ ஸலாமன் அலா இப்றாஹீம் எனக் கூறியே,
மாபெரும் அக்னி குண்டத்தை சுகம் தரும் குளிர்ந்த சோலையாக ஆக்கி, தனது சிநேகிதர் இப்றாஹீம்(அலை) கொடும் நெருப்பில்
சிக்கி, எரிந்துபோகாமல், பாதுகாத்தான் !
இத்தகைய, மஹா கருணையாளனாகிய, எல்லாம் வல்ல, ஏகன் அல்லாஹ்வின், சர்வ பாதுகாப்புகளையும் தரும், ஸலாமத்தான இந்த
ஸலாம் என்ற நாமமே, இஸ்லாமாக, முஸ்லிமாக ஆகியுள்ளது !
உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், ஸலாம் என்னும் நிலையிலேயே, இயற்கை மார்க்கம் (ஃபித்ரஹ்) இஸ்லாத்தில் உள்ளதாக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.
அல்லாஹ் ! என்னும் முழுமுதற் கடவுளை, பரிபூரணத்தை, உஜூதை, உள்ளமையை, குறிப்பிடும் மஹா மந்திர சக்திவாய்ந்த, இஸ்முல் அஉளம் என்னும் மிக்க மகத்துவமிக்க  சொல்லுக்கு அடுத்ததாக, அடியார்களின் வாய்களிலிருந்து, அதிகமதிகமாக உபயோகப்படுத்தப்படும் கலாம் இந்த ஸலாம் !
இதன் தத்துவார்த்தம்தான் என்ன ? என்பதை சற்று ஆய்வு செய்வோம் !
எல்லையற்றத் தன்மையுடன்  ஐக்கியமாகுதல்!
Union with the Infinity !
இதனை "யோகம்" (Yoga) என்றும, அந்த நிலையை அடைந்தவரே உண்மையில் "யோகி" (Yogi) என்றும் அழைக்கத் தகுதியுள்ளவர் !
இந்த யோகம் என்னும் சொல், எண்ணங்களற்ற நிலை !
மனமற்ற நிலை !
Thoughtless condition ! or
The state of No- Mind !
என்னும் பொருளில்தான்
பிரயோகம் செய்யப்பட வேண்டும் !
அதற்கு மாறாக,
மூச்சை இழுத்தல், அடக்குதல், வெளியிடுதல்,
உடல் உறுப்புக்களை பலக்கோணங்களில் வளைத்தல்,
அசைத்தல், தலை கீழாக நிற்குதல் என்றெல்லாம் பொருளல்ல !
இவைகளெல்லாம், யோக நிலையை அடைவதற்கான உபாயங்களில், பயிற்சிகளில் சிலவென்று தான் கூறலாம் !
இத்தகைய யோக நிலையே,
சிவ நிலையே,
யா ஸலாம் !
சாந்தி மயமானவனே !
என்னும் இறை நிலையே,
இஸ்லாம் என்னும் இயற்கை மார்க்கம் !
சன்மார்க்கம் !
சாந்தி மார்க்கம் !
இந்த யோக மார்க்கத்தில், செவ்வனே, நேராக, சீராக நடப்பவரே, யதார்த்தத்தில் முஸ்லிம் ஆவார் !
அவரே சன்மார்கி என்னும் மரணமிலாப் பெருவாழ்வையும் பெற்றவராவார் !
ஏனெனில்,
மரணமற்ற
சிவத்துடன் ஒன்றித்த சிவனுக்கு(சித்தனுக்கு) மரணமில்லை !
அல்லாஹ்வுடன் ஐக்கியமான இன்ஷான் அல்லாஹ்வுக்கு(இன்ஷானே காமில்) மௌத் இல்லை !
இந்த ஆதி நிலையை, அடைய வேண்டும் என்பதற்காகவே,
ஸலாம் என்னும் சொல், நம் நடைமுறை வாழ்க்கையில்,  அல்லாஹ்வால்,
அவன் வகுத்த சரியையிலும் ஞாபகப்படுத்தப்படுகிறது !
