Sunday, 26 July 2015

உம்மி நூர் நபி

ஜிப்ரீல் அலைஹிவசள்ளம் முதலாவதாக கண்மணி நாயகத்துக்கு
"ஒதுக உம இறைவன் திருப்பெயரால் "என்ற வசனமான "இக்ரவு பிஸ்மி ரப்பிக்க " என்று சொன்னார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும் !
அதற்க்கு கண்மணி ரஸூலுல்லாஹ் "ஓத தெரியாது "
என்று சொன்னதாக விளக்கம் எழுதியும் வைத்துள்ளார்கள் !
எழுத ..படிக்க ..வாசிக்க ..தெரியாத நபி என்று சொல்கிறார்களே ..
ஈமான் கொண்ட முஸ்லிம்கள் எல்லாம் ..?
ஒரு படிப்பறிவில்லாத மனிதரிடம் எப்படி எல்லா விளக்கமும் பெற்ற வானவர் கோன் ஜிப்ரீல் வந்து ஓதுங்கள் ..என சொல்வார்கள் ?
அவ்வளவு பெரிய மடையரா ஜிப்ரீல் ..?
யோசித்தீர்களா »?
உண்மையில் என்ன சொன்னார்கள் தெரியுமா ..?
மா அனபிக் காரிஇன் ...என்றுதான் சொன்னார்கள் ..?
இந்த வார்த்தைக்கு அர்த்தம் —--
"நான் ஓதுவதற்கு தயாராக இல்லை "
என்பதுதான் !
அரபியை சரியாக விளங்காமல் ஓத தெரியாது என்று சொன்னதாக எழுதியுள்ளார்கள் !
எனக்கு ஓத தெரியாது ..என்பதற்கு அரபியில் " லா அத்ரில் கிரா அத்த " என்று தானே வரும் ..?
அல்லது ....."லா அஹ்லமுள் கிரா அத்த" ...என்று தான் சொல்லணும் ..?
அப்படி சொல்லவில்லையே..
ஓதுவதற்கு நான் தயாராக இல்லை "..என்று தான் சொன்னார்கள் !
உம்மி நபி உம்மி நபி என்று சொல்லி அதற்கும் ஒரு மாற்று விளக்கம் கொண்டதனால் தான் ..!
உம்முல்குரா என்பது பட்டணங்களின் தாய் என்று பெயர் பெற்ற மக்காவிற்கு சொல்லும் பெயர் !
அங்கு பிறந்தநபி என்று சுருக்கி ..யா மக்கி ..யா மதனி ....என்பதுபோல் தான் " உம்மி " 'என்பது !
எந்த ஆசிரியரிடமும் கற்க தேவை இல்லாத நபி ..
எந்த ஒரு பள்ளிகூடதிலும் படிக்க தேவை இல்லாத நபி ..
என்று வல்லவனே சொல்லி விட்ட பொழுது ...
அவர்களுக்கு எப்படி எழுத படிக்க தெரியாமல் இருக்கும் ?
யோசித்தீர்களா ?
கண்மணி ரஸூலுல்லாஹ் எழுதிய கையால் எழுதிய கடிதம் இராக்கில் இன்றும் உள்ளது !
ஹிர்க்கள் மன்னனுக்கு எழுதிய கடிதத்திற்கு புஹாரியில் ஆதாரம் உள்ளது !
அதை ஹிர்க்கள் ஏற்றுக்கொள்ளாமல் திருப்பி அனுப்பி .".ரஸூலுல்லாஹ்"" என்ற இடத்தில முஹம்மத் இப்னு அப்துல்லா ..என்று போட்டு வந்தால்தான் ஏற்றுக்கொள்வேன் ..என்று சொல்ல ..
அதை அளிரளியல்லாஹு அவர்களிடம் கொடுத்து அழித்து எழுத சொல்ல ...அல்லாஹ்வின் சிங்கம் அலிபுலியோ .....கண்மணியின் பெயரை அளிக்க என் கையால் மாட்டேன் என பயந்து ஒதுங்க ..
கண்மணி நாயகமே வாங்கி அழித்து திருத்தி எழுதி கொடுத்தார்கள் என்றால் ...
