Tuesday, 9 June 2020

உள்ளத்தில் இருப்பவன்

ஷாதுலிய்யா
தரீக்காவை தந்த
மாபெரும்
இறைநேசர்
இமாம் 
அபுல் ஹஸன் ஷாதுலி
(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்

ஒருதடவை 
18000 ரூபாய்
மதிப்புள்ள
ஆடை அணிந்து 
மக்களுக்கு
முன் பயான்
செய்தார்கள்! 

அப்போது
இறை நேசர்களை
குறை சொல்கிற
பொறாமை
குணம் கொண்ட
ஒரு மனிதன்
எழுந்து.. 

"உங்களை 
பெரிய சூஃபி
என மக்கள்
சொல்கிறார்கள்
நீங்கள்
இவ்வளவு உயர்தரமான
ஆடை அணிந்து
இருக்கிறீர்களே?"
என கோபமாக
கேட்டான்.

"எனக்காக
உடுத்தவில்லை
உனக்காக தான்
உடுத்தி
இருக்கிறேன்!"
என அமைதியாக
சொன்னார்கள். 

எனக்காகவா?
ஏன்? என
கேட்டான்.

"நான் உடுத்தி
இருக்கும்
இந்த உயர் தரமான
உடையைப்
பார்த்தால்...

நான் வசூலுக்கு
வரவில்லை
என்பதாக.. 
நீ எழுந்து
போகாமல்
உட்கார்ந்து பயான்
கேட்பாய்
அல்லவா?
அதனால் தான்
என்றார்கள்.

மேலும், அவன்
உங்களுக்கு
நிறைய சொத்துக்கள்
இருக்கிறதாமே?
என கிண்டலாக
கேட்டான்.

இமாம் அபுல்ஹஸன் ஷாதுலி நாயகம்
(ரழியல்லாஹு அன்ஹு) அவர்கள்
அழகாக பதில்
சொன்னார்கள்:

"ஆம்..!
குதிரைகள்...
ஒட்டகங்கள்...
நிலங்கள்...
வீடுகள்...
பணங்கள்..
எல்லாம் எனக்கு
இருக்கின்றன! "

"அவைகள் எல்லாம்
அந்த... அந்த...
இடங்களில்
இருக்கின்றன.. 

"என் உள்ளத்தில்
அல்லாஹ் மட்டுமே
இருக்கின்றான்..!"

ஆனால் 
"உன் கல்பில்
எல்லாம்
இருக்கின்றன
அல்லாஹ் மட்டும்
இல்லை..!" 
என சொன்னதும்
வெட்கித் தலை
குனிந்தான்.

No comments:

Post a Comment