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காதுஹு என்று முகமன் கூறுவதில்கூட, முதலாவதாக, ஸலாம் என்ற சொல் வருவதன் காரணம், ஒரு அடியார், இந்த சாந்தி நிலையை
அடைந்துவிட்டால், அவருக்கு அல்லாஹ்வின் ரஹ்மத் எனும் அருளும், பரக்கத் எனும் அபிவிருத்தியும் ஏற்பட்டு விடும் என்பதேயாகும் !
அல்லாஹும்ம அன்தஸ்ஸலாம் !
வ மின்கஸ்ஸலாம்
வ இலைக்க யர்ஜிவுஸ்ஸலாம்
வ ஹய்யினா றப்பனா பிஸ்ஸலாம்
வ அத்ஹில்னா பிரஹ்மத்திக
தாரஸ்ஸலாம்
என்னும் துஆவிலும்
அன்பே ஷிவம் என்பது போலவே, இந்த ஸலாமே அல்லாஹ்வாக உள்ளது என்பதும்
உட்கருத்தாக உள்ளது !
ஆகவே,
நம் உள்ளே, இந்த ஸலாம் என்னும் அமைதி நிலை, சலனமற்ற, எண்ணங்களற்ற நிலை குடிகொள்ள வேண்டும் !
"அமைதி உள்ளம்" யாருக்கு அமைகிறதோ, அவர் இருக்குமிடம் அல்லது வீடு
"தாருஸ் ஸலாம்" என்னும்
"அமைதி இல்லம்" ஆகிவிடும் !
அவருடைய அமைதியின் அதிர்வுகள்,   peaceful vibration  or frequency,
அவரைச்சுற்றிலும், அவரவர் சாந்த, ஜீவ காந்த சக்தியின் அளவு பரவியிருக்கும் !
அவரைச்சுற்றிலுமுள்ள அவர் குடும்பத்தவரும், மற்றவர்களும்
அந்த அமைதி அலைகளினால் ஆட்கொள்ளப்பட்டு, ஒரு அலாதியான நிம்மதியை அடைவர் !
அப்படிப்பட்டவர்,
அவ்லியாக்கள் என்னும் சித்தர்களின் தரஜாவில், படித்தரத்தில் இருப்பவராவார்!
அடுத்து, 
யா நூர் !
ஒளி மயமானவனே!
இந்த ஒப்பில்லா திருநாமத்தின் தத்துவம் என்ன ?
ஒளி என்றால், நாம், நம் புறக்கண்களால் காணும் சூரியனின் கண்கூசும் பிரகாசமா ?
சந்திரனின், விண்மீன்களின்
குளிர்ச்சி தரும் வெளிச்சமா ?
எண்ணெய்யினால் எரிக்கப்படும் அகல் விளக்குகளின்,
குத்து விளக்குகளின் தீப ஒளியா ?
இந்த அறியவியலரிஞர்களின் கண்டுபிடிப்பான மின்சார விளக்குகளின் ஒளியா ?
நிச்சயமாக இவைகளில் எதுவுமில்லை !
இருப்பினும்,  இந்த ஒளி, இவைகள் எல்லாவற்றுக்கும் ஆதிமூலமான ஜோதி !
ஆலமீன்கள் எனும் சர்வ லோகங்களின் ஒளி !
இந்த ஒளியே நம் கல்பின் ஒளி !
அறிவின் ஒளி !
ஆன்ம ஒளி !
மற்ற ஒளிகளெல்லாம் ஒளிந்து விடும் !
ஒழிந்து விடும் !
மறைந்து விடும் !
ஆன்மாவின்
பரமான்மாவின்
ஒளியோ எங்கும் ஒளிந்து விடாது ! என்றும் மங்காது
எப்பொழுதும் மறையாது !
என்றும்,
எக்காலமும், பரிபூர்ணமாக, பிரகாசித்துக்கொண்டேயிருக்கும் !
அல்லாஹும்ம அத்மிம்லனா நூரனா !
இறைவா எங்களின்(ஆன்ம) ஒளியை எங்களுக்கு பரிபூரணமாக்குவாயாக !
ஆமீன் !
என துஆ இறைஞ்சுகின்றோம் !
