Sunday, 26 July 2015

வஹ்ஹாபியம் ஒரு மதமா?

வஹ்ஹாபிய மதத்தை சார்ந்தவர்களே இஸ்லாத்திற்குள் நுழையுங்கள் ..
தற்போது வஹ்ஹாபிகள் முக நூலில் ஒரு வலியுல்லாஹ் தன்னை திருமணம் முடிக்க வந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் இதை நீங்கள் ஜும்ஆ வில் வாசிக்க முடியுமா என்று பதிவு செய்து வழக்கம்போல் அணைத்து இறை நேசர்களையும் கேவலப்படுத்தும் செயலில் இறங்கியுள்ளார்கள் .
முதல் விஷயம் அவர்கள் கொடுக்கும் ஆதாரம் எந்த கிதாப் என்று எங்கேயும் குறிப்பிடப்படவில்லை (ஒரு பேப்பரில் எழுதி அதை மட்டுமே காட்டுகிறார்கள் )
அடுத்ததாக அப்படியே யாரேனும் ஒருவர் செய்திருந்தால் நிச்சயமாக அவர் வலியுல்லாஹ்வாக இருக்க முடியாது .
தெளிவான ஆதாரமில்லாத குப்பைகளை வலியுல்லாஹ் இப்படி செய்தார் அப்படி செய்தார் என்று வழக்கம் போல் இறை நேசர்களை கேவலப்படுத்தும் செயலை அண்ணன் PJ வின் உம்மதினர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள் .
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது . இதை ஜும்ஆ வில் வாசிக்க முடியுமா என்று கேள்வி வேறு ..
ஆதாரமில்லாத செய்தியை ஜும்ஆ வில் வாசிக்க முடியுமா என்று கேட்கும் நீங்கள் நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியும் பெண்கள் விசயத்தில் சிக்கி சின்னாபின்னமாகி கேவலப்பட்டு அசிங்கப்பட்டு நிற்கும் உங்கள் தலைவர்களின் செயல்களை உங்கள் ஜும்ஆ பிரசங்கத்தில் வாசிக்க முடியுமா ??
நோன்பு நாட்களில் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் . இந்த மாதத்தில் நீங்கள் திருந்தா விட்டால் இனி எப்போதும் திருந்த வாய்ப்பு கிடைக்காது .
உங்கள் நபியாகிய PJ வை காபிர் என்று பத்வா கொடுத்ததினால் நீங்கள் செய்வதறியாது திகைத்து அனைவர்களின் மீதும் அவதூறுகளையும் அசிங்கங்களையும் அள்ளி வீசுவது புரிகிறது .
உங்கள் மேல் அக்கறை கொண்டு நீங்களும் முஸ்லிமாக வாழ வேண்டும் என்ற நல்லென்னத்தில் சொல்கிறோம் .
தயவு செய்து முஹம்மது நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களை ஈமான் கொண்டு உண்மையான முஸ்லிமாக வாழ முயற்சி செய்யுங்கள் .
ஒருவரை கேவலப்படுத்த நினைக்கும் யாரையும் அல்லாஹ் இவ்வுலகிலே கேலப்படுத்தாமல் விட்டதில்லை .பிறரின் கண்ணியத்தில் விளையாடதீர்கள் .
ஆதாரமற்ற செய்திகளை பதிவு செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கும் சாபத்திற்கும் மென் மேலும் ஆளாகாதீர்கள் .
உங்கள் இயக்க வெறி உங்கள் கண்களை முற்றிலுமாக மூடி நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றே தெரியாமல் உங்கள் நிலை தடுமாறி கிடக்கிறது அதனால்தான் ஹதீஸில் தவறு என்று சொன்னாலும் அல்லாஹு அக்பர் என்று சொல்கிறீர்கள் . குர் ஆனில் தவறு சொன்னாலும் அல்லாஹு அக்பர் என்று சொல்கிறீர்கள் .
இஸ்லாத்தை விட்டு உங்களை கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் தலைவர்கள் வெளியாக்கிகொண்டிருப்பது உங்களுக்கு புரியவில்லையா ??
தவ்பா செய்து மீளுங்கள் அல்லாஹ் போதுமானவன் ..

No comments:

Post a Comment