எழுத படிக்க தெரியாதவர்கள் எப்படி அந்த வேலையை செய்தார்கள் »?
எழுத படிக்க தெரியாதவர்களை தரக்குறைவாக சமூகம் கணிக்கிறது !
ஒரு பெண் கொடுக்க கூட மாட்டார்கள் திருமணம் செய்ய ..!
எழுத ..வாசிக்க தெரியாத ஒருவரை அல்லாஹ் நபியாக அனுப்புவானா »?
எழுதவும் தெரியும் வாசிக்கவும் தெரியும் ...கண்மணி நாயகத்துக்கு ...ஆனால் செய்யவில்லை !
இக்கட்டான ..சமயங்களில் தாங்கள் மறைத்து வைத்திருந்த ..தங்களிலே ..ஒளித்து வைத்திருந்த அந்த கல்வியை வெளிப்படுத்தி காட்டியுள்ளார்கள் !
இனிமேல் உம்மி நபி ..என்று சொல்லும்போது மிகவும் விழிப்புடன் உண்மையை உணர்ந்து சொல்லுங்கள் !
ஒரு கட்சிக்கு தலைவனாக வைக்க கூட யோசிப்போம் படிப்பறிவு எழுத்தறிவு இல்லாதவர்களை .>!
அகில உலகத்துக்கும் தலைவராக வந்த கண்மணி ரஸூலுல்லாஹ் அவர்களுக்கு எப்படி இந்த அறிவு இல்லாமல் இருக்க முடியும் ?
ஆகவே
ஒரு தாளில் எழுதி கொடுத்து இதை வாசியுங்கள் ..என்று சொன்னார்களா ..ஜிப்ரீல் அலைஹிவசலல்ம் ?
இல்லை !
ஓத மாட்டேன் என்றோ ஓத தெரியாது ..என்றோ சொல்லவில்லை !
ஹதீஸில் "ஓதுவதற்கு தயாராக இல்லை " என்று தான் வருகிறது !
பின் கட்டியணைத்து சொன்னார்கள்
இரண்டாவதும் தழுவி ஆலிங்கனம் செய்தார்கள் ...மறுபடியும் ஓதுங்கள் ..ஓத தயாரில்லை ..
மறுபடியும் கட்டியணைத்து சொன்னார்கள் !
இதற்க்கு வெளிநீச்சல் அடிப்[பவர்கள் சாதாரண மக்கள் சொல்கிறார்கள்
"ரஸூலுல்லாஹ் வுக்கு ஓத தெரியாமல் இருந்தது !
அதனால்தான் மூன்று முறை திருப்பி திருப்பி சொன்னார்கள் !
உடனே ஜிப்ரீல் கட்டிதளுவியதால் தன்னுடைய சக்தியை பாய்ச்சினார்கள் ...ரஸூலுல்லாஹ் ஓதினார்கள் ...
அது ஜிப்ரீல் தன்னுடைய சக்தியை ரஸூலுல்லாஹ் வுக்கு செலுத்தினார்கள் ..பின்னர்தான் ரஸூலுல்லாஹ் வுக்கு ஓதும் சக்தி வந்தது ..என்று !
என்றார்கள் ..!
அப்படியானால் ...ரஸூலுல்லாஹ் வை விட ஜிப்ரீல் சக்தி கூடின ஆள் என்று ஆகிவிடுமே ?
ஜிப்ரீல் அலைஹிவசள்ளம் ரஸூலுல்லாஹ் அவர்களுக்கு ஹித்மத் செய்யும் "ஹாதீம் " தானே ?
"பணியாள்" தானே ?
ஒரு பணியாளுக்கு ஒரு வேலையாளுக்கு ..தன் எஜமானை விட பவர் ஜாஸ்தியா ..?
மதிப்பும் அறிவும் ஜாஸ்தியா ?
"வ ஜிப்ரீலு ஹாதிமுஹு " என்று குர்ஆன் இல் சொல்கிறானே ரப்பு !
ஒரு ஹாதீம் இடமிருந்து சக்தியை பெற்றுக்கொண்டுதான் கண்மணி நாயகத்துக்கு பவர் வந்தது என்று சொல்வது ..
அகில உலக ரஹ்மத்தில் லில் ஆலமீனுக்கு தரம் குறைவாக அல்லவா போய்விடும் ..?
ஆகவே ..இனியாவது இதை உணர்ந்ந்து கொள்ளனும் ஒவ்வொரு முஸ்லிமும் !

No comments:

Post a Comment