ஆயினும்,
இதனை எவ்வாறு எய்துவது ? என்பது குறித்து, மறையவனாகிய
ஏகன் அல்லாஹ்,  தன் அரும் மறை திருக்குர்ஆனில்,சூரா நூர் என்னும் அத்தியாயத்தில்,
அல்லாஹு நூருஸ் ஸமாவாத்தி வல் அர்லி.........
என்னும் வசனத்தொடரில்
அல்லாஹ், வானங்கள், மற்றும் பூமியின் ஒளியாக இருக்கின்றான்.
அவனுடைய பிரகாசத்திற்கு உதாரணம்: அதில் விளக்கு இருக்கும் ஒரு மாடம் போன்றதாகும்; அவ்விளக்கு கண்ணாடியினுள் இருக்கிறது; நிச்சயமாக அக்கண்ணாடி பிரகாசிக்கும் ஒரு நட்சத்திரத்தை போன்றதாகும்; அது பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தின் எண்ணெய்யினால் எரிக்கப்படுகிறது; அது கீழ் திசையை சேர்ந்ததுமன்று, மேல் திசையை சேர்ந்ததுமன்று.
அதன் எண்ணெய், அதை நெருப்புத்தொடாவிடினும், பிரகாசிக்கவே முற்படும்; இவை யாவும் இணைந்து ஒளிக்குமேல் ஒளியாகும்......
என்னும் வசனத்தின் சுருக்கமான ஞான தாற்பரியம் என்னவென்றால்,
நம் தலையிலுள்ள நெற்றியே விளக்கு இருக்கும் மாடமாகவும்
அதில், புருவமத்தியிலுள்ள மத்தியான காபா கௌசைனி என்னும் சுழுமுனை ஆதாரக் கண்ணாடியினுள் நட்சத்திரம்போன்று ஒளி பிரகாசித்துக்கொண்டிருப்பதாகவும்,
குண்டலினி சக்தி என்னும் பாக்கியம் பெற்ற ஜைத்தூன் மரத்தின் எண்ணெய்யினால் எரிக்கப்பட்டு, ஸித்ரதுல் முன்தஹா என்னும் சகஸ்ரார ஆதாரத்தில் இன்னொரு ஜோதி பிரகாசித்துக்கொண்டிருப்பதாகவும்
இவையெல்லாம் சேர்ந்து ஜோதிக்கு மேல் ஜோதியாக
ஏக ஜோதியாக
அல்லாஹ்வின் நூராக பிரகாசிக்கின்றது என்று ஞானவான்கள்,
தாம், தம் அகக்கண்களால்
தரிசித்த, அந்த ஆனந்த ஜோதியின் அனுபவித்தை,
பேரின்ப உணர்வுடன் உரைக்கின்றனர்
அல்லாஹ்வின் சிந்தனையே
இல்லாத  உள்ளம்  எப்பொழுதும் இருள் சூழ்ந்ததாக இருக்கும் !
எனவே, எங்களின் அன்பிற்கினியவர்களே ! நாம், அல்லாஹ்வின் திக்ர் எனும் கடலில்  மூழ்க மூழ்க,  எண்ணங்களற்றுபோய், தியான நிலை என்னும்
யா சலாம் ! என்ற நிலைக்கு வந்து விடுவோம் !
அந்நேரம்,
அஹம் பிரஹ்ம்மாஸ்மி !
நானே பிரஹ்ம்மம் !
இன்னீ அனல்லாஹ் !
நானே அல்லாஹ் !
ஷிவோஹம் !
ஷிவமே நான் !
என்பதை அறிந்துணர்ந்து
அதாவது, தன்னை, தன் சுயத்தை அறிந்து, ஞானானந்த முத்துக்களை  அள்ளியெடுத்து
பேரின்ப பேற்றை பெறுவோம் !
அந்த அருட்பெரும் சோதியுடன் மீண்டும் ஐக்கியமாவோம்
மஹானந்தர்களாக  நம் பூர்வீக பூரண நிலைக்கு மாறுவோம் !
அதாவது, நம்முடைய ஆதி நிலையை மீண்டும் அடைவோம் !
இந்நிலையை எய்தியவரின் கல்பே,
"ஒளி உள்ளம்"
"பைத்துன் நூர்" என்னும்
"ஜோதி இல்லம்"
இறை நன்றியுடன்,

No comments:

Post a Comment