சர்வதேச பிறை அல்ல பிழை !!
*****************************
சர்வதேச பிறை என்பது அறிவுக்கு அடிமையானதினால் வந்த வினை இது ஒரு தெளிவான வழிகேடே இன்றி வேறெதும் இல்லை !!
அறிவை படைத்த ரப்புவின் கட்டளைகளை
சிந்திப்பதனால்
பகுத்தறிவு பெற முடியும் !!
இப்னு உமர்(ரலி) அவர்களின் அறிவிப்பில் வருகின்ற
"பிறையை
கண்டால் நோன்பு வையுங்கள் ,இன்னும்
நோன்பை விட்டுவிடுங்கள் மேகமூட்டமாக இருந்தால் கணகிட்டு கொள்ளுங்கள்
(முப்பதாக)"
صحيح البخاري ( 1906, 1907 )
صحيح مسلم ( 1080 )
سنن أبي داود ( 2320 )
سنن النسائي ( 2120, 2121, 2122 )
سنن ابن ماجه ( 1654 )
موطأ مالك ( 781, 782 )
سنن الدارمي ( 1726, 1732 )
مسند أحمد ( 4488, 4611, 5294, 6323 )
இந்த அளவு தெளிவான ஆதாரமுள்ள ஹதீஸ்
கள் இருந்தும்
நட்சத்திர கணக்கை கையாண்டும்,கிரிகோரியன் காலண்டர் கணக்கை கையாண்டும்
உலக முஸ்லீம்களை ஒன்றினைத்து
பரஸ்பரத்தை வலுப்படுத்துவோம் போன்ற பாசாங்குகள் அனைத்தும் விசுவாசிகளுக்கு
அழகல்ல....
ஏக இறைவனின் இறுதியான உறுதயான பிறை விடயத்தில் தனது கட்டளையை இறை தூதர் (ஸல்) அவர்களின் மூலமாக நமக்கு அறிவுருத்த பட்டும் ,
நமது ஸலபுகளாகிய (முன்னோர்களாகிய) சத்திய சஹாபாக்களின் வழி முறையும் ,கண்ணியமான 4 மத்ஹபுகளின் இமாம்களின் ஏகோபித்த கருத்தும் اختلاف المطالع -பிறையின்
மாறுபட்ட உதிப்பு சரியே எந்த நாடுகளில் பிறை தென்படுகிறதோ அங்கு முடிவெடுக்கப்படவேண்டும் நோன்பு உண்டா ? இல்லையா என்று .
எவ்வாறு தொழும் நேரம் ஒவ்வொரு நாடுகளிலும் மாறுபடுகின்றனவோ அதை நாம் ஏற்று
கொள்கின்
றோமோ அது போன்றுதான் ஏற்க வேண்டும் ,தேசிய பிறையை கூட ஏற்க முடியும் ஆனால் சர்வ தேச பிறை என்பது ஒரு தெளிவான இஸ்லாம் காட்டிதராத ஒரு வழிகேடு .
ஷேகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறும்பொழுது
"
நட்சத்திர கணக்கீடு இஸ்லாதில் அனுமதிக்கபடவில்லை இதில் எந்த சந்தேகதிற்கும் இடமில்லை இதுதான் ஆதாரபூர்வமான
நபிமொழிகளின் மூலம் இன்னும் ,ஸஹாபாகளின் வழி முறையும் ஆகும்
மஜ்மஉல் பதவா -
207/25.
முஸ்லிம் கிரந்தத்தில் உள்ள குரைப் பின் அபூமுஸ்லிம் (ரலி)அவர்களின் சம்பவத்தில் மதீனாவிலிருந்து ஷாம் தேசதிற்க்கு அவர்கள் ஒரு பணி நிமிர்தமாக முஆவியா (ரலி) அவர்களை சந்திக்க செல்கின்றார்கள் அங்கு ஜும்மா இரவில் பிறை பார்கபட்டு நோன்பு நோற்று விட்டு அந்த ரமலானின் இருதியில் மதீனா வருகின்றார்கள்
அங்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை சந்தித்து ஷாம் தேசத்தில் அவர்கள் நோன்பு
நோற்ற தினமாக ஜும்மா இரவை அவர்கள் குறிப்பிட அதற்க்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நீங்கள் பிறையை ஜும்மா இரவு கண்டீர்களா ? என கேட்க ஆம் அங்கு மக்கள் அனைவரும் கண்டனர் எனவே முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தனர் என்று கூறினார்கள் ,இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நாங்கள் சனி இரவுதான் கண்டோம் ஆதலால் நாங்கள் ஒரு நாளில் நோன்பை தொடர்ந்து முப்பதை பூர்த்தி செய்வோம் அல்லது பிறையை பார்த்து விடுவோம் என்றார்கள் ,குரைப் (ரலி) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை கேட்கிறார்கள் ஏன் முஆவியா (ரலி) அவர்கள் கண்டு நோன்பு பிடித்தது போதாதா ? என்று
அதற்க்கு இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் (தெளிவு படுத்துகின்றார்கள் ) இல்லை ,இவ்வாறு நமக்கு (கண்ணால் காண ) இறை தூதர் (ஸல்) அவர்கள் கட்டளை இட்டுள்ளார்கள் .
