ஒரு நாள்முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜிலானி (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து எனக்கு செல்வம் பெருக வேண்டும் அதற்கு ஒரு வழி சொல்லுங்கள் என்று கேட்டார் .அதற்கு ஹஜ்ரத்முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜிலானி (ரலி) அவர்கள் 40 நாட்கள் இமாம் ஜமாத்தோடு தொழுங்கள் செல்வம் பெருகும் என்று சொன்னார்கள். அதற்கு அந்த மனிதர் நான் 40 வருடமாக இமாம் ஜமாத்தோடு தான் தொழுது வருகிறேன் என்றார்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜிலானி (ரலி) அவர்கள் உங்கள் வீட்டில் ஜன்னல் இருக்கிறதா என்று கேட்க அந்த மனிதர் ஆம் என்றார் .அப்படியானால் அந்த ஜன்னல்களை மூடுங்கள் என்று ஹஜ்ரத் அவர்கள் சொன்னார்கள்.அந்த மனிதர் ஹஜ்ரத் சொன்னது போல் ஜன்னலை மூடினார்.அதன் பிறகு அவருக்கு அல்லாஹ்வின் ரஹ்மத்தால் அந்த வீட்டில் அவருடைய செல்வம் பெருகியது .இதனால் ஆச்சர்யமுற்றவராக அந்த மனிதர் ஹஜ்ரத் அவர்களிடம் வந்து நான் 40 வருடமாக தொழுத பொது வராத செல்வம் இப்போது வீட்டின் ஜன்னல்கலை மூடிய பின்னால் எப்படி வந்தது என்று விளக்கம் கேட்டார்.முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜிலானி (ரலி) அவர்கள் சொன்னார்கள் உன் வீட்டின் வழியாக செல்லக்கூடிய தொளுகாதவர்களின் பார்வை அந்த ஜன்னல் வழியாக உன் வீட்டினுள் பட்டதனால் உனக்கு வரக்கூடிய செல்வம் இவ்வளவு நாளாக தடை பட்டது என்றார்கள்.
இதன் மூலம் நாம் விளங்கக் கூடிய கருத்து :
தெருவில் செல்லக்கூடிய தொளுகாதவர்களின் பார்வை நம் வீட்டினுள் பட்டாலே நமக்கு வரக்கூடிய செல்வம் தடை படும் என்றால்.தொளுகாமலே வீட்டினுள் இருக்கக்கூடியவர்களின் வீடு எப்படி இருக்கும்.அவர்களுக்கு அல்லாஹ்வின் ரஹ்மத் முழுமையாக எப்படி கிடைக்கும்.அவர்களின் செல்வம் எப்படி பெருகும். எனவே தொழுகை என்ற நல் அமல் செய்யாமல் இருக்க கூடியவர்களின் வீடு கெட்ட வீட்டின் அடையாளமாக இருக்கிறது என்று புரிய முடிகிறது .
No comments:
Post a Comment