صحيح مسلم ( 1087, 1088 )
سنن أبي داود ( 2327, 2332 )
سنن الترمذي ( 688 )
سنن النسائي ( 2111, 2124, 2125, 2129, 2130, 2189 )
موطأ مالك ( 783 )
سنن الدارمي ( 1725, 1728 )
مسند أحمد ( 1931, 1985, 2335, 2789, 3021, 3208, 3515 )
இந்தஹதீஸிருந்து விளங்கும் சில
வழிகாட்டல்கள் :-
🔹இந்த ஹதீஸை அறிவித்த இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் இந்த ஸஹீஹான அறிவிப்பு ஒவ்வொரு நாட்டிற்கும் பிறை பார்கவேண்டும்
என்பதிற்க்கு வலு ஊட்டுகின்றது என்றும்,எந்த ஊரில் அதிகபடியான மக்கள் ஜமாதாக ஒரு முடிவினை பிறை விடயத்தில் எடுகின்றார்களோ அதையே மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் தங்கள் கிரந்ததில் குறுப்பிடுகிறார்கள் ,
🔸எனவே தூரமாக இருந்த ஷாம் தேச பிறையை (சர்வதேசமயமாக்கல் பிறையை )
ஹிஜாஸ் பகுதியில் உள்ள இறைதூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் ஏன் எடுத்து கொள்ள வில்லை ,முஆவியா (ரலி) அவர்களின் கிலாபத்தில் ஷாம் அப்பொழுது ஒரே சாம்ராஜியத்தில் இருந்தது என்பதினையும் ஏன் இந்த சர்வதேச பிறைவாதிகள் சிந்தனை கொள்ளவில்லை ?!!
🔹அவர்களை விட நாம் இன்று அறிவு ஜீவிகளாக ஆகிவிட்டோமா !!
🔸அது போன்று சர்வதேச பிறையை போதிப்பவர்கள் மக்களை இந்த விததில் குழப்பதில் இட்டு விடுகின்றனர் அதாவது நீங்கள் கண்டது பிறை அல்ல பிழை
மிக பெரியது பாருங்கள் அறிவிற்கும் பொருந்தவில்லை நீங்கள் கண்ட பிறை என்று கூறுகிறார்கள் ,
🔹சரியான பிறையின் அளவுகோல் பிறையின் அளவு சிறியதா ? அல்லது பெரியதா ? என்பதை வைத்தும் அல்ல என்பதை கீழ் உள்ள அறிவிப்பை தலைப்பாகவே இமாம் நவவி (ரஹ்) அவர்கள் முஸ்லிம் கிரந்ததில் சுட்டி காட்டியுள்ளனர் ,
மற்றும் ஒரு ஆதாரபூர்வமான அறிவிப்பு முஸ்லிம் கிரந்தத்தில் அபுல் பக்தரி என்ற சயீது பின் அல் புரோஸ் அவர்கள் மூலம் அறிவிக்கபடுள்ள ஒரு சம்பவம் உள்ளது ,
"
நாங்கள் உம்ரா செய்வதற்காக சென்றோம் "நக்லா" என்ற இடத்தை அடைந்த பொழுது பிறை காண சிறமபட்ட பொழுது சிலர் மூன்றாம் நாள் என்றனர் சிலர் இல்லை இரண்டாம் நாள் என்றனர் அதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை வைத்து கேட்டோம் அதற்க்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வினவினார்கள் எந்த இரவில் கண்டீர்கள் என்று ,நாங்கள் கூறினோம் இந்த இந்த இரவென்று ,
அதற்க்கு அவர்கள் இறை தூதர் (ஸல்) அவர்கள் கூறி இருக்கின்றார்கள் அதாவது உங்கள் பார்வைக்காக அல்லாஹ் அதை நீட்டி கொடுத்தான் ,எந்த இரவில் நீங்கள் கண்டீர்களோ அது தான் பிறை என்று ,
صحيح مسلم
8 ( 29 ) (المجلد : 3 الصفحة : 127)
அன்று இன்றுபோல் ஒரே வீட்டில் இரண்டு பெருநாட்களை (சர்வதேசமயமாக்கல் பிறையின் தாக்கதால் )
அவர்கள் நம்மை போல் கொண்டாட வில்லை ,அதலால் அடித்து கொண்டு நமது ஒற்றுமையை குலைக்க வில்லை !!
எனவே பிறச்சினை நாடுகளின் எல்கைகள் அல்ல பிறை தென்பட்டு அதை பார்பது தான் ,
ஒரே இறைவன் ஒரே தூதுவர் ஒரே மார்கம் ஒரே சர்வதேச பிறை என்பது கேட்பதிற்க்கு அழகாக உள்ளது இந்த சிந்தனையின் வெளிப்பாடுதான் இன்று பல ஈத் தொழுகையை அடுத்தடுத்த நாட்களில் தொழ வைத்து நம் ஒற்றுமையை கூறு போட்டு விட்டது,முஸ்லீம்களின் ஒற்றுமையை பேணுவது பர்ள் அல்லவா !!
எனவே இறைவனின் கட்டளைகளை விட்டும் நம்மை
திசை திருப்பமும் எந்த சர்வதேச
பிறையும் நம்மை நமது சத்திய பாதையிலிருந்து வழி தவற வைத்து விட கூடாது ,சர்வதேச பிறை ஒரு தெளிவான வழி கேடு என்பதின் பால் நாம் மக்களை அழைத்து இணை வைப்போரில்
நின்றும் இல்லாமல் இருப்போமாக
*****************************
இன்னும், அல்லாஹ்வின் வசனங்கள் உமக்கு அருளப்பட்டதன் பின், எதுவும் உம்மை அவற்றை விட்டும் நிச்சமயாகத் திருப்பி விடாதிருக்கட்டும்; மேலும் நீர் உம்முடைய இறைவன் பால் (அவர்களை) அழைத்தே வருவீராக நிச்சயமாக நீர் இணைவைப்போரில் ஒருவராகி விடவேண்டாம்.
(அல்குர்ஆன் -28:87)
*****************************
#ரமலானிய சிந்தனைகள்#
சுக்ரன் ஜஸீலா நன்றி
-மௌலவி SM.இஸ்மாயில் நத்வி
No comments:
Post a Comment